இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் கார் இது தான்! மாருதி எல்லாம் ஓரமா போ!
இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது தங்கள் வாகனங்கள் கடந்த ஜூன் மாதம் எவ்வளவு விற்பனையாகியுள்ளது என்ற விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு வாகனமும் எவ்வளவு எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது என்ற தகவல் நமக்கு கிடைத்துள்ளது நிலையில், இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகி உள்ள டாப் 10 கார்களின் பட்டியல் நமக்கு கிடைத்துள்ளது. அந்த பட்டியலை விரிவாக கீழே காணலாம்.
இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக விற்பனையாகும் கார்களில் 50% எஸ்யூவிகள் கார்கள் தான் விற்பனையாகின்றன. இது மட்டுமல்ல இந்தியாவில் விற்பனையான டாப் 10 கார்கள் பட்டியலில் அதிகமாக எஸ்யூவி கார்கள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக மாருதி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்கள் தான் இருந்தன. இன்று மாருதி நிறுவனத்திற்கு போட்டியிடும் வகையில் டாடா நிறுவனத்தின் கார் விற்பனையாகி வருகிறது.

டாடா நெக்ஸான்: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் கடந்த ஜூன் மாதம் மொத்தம் 12,066 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இந்த கார் தான் இருக்கிறது. இந்த கார் அறிமுகமான முதல் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்த காரின் விற்பனை தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பதால் பத்தாவது இடத்தை இந்த கார் பிடித்துள்ளது.
மஹிந்திரா ஸ்கார்பியோ: மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய இரண்டு கார்களும் சேர்த்து மொத்தம் 12,307 கார்கள் கடந்த ஜூன் மாதம் விற்பனையாகி உள்ளன. மஹிந்திரா நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இந்த கார் தான் இருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரே மஹிந்திரா கார் என்றால் அது இதுதான். இந்த கார் 9வது இடத்தில் இருக்கிறது.

மாருதி பிரெஸ்ஸா: மாருதி நிறுவனம் எஸ்யூவி கார் செக்மெண்டில் அறிமுகப்படுத்திய பிரெஸ்ஸா கார் மக்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. தற்போதும் இந்த காரின் விற்பனை சிறப்பாக இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 13,172 கார்கள் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் இந்த கார் டாப் 10 கார் பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது.
மாருதி டிசையர்: இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை சரிவை சந்தித்து வந்தாலும், மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. இந்த கார் கடந்த ஜூன் மாதம் மட்டும் 13,421 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதனால் இந்த கார் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் விரைவில் அப்டேட் செய்யப்பட்டு அறிமுகமாக போகிறது குறிப்பிடத்தக்கது.

மாருதி வேகன்ஆர்: மாருதி நிறுவனத்தில் இந்த வேகன்ஆர் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருந்தது. பல மாதங்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகி வரும் காராக இந்த கார் தான் இருந்தது. கடந்த ஜூன் மாதம் மட்டும் இந்த கார் 13,790 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதன் மூலம் இந்த கார் டாப் 10 கார் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
மாருதி பலேனோ: இன்று மிடில் கிளாஸ் மக்கள் மத்தியில் பலேனோ காருக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இதனால் மாருதி நிறுவனம் இதில் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 14,895 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் இந்த கார் டாப் 10 பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
மாருதி எர்டிகா: குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார்களின் விற்பனை சமீபாகாலமாக அதிகரித்து வரும் நிலையில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் குறைந்த விலையில் உள்ள எம்பிவி கார் என்பதால் இந்த காரை பலர் விரும்பி வாங்கி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் மட்டும் 15,902 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் இந்த கார் டாப் 10 கார் பட்டியலில் நாலாவது இடத்தை பிடித்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா: ஹுண்டாய் நிறுவனத்தில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக கிரெக்டா கார் இருக்கிறது. இந்த கார் தனது ஜூன் மாதம் 16,293 கார்கள் விற்பனையாகி இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் மூன்றாவது காராக இருக்கிறது. இந்த டாப் 10 பட்டியலில் இருக்கும் ஒரே ஹூண்டாய் நிறுவனத்தின் கார் இது மட்டும்தான்.
மாருதி ஸ்விஃப்ட்: மாருதி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் காரை கடந்த மே மாதம் தான் அப்டேட் செய்து வெளியிட்டது. இதனால் இந்த காரின் விற்பனை கடந்த ஜூன் மாதம் அதிகமாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 16,422 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதனால் இந்த கார் டாப் 10 பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
டாடா பஞ்ச்: டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார அறிமுகமானது முதல் மார்க்கெட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் தொடர்ந்து சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 18,238 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதனால் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாக வரும் காராக இந்த டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு காலத்தில் குறைந்த விலை கார்கள் தான் அதிகமாக விற்பனையாகும் என்ற பேச்சு இருந்து வந்தது. ஆனால் இன்று குறைந்த விலை கார்கள் டாப்10 கார் பட்டியலிலேயே இல்லாத சூழ்நிலை தான் ஏற்பட்டுள்ளது. இந்திய மக்கள் பாதுகாப்பான கார்களை விரும்ப துவங்கி விட்டார்கள் என்பது தெரிகிறது. இந்த டாப்10 கார் பட்டியலில் எஸ்யூவி கார்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருவதை நாம் கவனிக்க தவறக் கூடாது.


Click it and Unblock the Notifications









