இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!

இந்தியா சமீப ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் மையமாக மாறி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸூகி, ஹூண்டாய், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதியான வாகனங்கள் குறித்த விபரங்களை காணலாம்.

என்னதான் இந்தியாவில் அதிகமான கார்களை ஏற்றுமதியாகி கொண்டு இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதியான வாகனங்களின் எண்ணிக்கையை விட 10.51% ஏற்றுமதி சர்வீஸ் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் ஏற்றுமதியில் இந்தியா வேகமாக வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

top 10 car exports feb 2024

கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 60,767 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 67,907 வாகனங்களை ஏற்றுமதியாகி இருந்தது. தற்போது 7140 வாகனங்கள் குறைவாக ஏற்றுமதியாகியுள்ளன. இதில் உள்ள டாப் 10 கார்களின் ஏற்றுமதி விபரங்களை இங்கே வரிசையாக காணலாம் வாருங்கள்.

பத்தாவது இடத்தில் ஹோண்டா சிட்டி கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் 2,290 கார்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 770 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகிவிட்டது. தற்போது 1520 கார்கள் அதாவது 197.40 சதவீதம் அதிகமான கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது.

top 10 car exports feb 2024

மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிப்ரவரி மாதம் மொத்தம் 2,443 ஃபிராங்க்ஸ் காரர்கள் ஏற்றுமதியாகி உள்ளன. கடந்த ஆண்டு இந்த கார் ஏற்றுமதி பட்டியலையே இல்லை. கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதியான மொத்த கார்களில் இந்த ஃபிராங்க்ஸ் கார் மட்டும் 4 சதவீத பங்கை வைத்துள்ளது.

பட்டியலில் எட்டாவது இடத்தில் கிராண்ட் விட்டாரா கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 3480 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1184 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது 2020 கார்கள் கூடுதலாக ஏற்றுமதி ஆகியுள்ளன இது 170.61% ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

top 10 car exports feb 2024

பட்டியலில் ஏழாவது இடத்தில் ஹுண்டாய் வெர்னா கார் இருக்கிறது. பிப்ரவரி மாதம் மொத்தம் 3475 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2243 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகிறது. தற்போது 1232 காரர்கள் கூடுதலாக ஏற்றுமதியாகி உள்ளது. இது 54.93% ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

பட்டியலில் ஆறாவது இடத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 3480 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,425 கார்கள் தான் ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது 1,055 கார்கள் கூடுதலாக ஏற்றுமதியாகியுள்ளது. இது 43.51% ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

top 10 car exports feb 2024

பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் 3590 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,823 கார்கள் தான் ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது கூடுதலாக 1767 கார்கள் ஏற்றுமதியாகி சாதனை படைத்துள்ளது. இது 96.93% ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

பட்டியலில் நான்காவது இடத்தில் ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் கார் இருக்கிறது. இந்த கார் பிப்ரவரி மாதம் 3610 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்தாண்டு இந்த கார்கள் ஏற்றுமதி பட்டியலிலேயே இல்லை. இந்த ஆண்டுதான் அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 5.94 சதவீத பங்கு இந்த காருக்கு தான் இருக்கிறது.

top 10 car exports feb 2024

பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி ஜிம்னி கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 4,406 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கார் மட்டுமே ஏற்றுமதியாகி இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் இந்த கார் முதல் முதலாக அறிமுகமாகி இருந்தது. தற்போது 4,405 கார்கள் கூடுதலாக ஏற்றுமதியாகி உள்ளன.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 4474 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2352 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது கூடுதலாக 2,122 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இது 90.22% ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

பட்டியலில் முதல் இடத்தில் மாருதி பலேனோ கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 5,110 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,552 கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது கூடுதலாக 1558 கார்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இது 43.86% ஏற்றுமதி வளர்ச்சியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தரமான வாகனங்களை தயாரிப்பதால் வெளிநாடுகளில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு நல்ல மவுசு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்றுமதி என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது . சில குறிப்பிட்ட நிறுவனங்கள் ஏற்றுமதியை நிறுத்தியதால் ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதை தவிர மற்ற எந்த விதமான பாதிப்பும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Friday, March 29, 2024, 7:00 [IST]
English summary
Top 10 car exports feb 2024 jimny elevate swift verna city
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X