பெரிய குடும்பமா இருந்தாலும் தாங்கும் 7 சீட்டர் கார்கள் இவ்வளவு சேல்ஸ் ஆகுதா? நம்பர் 1 இடத்தில் என்ன கார்?

இந்தியாவில் சமீப காலமாக7 சீட்டர் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார் என்பதால் பலர் இதை வாங்கி வருகிறார்கள். இந்த ஒரு காரை வாங்கினால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இந்த காரில் ஏற்றி செல்லலாம் என்பதால் இந்த ரக கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இப்படியாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான டாப் 10 7-சீட்டர் கார்கள் குறித்த விவரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

குடும்பத்துடன் பயணிக்கும் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. தற்போது இந்த அடுத்த இடத்திற்கு சென்று குறிப்பிட்ட சில கார்களை மக்கள் அதிகம் விரும்பி வாங்கி வருகின்றனர். இப்படியாக மாருதி நிறுவனத்தின் அதிக எண்ணிக்கையில் விற்பனையான 7 சீட்டர் காராக இருக்கிறது. மற்ற 9 கார்கள் என்னென்ன? மொத்தம் இந்த கார்கள் எல்லாம் எவ்வளவு விற்பனையாகியுள்ளது? என்ற விபரங்களை விரிவாக பார்ப்போம்.

Top 10 7-Seater car June 2024

டாடா சஃபாரி: டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 1,394 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 1,663 கார்கள் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 16 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ரெனால்ட் டிரைபர்: ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் இந்த பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 1800 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2257 கார்கள் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது, தற்போது 20 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Top 10 7-Seater car June 2024

டொயோட்டா ஃபார்ச்சூனர்: டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் காரை பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 2675 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 3086 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 13 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்டியலில் இந்த கார் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி எக்ஸ்எல் 6: மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் 6 காரை பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 3323 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2856 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 16 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்டியலில் வெகுசில கார்கள் மட்டுமே விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளன. அதில் இதுவும் ஒன்று. இந்த பட்டியலில் இந்த கார் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

Top 10 7-Seater car June 2024

கியா கேரன்ஸ்: கியா நிறுவனத்தின் கேரன்ஸ் காரை பொருத்தவரை கடந்த ஜூன் மாதம் 5154 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8,047 கார்கள் விற்பனையாகியுள்ளது. தற்போது 36 சதவீதம் அளவிற்கு விற்பனை வீழ்ச்சியை இந்த கார் சந்தித்துள்ளது. இந்த பட்டியலிலேயே மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்த கார் இதுதான். இந்த பட்டியலில் இந்த கார் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 700: மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 காரை பொருத்தவரை இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. அந்த ஜூன் மாதம் 1928 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 5391 கார்கள் விற்பனையாகியுள்ளன. விற்பனை என்பது 10 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

மஹிந்திரா பொலிரோ: மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த காரான பொலிரோ கார் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 7365 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8686 கார்கள் விற்பனையாகி இருந்தது விற்பனை 15 சதவீதம் அளவுக்கு சரிவடைந்துள்ளது.

டொயோட்டா இன்னோவா: இந்த பட்டியலில் உள்ள ஒரே டொயோட்டா நிறுவன கார் இதுதான். பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்த இன்னோவா கார் பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 1412 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8361 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 13 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ: இந்த பட்டியலில் வரும் மூன்றாவது நிறுவனத்தின் கார் இது மஹிந்திரா ஸ்கார்பியோ காரை பொறுத்தவரை கடந்த ஜூன் மாதம் 12,137 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8,248 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது இதன் விற்பனை 42 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் இந்த கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மாருதி எர்டிகா: மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 15,902 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 8,422 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது. தற்போது 89 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பதிலேயே மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியை பெற்ற காரின் விற்பனை என்றால் இதுதான். கிட்டத்தட்ட டபுள் மடங்கு வளர்ச்சியை பெற்றுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பட்டியலில் ஏகப்பட்ட கார்கள் இருந்தாலும் பல கார்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. வெகு சில கார்கள் மட்டுமே விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளன. இந்த கார்கள் எல்லாம் மக்களுக்கு ஓரளவு பிடித்தமான கார்களாக இருக்கின்றன. குறிப்பாக எர்டிகா காரின் விலை குறைவாக இருப்பதால் அதன் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. குறைவான விலையில் கார்கள் விற்பனைக்கு வரும் பட்சத்தில் அதன் விற்பனை அதிகமாக வாய்ப்பு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, July 15, 2024, 10:05 [IST]
English summary
Top 10 7 seaters june 2024 know full list
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X