இந்த கார் ராக்கெட் வேகத்துல விக்குது! 120 நாள்ல 72,466 பேர் இதை வாங்கிட்டாங்க!
கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வெளியிட்டுள்ளன. இதன் படி இந்த நிதியாண்டின் முதல் 4 மாதத்திற்கான விற்பனை விபரங்கள் முழுமையாக வெளியாகி உள்ள நிலையில், மீண்டும் எஸ்யூவி கார்கள் தான் பயணிகள் வாகன செக்மெண்டில் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
எஸ்ஐஏஎம் கடந்த 14ம் தேதி வெளியிட்ட அறிக்கையின் படி மொத்தம் 13.6 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளன. இதில் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களின் விற்பனை மட்டும் 8,68,132 ஆக இருக்கிறது. ஒட்டுமொத்த விற்பனை என்பது கடந்த ஆண்டு இதே காலகட்ட விற்பனையை விட 2 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் மட்டும் 63 சதவீத விற்பனையை பெற்றுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரை விற்பனையான கார்களின் விபரங்களை பார்க்கும்போது பத்தாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் 3எக்ஸ்ஓ என்ற கார் தான் இருக்கிறது. இந்த நான்கு மாதத்தில் மொத்தம் 32,501 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மஹிந்திரா எக்ஸ்யூவி 300 கார் 19,814 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. தற்போது 64 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை அதிகரித்துள்ளது.
9வது இடத்தில் கியா சோனட் கார் இருக்கிறது. மொத்தம் 34,609 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 29,962 கார்கள் மட்டுமே விற்பனையாகியிருந்தது.16 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 8வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் கிராண்டு விட்டாரா கார் இருக்கிறது. மொத்தம் 36,463 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 36,154 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது ஒரு சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

ஏழாவது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 37,177 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 42,223 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 12 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை சரீவு ஏற்பட்டுள்ளது.
6 வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. மொத்தம் 47,580 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு இதே கால கட்டத்தில் 39,858 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 19 சதவீத அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.

5வது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 48,593 காரர்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 55,601 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 13 சதவீதம் அளவுக்கு விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
4 வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 53,068 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 38,105 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 39 சதவீதம் அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. இது நல்ல வளர்ச்சியாகும்.
மூன்றாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் மாருதி பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 59,147 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டில் இதே காலகட்டத்தில் 52,355 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது 13% அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது.
ஹூண்டாய் கிரெட்டா கார் தான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 63,752 கார்கள் விற்பனையாகி உள்ளன. 2023 ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 57,144 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது 12 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது.
முதல் இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான் இருக்கிறது. கடந்த நான்கு மாதத்தில் மொத்தம் 72,466 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 45,067 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது தற்போது 61% அளவிற்கு இதன் விற்பனை அதிகரித்துள்ளது. மக்கள் மத்தியில் பஞ்ச் காருக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருக்கிறது.
எஸ்யூவிலேயே மிட்-சைஸ் காரை விட காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதே நேரம் பட்ஜெட் குறைவான கார்களை வாங்க வேண்டும் என்பதால் மக்கள் இந்த ரக கார்களை விரும்பி வாங்குகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த நான்கு மாதமாக இந்தியாவில் கார் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. ஒவ்வொரு வாகனமும் தொடர்ந்து விற்பனை அதிகரித்து வருகிறது. முக்கியமாக எஸ்யூவி செக்மென்ட் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியாவில் சிறிய ரக கார்கள் தான் அதிகம் விற்பனையாகும் என்ற நிலை தற்போது மாறி எஸ்யூவி ரக கார்கள் மீது மக்கள் மோகம் கொண்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications









