மாருதியின் இடத்தை அடித்து பிடுங்கிய டாடா! இந்த கார் தான் நம்பர் 1 விற்பனையா?

ஜனவரி மாதம் பிறந்துவிட்ட நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த பட்டியல் நமக்கு தற்போது கிடைத்துள்ளது. இதில் யாரும் எதிர்பாராதபடி நம்பர் 1 இடத்தில் டாடா நிறுவனத்தின் கார் ஒன்று இருக்கிறது. வாருங்கள் இந்த டாப் 10 பட்டியலை காண்போம்.

டாடா நெக்ஸான்: டாடா நிறுவனம் நெக்ஸான் கார் சிறப்பாக விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த கார் அப்டேட் செய்யப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்த கார் மொத்தம் 15,284 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதே 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,053 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 27% இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

top 10 cars december 2023

மாருதி சுஸூகி டிசையர்: மாருதி நிறுவனம் எப்பொழுதும் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் மாருதி டிசையர் காருக்கு மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. இந்த கார் விரைவில் அப்டேட் ஆகப்போகிறது என தெரிந்தும் அதிகமாக இந்த கார்களை வாங்குகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 14,012 கார்கள் விற்பனை ஆகியுள்ளன இதுவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் 11,997 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 17% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

டாடா பஞ்ச்: பட்டியலில் உள்ள இரண்டாவது டாடா நிறுவனத்தின் கார் இது. இந்த கார் அறிமுகமானபோது நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதமும் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. மொத்தம் 13,787 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10, 586 கார்கள் தான் விற்பனை ஆகி இருந்தது தற்போது 30 சதவீதம் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

top 10 cars december 2023

மாருதி சுஸூகி எர்டிகா: இந்த பட்டியலில் உள்ள 2வது மாருதி நிறுவனத்தின் கார் இது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார் என்பதால் இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12,975 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,273 கார்கள் விற்பனையாக இருந்தது. 6 சதவீதம் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

மாருதி சுஸூகி பிரெஸ்ஸா: இந்த கார் அறிமுகமானது முதலில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற நிலையில் தொடர்ந்து இந்த காரின் விற்பனை அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 12,844 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே 2022 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11,200 கார்கள் மட்டுமே விற்பனை ஆகி இருந்தது. தற்போது 15 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

top 10 cars december 2023

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: வழக்கமாக மாருதி நிறுவனத்தின் சிறப்பாக விற்பனையாகும் கார்களில் ஒன்றாக இந்த ஸ்விஃப்ட் கார் இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 11,843 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12,061 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது விற்பனை 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது .விரைவில் இந்த கார் அப்டேட்டாக உள்ளது என்பதால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

மஹிந்திரா ஸ்கார்பியோ: இந்த டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே மஹிந்திரா கார் இதுதான். இந்த கார் மொத்தம் 11,355 கார்கள் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையாகி இருந்தது. இதுவே கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் 7,003 கார்கள் தான் விற்பனையாக இருந்தன. ஒரேயாண்டில்ல் 62% அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த பட்டியலில் அதிக அளவிலான விற்பனை வளர்ச்சியை பெற்ற கார் இதுதான்.

top 10 cars december 2023

மாருதி சுஸூகி பலேனோ: மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் அறிமுகமான புதிதில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று அதிகமான விற்பனையாகி வரும் காராக இருந்தது கடந்த டிசம்பர் மாதம் 10, 669 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. இதுவே 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16,932 கார்கள் விற்பனையாகின. அதை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 37 சதவீதம் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ: இந்த பட்டியலில் உள்ள ஒரே ஹூண்டாய் நிறுவனத்தின் கார் இதுதான். இந்த கார் கடந்த டிசம்பர் மாதம் 10,383 கார்கள் விற்பனை ஆகி இருந்தன. இதுவே கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8,285 கார்கள் விற்பனை ஆகி இருந்தது தற்போது விற்பனை 25 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு தான் அப்டேட் செய்யப்பட்டது.

மாருதி சுஸூகி ஈகோ: மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஈகோ கார் நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையை பெற்று வரும் காராக இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் இந்த கார் 10,034 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10,581 என்ற விற்பனை எண்ணிக்கையை எட்டிப் பிடித்தது தற்போது 5% விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட நாட்களாக மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் எப்பொழுதும் டாப் 10 பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆனால் இந்த முறை மாருதி டாடா நெக்ஸான் கார் முதல் இடத்தை பிடித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த கார் கடந்த நவம்பர் மாதம் தான் அப்டேட் செய்யப்பட்டு வெளியானதால் அதிக எண்ணிக்கையிலான விற்பனை கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 7:00 [IST]
English summary
Top 10 cars december 2023 nexon first place
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X