திடீர்ன்னு இந்த காரை குறிவச்சு எல்லாரும் வாங்க ஆரம்பிச்சுட்டாங்க! ஒரே மாசத்துல இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் தொடர்ந்து வாகனங்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால் அதிகமான மக்கள் புதிதாக வாகனம் வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்கள் பற்றிய விவரங்களை தான் இந்த பட்டியலில் காணப் போகிறோம். இந்த பட்டியலில் மிகப்பெரிய அளவில் இந்த மாதம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வழக்கமாக டாப் 10 கார் பட்டியலில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பாராத வகையில் இந்த பட்டியலில் இல்லாத கார் ஒன்று தற்போது நம்பர் ஒன் நெடுதலைப் பிடித்துள்ளது தொடர்ந்து 10 இடங்கள் பிடித்த கார்களை பற்றி பார்ப்போம்.

top 10 cars august 2024

இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் எக்ஸாம் கார் இருக்கிறது கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 12,289 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஒன்பதாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. மொத்தம் 12,387 கார்கள் விற்பனையாகி உள்ளன. எட்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் இருக்கிறது. கடந்த மாதம் 12,485 கார்கள் விற்பனையாகி உள்ளன.

அடுத்ததாக 7வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. கடந்த மாதம் 12,723 கார்கள் விற்பனையாகி உள்ளன. பட்டியலில் ஆறாவது இடத்தில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 12,844 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த கார்கள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன என்றே சொல்லலாம். ஒரு சில வித்தியாசங்களின் அடிப்படையிலேயே இடம் வழங்கப்பட்டுள்ளது.

top 10 cars august 2024

அடுத்ததாக 5வது இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த ஆகஸ்ட் மாதம் 15,642 கார்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்ததாக மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மாதம் மட்டும் 16,450 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த இரண்டு கார்களும் ஒரு காலத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக இருந்துள்ளது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆகஸ்ட் மாதம் மட்டும் 16,762 கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹூண்டாய் கிரெட்டா காரும் இந்த ஆண்டில் குறிப்பிட்ட சில மாதங்களில் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான காராக இருந்துள்ளது. மக்கள் வளர்ந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். அதனால் இந்த காரின் விற்பனை தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

top 10 cars august 2024

இந்த பட்டியலில் 2வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 18,580 கார்கள் விற்பனையாகி உள்ளன. அனைவரும் எதிர்பார்த்த முதலிடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 19,190 காரில் விற்பனையாகியுள்ளன. யாரும் எதிர்பாராத வகையில் இந்த கார் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிகமாக விற்பனையான டாப் 10 கார் பட்டியலில் மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. மொத்தமுள்ள 10 கார்களில் 6 கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்களாகவே இருக்கிறது. மேலும் இந்த பட்டியலில் டாடா நிறுவனத்தின் இரண்டு கார்களும், மஹிந்திரா மற்றும் ஹுண்டாய் ஆகிய நிறுவனங்களின் தரப்பில் இருந்து தலா ஒரு காரும் இந்த பட்டியலில் உள்ளது.

மாருதி நிறுவனத்தின் கார் மீதுதான் மக்கள் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக இந்த நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான கார்களை அதிக அளவிலான மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். அதன் காரணமாகவே மாறி நிறுவனத்தின் கார்கள் இந்த பட்டியில் அதிக இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி நிறுவனம் தான் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இந்த கார் இந்த மாதம் பிடித்திருப்பது இந்த கார் மீதான கவனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 7:00 [IST]
English summary
Top 10 cars august 2024 maruti brezza tops list know full details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X