மாருதியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த டாடா கார்! இதை யாருமே எதிர்பார்க்கல!

வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக கடந்த ஏப்ரல் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. இதன்படி எந்த கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்ற தரவரிசை பட்டியல் நமக்கு கிடைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த பட்டியலை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஈக்கோ கார் இருக்கிறது. இது ஒரு வேன் ரக வாகனமாகும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 12,060 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 10,504 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

top 10 cars april 2024

பட்டியலில் 9வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இது குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற காராகும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 13,544 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரும் 5,532 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 145 சதவீதம் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் 8வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் 14,049 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16,180 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது. டாப் 10 பட்டியலிலேயே இரண்டாவது விற்பனையை சந்தித்துள்ள கார் இதுதான்.

top 10 cars april 2024

பட்டியலில் 7வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் 14,286 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,784 கார்கள் மட்டுமே ஏற்றுமதி ஆகியிருந்தது தற்போது விற்பனை என்பது 63 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலில் 6வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 14, 807 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த ஆண்டு 9617 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது தற்போது விற்பனை 54 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பத்துடன் பயணிக்கும் கார்களில் மக்கள் பலர் இந்த காரை தான் விரும்புவதால் இதன் விற்பனை அதிகரித்துள்ளது.

பட்டியலில் 5வது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் 15,447 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14,186 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. தற்போது 9 சதவீதம் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

top 10 cars april 2024

பட்டியலில் 4வது இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் டிசையர் என்ற செடான் கார் இருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரே செடான் கார் இதுதான். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 15,825 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10,132 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை என்பது 56 சதவீதம் அதிகரித்துள்ளது.

3வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இது ஒரு எஸ்யூவி ரக காராகும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 17,113 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மொத்தம் 11,836 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

top 10 cars april 2024

பட்டியல் 2வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஏப்ரல் மாதம் 17,850 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20,879 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை என்பது 15% குறைந்துள்ளது.

நீங்கள் பலரும் எதிர்பார்த்தபடி இந்த முறை டாப் 10 கார் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருப்பது டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான். கடந்த ஏப்ரல் மாதம் மொத்தம் 19,158கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10,934கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது விற்பனை என்பது 75 சதவீதம் அதிகரித்துள்ளது. டாடா நிறுவனம் தற்போது மாருதி நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rank Top Cars Apr-24 Apr-23 Growth (%) YoY
1 Tata Punch 19,158 10,934 75
2 Maruti Wagonr 17,850 20,879 -15
3 Maruti Brezza 17,113 11,836 45
4 Maruti Dzire 15,825 10,132 56
5 Hyundai Creta 15,447 14,186 9
6 Mahindra Scorpio 14,807 9,617 54
7 Maruti Fronx 14,286 8,784 63
8 Maruti Baleno 14,049 16,180 -13
9 Maruti Ertiga 13,544 5,532 145
10 Maruti Eeco 12,060 10,504 15

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. இதனால் இந்த டாப் 10 பட்டியலில் மாருதி நிறுவனத்தின் கார்கள் மட்டும் 7 கார்கள் உள்ளன. இருந்தாலும் முதலிடத்தை எப்போதும் மாருதி நிறுவனத்தின் கார்தான் பிடிக்கும் என்ற நிலையில் தற்போது டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரர் மாருதி நிறுவனத்தின் காரை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2024, 14:33 [IST]
English summary
Top 10 cars april 2024 tata punch in first place
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X