நீங்க கெஞ்சி கதறினாலும் வேறு எந்த பிராண்டும் அதன் ஆரம்பநிலை கார்களில் இந்த 7அம்சங்களை தராது.. ஆனா டாடா தரும்!!
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அறியப்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்களைக் கூறலாம். மிக முக்கியமாக, இந்த நிறுவனம் அதன் ஆரம்ப நிலை மலிவு விலை கார் மாடல்களையே அதிக பாதுகாப்பானதாக உருவாக்கி இருப்பது ஒன்றாக இருக்கின்றது.
உதாரணமாக, டியாகோ, டிகோர் ஆகிய கார் மாடல்களைக் கூறலாம். பாதுகாப்பு விஷயத்தில் இவை இரண்டும் 5க்கு நான்கு நட்சத்திர ரேட்டிங்களைப் பெற்றிருக்கின்றன. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த தரமான ரேட்டிங்கை அவை பெற்றன என்பது குறிப்பிடத்தகுந்துத. டியாகோ ரூ. 5.50 லட்சத்திற்கும் குறைவான விலையிலும், டிகோர் ரூ. 6.30 லட்சத்திற்கும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். டாடா அதன் கார்களை அதிக பாதுகாப்பானதாக மட்டுமல்ல, அதிக தொழில்நுட்ப வசதிகளை தாங்கியதாகவும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, சில பிராண்டுகள் அதன் உயர்நிலை அல்லது அதிக விலைக் கொண்ட கார் மாடல்களில் மட்டும் வழங்கக் கூடிய அம்சங்களை தன்னுடைய ஆரம்ப நிலை கார் மாடல்களிலேயே டாடா வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், டாடாவின் ஆரம்ப நிலை தயாரிப்புகளிலேயே கிடைக்கும் சில முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க அவை என்ன என்பது பற்றிய தகவலைக் காணலாம். இந்த அம்சங்களை வேறு எந்த நிறுவனமும் அதன் மலிவு விலை அல்லது ஆரம்ப நிலை கார் மாடல்களில் வழங்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எக்ஸ்பிரஸ் கூலிங் (Xpress Cooling): விரைந்து குளிர்விக்கும் ஏசி சிஸ்டம். மிக மிக விலையுயர்ந்த கார் மாடல்களிலேயே வாகன உற்பத்தியாளர்கள் இந்த அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த அம்சம் மற்ற வழக்கமான ஏசி சிஸ்டத்தைவிட அதிக வேகத்தில் செயல்பட்டு கேபினை குளிர்விக்கும். கோடை போன்ற அதிக வெயில் காலத்தில் உடனடியாக காரை எடுத்துச் செல்ல இந்த அம்சம் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
முழு மேப்பையும் காண்பிக்கும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்: டாடா நிறுவனத்தின் ஆரம்ப நிலை கார் மாடலிலேயே கிடைக்கக் கூடிய முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்கள் முழு மேப்பையும் காண்பிக்கும். மற்ற நிறுவனத்தின் ஆரம்ப நிலை கார் மாடல்களில் இந்த அம்சத்தைப் பெற முடியாது. இதனை டாடா மோட்டார்ஸ் அதன் கஸ்டமைசேஷன் அம்சத்தின் வாயிலாகவே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

நெக்ஸான், நெக்ஸான்.இவி மற்றும் பஞ்ச் இவி ஆகிய கார் மாடல்களில் வழங்கப்படும் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் இந்த அம்சத்தை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கார் மாடல்களின் போட்டி கார் மாடல்களில் இந்த அம்சத்தைக் காண முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, அதிக விலைக் கொண்ட கார் மாடல்களிலேயே டாடாவின் போட்டி நிறுவனங்கள் இந்த அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
வெண்டிலேட் (Ventilated) வசதிக் கொண்ட பின் பக்க இருக்கைகள்: பெரும்பாலும் இந்த அம்சத்தை காரின் முன் பக்க இருக்கைகளிலேயே கார் உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், டாடா மோட்டார்ஸோ இந்த அம்சத்தை தன்னுடைய தயாரிப்பு (கார் மாடல்)களில் பின்பக்கத்திலும் வழங்கிக் கொண்டிருக்கின்றது.

டாடா அதன் சஃபாரி கார் மாடலிலேயே இந்த அம்சத்தை வழங்குகின்றது. இதே அம்சத்தை நீங்கள் வேறு பிராண்டில் பெற வேண்டும் என்றால் பென்ஸ் அல்லது லேண்ட் ரோவர் நிறுவனத்தின் தயாரிப்பையே நீங்கள் வாங்க வேண்டும். இதற்காக நீங்கள் ரூ. 1.5 கோடி அல்லது 2 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டி இருக்கும்.
கியர்பாக்ஸ் மற்றும் ஷிஃப்ட்-பை-ஒயர் (Gearbox & Shift-by- wire): இந்த அம்சத்தை டாடா நிறுவனம் இ-ஷிஃப்டர் என குறிப்பிடுகின்றது. ரேஞ்ஜ் ரோவர் கார்களில் காணப்படுவதைப் போல மிகவும் சுலபமான கியர் ஷிஃப்டிங் அனுபவத்தை டாடா கார்கள் வழங்க இந்த அம்சமே காரணமாக இருக்கின்றது.

டாடா அதன் சஃபாரி, ஹாரியார், நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார் மாடல்களிலேயே இந்த அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. வேறு எந்த பட்ஜெட் கார் உற்பத்தியாளரும் இந்த அம்சத்தை தன்னுடைய தயாரிப்பில் வழங்கவில்லை. லக்சூரி கார் மாடல்களில் மட்டுமே இந்த வசதியைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
வரவேற்கும் மற்றும் குட்-பை (Welcome & Goodbye) சொல்லும் வசதி: டாடா மோட்டார்ஸ் அதன் புதிய மற்றும் அப்டேட் செய்யப்பட்ட கார் மாடல்களில் இந்த அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. முன் மற்றும் பின் பக்க எல்இடி பகல் நேர லைட்டுகளிலேயே இந்த வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் காரை லாக் மற்றும் அன்லாக் செய்யும் போது ஓர் நண்பன் உங்களிடம் இருந்து விடைபெறுவதும், வரவேற்பதுமான செயல்களை இந்த லைட்டுகள் செய்யும். இந்த அம்சத்தையும் கார் உற்பத்தியாளர்கள் தங்களுடைய மிக மிக உயரிய விலைக் கொண்ட கார்களிலேயே வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
19 அங்குல அலாய் வீல்கள்: இந்த ஆப்ஷனும் விலை உயர்ந்த கார் மாடல்களில் மட்டுமே வாகன உற்பத்தியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், டாடாவோ தன்னுடைய சஃபாரி மற்றும் ஹாரியர் கார் மாடல்களுக்கு இந்த வசதியை வழங்கிக் கொண்டிருக்கின்றது. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் மாடலில்கூட 18 அங்குல அலாய் வீலே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
90 டிகிரி திறக்கும் கதவுகள்: பயணிகள் சுலபமாக ஏறி-இறங்குவதற்காக வழங்கக் கூடிய ஓர் அம்சமாக இது பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, வயதானவர்கள் சுலபமாக ஏறி இறங்கிக் கொள்ள இந்த அம்சம் பெரும் உதவியாக இருக்கின்றது. இத்தகைய அம்சத்தை டாடா நிறுவனம் அதன் அல்ட்ராஸ் மற்றும் பஞ்ச் ஆகிய கார் மாடலிலேயே வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் அதிக பாதுகாப்பான கார்களை மட்டுமல்ல அதிகம் தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கிய கார்களையும் தயாரித்துக் கொண்டிருக்கின்றன என்பதற்கு சான்றாகவே மேலே பார்த்த கார் மாடல்கள் இருக்கின்றன. இந்த கார்கள் மாடல்கள் அனைத்தும் அனைவருக்குமான பட்ஜெட் விலைக் கொண்டவை என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









