குடும்பத்துடன் பயணிக்க மக்கள் விரும்பும் 10 கார்கள் இது தான்! லிஸ்ட்ல கடைசி கார் தான் பெஸ்ட்!
மார்ச் மாதம் துவங்கியுள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த பிப்ரவரி மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளன. இதன் படி தற்போது நமக்கு கடந்த பிப்ரவரி மாதம் அதிக அளவு விற்பனையான 7 சீட்டர் கொண்ட கார்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த டாப் 10 பட்டியலை விரிவாக காணலாம் வாருங்கள்.
ரெனால்ட் டிரைபர்: ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த கார் மொத்தம் 2205 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மொத்தம் 3,056 கார்கள் விற்பனையாக இருந்தது, தற்போது 28% விற்பனை சரிவை சந்தித்துள்ளது, இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் பெரிய அளவில் அப்டேட் இல்லாதது தான்.

டாடா சஃபாரி: டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது அந்த பிப்ரவரி மாதம் 2648 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1252 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 112 சதவீதம் இந்த விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது. டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் அப்டேட் ஆனது தான் இந்த விற்பனை வளர்ச்சிக்கு காரணம்.
டொயோட்டா ஃபார்ச்சூனர்: இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 3,395 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,426 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது 1 சதவீதம் மட்டும் விற்பனை விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. கிட்டத்தட்ட பெரிய அளவில் விற்பனை மாற்றங்கள் எதுவும் இல்லை என கூறலாம்.

மாருதி சுஸூகி எக்ஸ்எல் 6: மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் சிக்ஸ் கார் தான் இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 4,093 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,108 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது 94 சதவீதம் விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது.
கியா கேரன்ஸ்: பட்டியலில் 6வது இடத்தில் கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 4832 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,248 காரர்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 23 சதவீதம் விற்பனை என்பது வீழ்ச்சி அடைந்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700: மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 6546 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,505 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது 45சதவீதம் விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த காருக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. காத்திருப்பு காலம் அதிகமாக உள்ளது. உற்பத்தியை அதிகப்படுத்தினால் விற்பனை அதிகமாகும்.
டொயோட்டா இன்னோவா: பட்டியலில் நான்காவது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 8,481 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,169 காரர்கள் மட்டுமே விற்பனயாகி இருந்தது. தற்போது 23 சதவீதம் விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு வெளியானது தான்.

மஹிந்திரா பொலிரோ: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 10,113 கார்கள் விற்பனை ஆகிவிட்டன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3782 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது மூன்று சதவீதம் என்பது விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. தொடர்ந்து சீரான விற்பனையில் இந்த கார் இருக்கிறது.
மகேந்திரா ஸ்கார்பியோ: பட்டியலில் இரண்டாவது இடத்தில் மகேந்திரா ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 15,051 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6950 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 117 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டு ஸ்கார்பியோ என் என்ற பெயரில் புதிய கார் அறிமுகமானது முக்கியமான காரணம்.
மாருதி சுஸூகி எர்டிகா: நீங்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முதல் இடத்த்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் 15,519 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,472 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 140 சதவீதம் விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களை தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதற்கு தற்போது மார்க்கெட்டில் 7 சீட்டர் கொண்ட குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது, மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த கார்களின் விற்பனை அதிகமாகும்.


Click it and Unblock the Notifications









