சதாம் உசேன் காரை பயன்படுத்தும் இந்தியர்.. அவரு யாரு? அந்த கார எப்படி இந்தியா கொண்டு வந்தாங்க தெரியுமா?..
சதாம் உசேனுக்கு சொந்தமான கார் இந்தியாவிலா என நீங்கள் கேட்கலாம். ஆமாங்க, உங்கள் காரில் விழுந்தது சரிதான் சதாம் உசேனுக்கு சொந்தமான காரை இந்தியர் ஒருவர் தனக்குச் சொந்தமாக்கி இருக்கின்றார். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனரும் மற்றும் தலையங்க இயக்குனருமான விவேக் கோயன்காவே இந்தியாவில் சதாம் உசேனுக்கு சொந்தமான காரை தனக்கு சொந்தமாக்கி இருக்கின்றார்.
இந்த காரை அவர் எப்படி தன்னுடையதாக்கினார் என்பது பற்றிய சுவாரஷ்யமான தகவலே தற்போது தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் ஓர் யுட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் வாயிலாகவே இந்த விபரம் வெளி உலகிற்கு தெரிய வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

Source: Storyboard18 ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஈராக்கை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி செய்தவர் சதாம் உசேன். இவருக்கு சொந்தமான கார்களில் சிலவற்றையே தற்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனரும் மற்றும் தலையங்க இயக்குனருமான விவேக் கோயன்கா, தன்னுடையதாக்கி இந்தியாவில் வைத்து பயன்படுத்தி வருகின்றார்.
சதாம் உசேனின் ஆட்சி கவிழ்ந்தபோது ஹூசைனுக்கு சொந்தமான பொருட்கள் பல அவருடைய இல்லத்தில் இருந்து களவாடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டன. அந்தவகையில் சதாம் உசேனுக்கு சொந்தமான கார்கள் சிலவும் திருடப்பட்டு துபாய் போன்ற உலக நாடுகளில் விற்கப்பட்டன. ஃபெர்ராரி, ரோல்ஸ் ராய்ஸ் போன்ற மிகவும் ஆடம்பரம், உயர் வகை மற்றும் அரிய வகை கார்கள் என பலதரப்பட்ட கார்கள் களவாடப்பட்டு விற்கப்பட்டன.
இதில், இரண்டு பழங்கால கார்களும் அடங்கும். இதையே விவேக் கோயன்கா தனக்கு சொந்தமாக்கி இருக்கின்றார். அரசாங்கத்திற்கே நேரடியாக கடிதம் எழுதி அவருக்கான கார்களைக் கொண்டு வருவதற்கான அனுமதியைப் பெற்று பின்னர் அதனை இந்தியாவில் இறக்குமதி செய்திருக்கின்றார். சதாம் உசேனின் பல ஆடம்பர கார்கள் விற்பனைக்குக் கிடைத்தபோதிலும், விவேக் கோயன்கா, ஸ்டட்பேகர் கிரான் டூரிஸ்மோ (Studebaker Gran Tursimo) காரையே இந்தியாவிற்கு தட்டி தூக்கி வந்திருக்கின்றார்.
மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்ட விண்டேஜ் கார் மாடல் இதுவாகும். இதுபோன்று ஏகப்பட்ட அரிய வகை விண்டேஜ் கார்களை விவேக் கோயன்கா பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால்தான் இந்தியாவின் மிக சிறந்த விண்டேஜ் கார் சேகரிப்பாளர்கள் பட்டியலில் விவேக் கோயன்காவும் முன்னணியில் உள்ளார்.
இவரிடத்தில் 1963 ஃபியட், 1935 பென்ட்லீ பார்க் வார்ட் கன்வர்டபிள், 1971 ஜாகுவார் இ டைப் வி12 கன்வர்டபிள், குயிர்கி 1977 சிட்ரோன் டிஎஸ் என ஏகப்பட்ட கார்களை அவர் வைத்திருக்கின்றார். இந்த கார்கள் அனைத்தும் மிக அழகானவை மற்றும் மனதைப் பறிக்கும் லுக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.
இவற்றிலேயே தனித்துவமான தோற்றத்தில் ஸ்டட்பேக்கர் கிரான் டூரிஸ்மோ உள்ளது. இதில், 1963 ஃபியட், தன்னுடைய அம்மாவுடையது என விவேக் கோயன்கா கூறியிருக்கின்றார். இந்த காரிலேயே அவர் கார் ஓட்டவும் பழகியிருக்கின்றார். அவருடைய 8 வயதிலேயே காரை ஓட்ட அவர் கற்றுக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த கார்கள் மட்டுமின்றி அவரிடத்தில் விண்டேஜ் லேண்ட் ரோவர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும், டெல்லி ஸ்டேட் டிரேடிங் கம்பெனிக்கு சொந்தமான ரேஞ்ஜ் ரோவர் காரையும் அவர் தன் வசம் வைத்திருக்கின்றார். இது பிரிட்டிஷ் மார்க்கெட்டின் முதல் கார் மாடல் ஆகும். இதுதவிர, கார்டியர் கான்கோர்ஸ் போன்ற மிக மிக அரிய வகை காருக்கும் விவேக் கோயன்கா சொந்தக்காரராக இருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விவேக் கோயன்காவைப் போலவே இன்னும் பலர் அரிய மற்றும் உலக பெருந்தலைவர்கள் பயன்படுத்தி வந்த கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. பரோடா அரச குடும்பத்தின் வாரிசான பிரதாப்சிங் கெய்க்வாட் உடனான பேட்டியிலேயே விவேக் கோயன்காவின் சதான் உசேனுக்கு சொந்தமான கார் பற்றிய விபரம் வெளியாகி இருக்கின்றது. மேலும், பக்கி கானா என்ற யூடியூப் சேனலில் அந்த கார் தற்போது காட்சிப்படுத்தவும் செய்யப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications