இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!

இந்தியாவில் கார்கள் உற்பத்தி ஆனது எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பது நமக்கு தெரியும். இன்னும் சொல்லப்போனால், நிறைய கார் நிறுவனங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாகவே பயன்படுத்தி வருகின்றன. ஏனெனில், மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வது செலவு குறைந்ததாக உள்ளது.

இந்த வகையில் கடந்த 1 ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிக கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த முதல் 10 கார் நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவில் உள்நாட்டு கார்கள் விற்பனையில் எவ்வாறு முன்னிலை வகிக்கிறதோ அதேபோன்று இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்வதிலும் மாருதி சுஸுகி நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.

top-10 car export brands

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் மொத்தம் 2 லட்சத்து 80,712 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் நம் நாட்டில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆனால், இதற்கு முந்தைய 2022 ஏப்ரல் - 2023 மார்ச் வரையில் 2 லட்சத்து 55,439 மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்த்தால், கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் மொத்தம் 25,273 கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் அதிகமாக ஏற்றுமதி செய்துள்ளது. 2 லட்சத்து 80,712 கார்கள் என்பது மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் 2 மாதங்களில் விற்பனை செய்யும் கார்களின் விற்பனை எண்ணிக்கைக்கு இணையானது ஆகும். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்களுள் 3இல் ஒன்று நிச்சயமாக மாருதி சுஸுகி நிறுவனத்துடையதாக உள்ளது.

top-10 car export brands

மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் உள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ஹூண்டாயில் இருந்து மொத்தமாக 1 லட்சத்து 63,155 கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 2022-23ஆம் நிதியாண்டில் இதனை காட்டிலும் 10,136 கார்கள் குறைவாக 1 லட்சத்து 53,019 கார்களை மட்டுமே ஹூண்டாய் நிறுவனத்தால் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. இந்த வரிசையில் 3வது இடத்தை கியா பிடித்துள்ளது.

இந்தியாவில் கார்கள் விற்பனையில் 3வது இடத்தை டாடா மோட்டார்ஸ் பிடிப்பது வழக்கம். ஆனால், கார்கள் ஏற்றுமதியில் கியா 3வது இடத்தில் உள்ளது. கடந்த 1 ஆண்டில் மொத்தம் 52,105 கார்களை கியா இந்தியா நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில் சுமார் 85,736 கார்களை கியா இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில் கியா கார்களின் ஏற்றுமதி ஆனது 33,631 யூனிட்கள் குறைந்துள்ளது.கியாவுக்கு அடுத்து 4வது இடத்தை ஃபோக்ஸ்வேகன் 44,180 கார்கள் ஏற்றுமதி உடன் பிடித்துள்ளது.

top-10 car export brands

ஆனால், 2022 ஏப்ரல் - 2023 மார்ச்சில் வெறும் 27,137 கார்களை மட்டுமே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்திருந்தது. 5வது இடத்தில் நிஸான் உள்ளது. இந்தியாவில் நிஸான் கார்கள் விற்பனை பெரிய அளவில் இல்லை. ஆனால், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கார்களை உற்பத்தி செய்து ஏற்றி அனுப்பும் பணியை நிஸான் நிறுவனம் செவ்வனே செய்து வருகிறது. மொத்தம் 42,989 கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து நிஸான் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டில் இன்னும் அதிகமாக 60 ஆயிரத்திற்கும் அதிகமான நிஸான் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. 6வது மற்றும் 7வது இடங்களில் ஹோண்டா மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் உள்ளன. இவை இரண்டின் கடந்த நிதியாண்டின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 37,589 மற்றும் 17,383 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் முறையே ரெனால்ட் (11,266), மஹிந்திரா (11,135) மற்றும் ஜீப் (4,102) உள்ளன.

top-10 car export brands

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உள்நாட்டில் கார்கள் விற்பனையில் முதல் 2 இடங்களில் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும், இவை இரண்டிற்கும் இடையே கார்கள் விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. ஆனால் கார்கள் ஏற்றுமதியை பொறுத்தவரையில், மாருதி சுஸுகிக்கு போட்டியாக ஹூண்டாய் நிறுவனமும் அதிக எண்ணிக்கையிலான கார்களை ஏற்றுமதி செய்கிறது. டாடா மோட்டார்ஸ் இந்த டாப்-10 லிஸ்ட்டிலேயே இல்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 12:25 [IST]
English summary
Top 10 car export brands of 2023 24 financial year check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X