மாருதி லிஸ்ட்டுலையே இல்ல.. உலகின் டாப்10 கார் கம்பெனிகளின் பட்டியல்! லிஸ்ட்ல இந்திய பிராண்ட் ஏதாச்சும் இருக்கா

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுஸுகி (Maruti Suzuki) என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், உலக அளவில் எந்த நிறுவனம் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

குறிப்பாக, இந்தியாவின் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் மாருதி சுஸுகி இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றதா என்பது பற்றியும் பார்க்க உள்ளோம். 29 மார்ச் 2024 அன்றைய சந்தை மூலதனத்தின் அடிப்படையிலே உலகின் மிகப்பெரிய கார் நிறுவனம் எது என்கிற தகவலை இங்கே தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.

Top 10 car companies in the world

டெஸ்லா (Tesla): நிறுவனத்தின் சந்தை மூலதனம் 29 மார்ச் 2024 நிலவரத்தின்படி 559.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த மாபெரும் சந்தை மூலதனத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே டெஸ்லா நிறுவனம் உலகின் நம்பர் 1 கார் உற்பத்தியாளராக தென்படுகின்றது. டெஸ்லா எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இது அமெரிக்காவின் ஆஸ்ட்டினை தலைமையமாகக் கொண்டு இயங்குகின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது.

இதற்கான பணிகளில் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக மாடல் எஸ் (Model S,) மாடல் 3 (Model 3), மாடல் எக்ஸ் (Model X) மற்றும் மாடல் ஒய் (Model Y) ஆகியவை இருக்கின்றன. இத்துடன், சைபர்டிரக் எனும் பிக்-அப் டிரக் எலெக்ட்ரிக் வாகனத்தையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

Tesla ev

டொயோட்டா (Toyota): உலகின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் டொயோட்டா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றது. பல ஆண்டுகளாக முதல் இடத்தை டொயோட்டா ஆட்சி செய்து வந்த நிலையில், அந்த இடத்தை டெஸ்லா தட்டிப் பறித்திருக்கின்றது. ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 339.23 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

போர்ஷே (Porsche): ஜெர்மன் ஸ்டட்கர்டை தலைமையமாகக் கொண்டு இந்த சூப்பர் மற்றும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் சந்தை மதிப்பு 90.57 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதிக திறனை வெளியேற்றக் கூடிய அதேவேளையில், அதிக சொகுசான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய கார்களையே நிறுவனம் தயாரித்து வருகின்றது.

Ferrari

ஸ்டெல்லண்டிஸ் (Stellantis): இந்த நிறுவனம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றது. இதன் சந்தை மதிப்பு 85.19 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். நெதர்லாந்தை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் கர்லோஸ் டவரெஸ் என்பவருக்கு சொந்தமானது ஆகும். ஃபியட் க்ரைஸ்லர் மற்றும் பிஎஸ்ஏ குழுமம் ஆகியவை இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாகும்.

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz): உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான இது 85.07 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இருக்கின்றது. இந்த நிறுவனமும் ஓர் ஜெர்மன் பிராண்டே ஆகும். இந்த நிறுவனம் சொகுசு கார்களை மட்டுமல்ல அதிக திறனை வெளியேற்றக் கூடிய சூப்பர் கார் மாடல்கள் சிலவற்றயும் தயாரித்துக் கொண்டிருக்கின்றது.

Mercedes g class

இதற்கு அடுத்தபடியாக 78.62 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் ஆறாவது இடத்தில் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி-யும், 7வது இடத்தில் பிஒய்டி நிறுவனங்களும் உள்ளன. இதில் பிஒய்டி என்பது வெறும் மின்சார கார்களா மட்டுமே தயாரிக்கும் சீன உற்பத்தி நிறுவனம் ஆகும். இதன் சந்தை மதிப்பு 90.57 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதற்கு அடுத்தபடியாக 76.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் 8வது இடத்தில் பிஎம்டபிள்யூ-வும், 72.33 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சந்தை மதிப்புடன் 9வது இடத்தில் ஃபோக்ஸ்வேகனும், கடைசியாக 10வது இடத்தை 60.59 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் ஹோண்டாவும் பிடித்திருக்கின்றன. இதில் வறுத்தமளிக்கும் தகவல் என்னவென்றால் இந்திய நிறுவனம் ஒன்றுகூட டாப்10 பட்டியலில் இடம் பெறவில்லை என்பதுதான்.

Byd dolphin ev

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம்கூட இந்த பட்டியலில் இடம் பிடிக்காமல் போயிருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகளே முன்னணி இடத்தில் இருக்கின்றன. இருப்பினும், அதனால் இந்த பட்டியலில் இடம் பெற முடயவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 2, 2024, 18:34 [IST]
English summary
Top 10 car companies in the world based on 29 march 2024 market capitalisation
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X