இத்தனை லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்களா? அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள் இது தான்!
2023-24ம் நிதியாண்டு தற்போது நிறைவடைந்து 2024-25ம் நிதியாண்டு துவங்கியுள்ள நிலையில், கடந்த நிதியாண்டில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரங்களை எல்லாம் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. அதன் அடிப்படையில் கடந்த நிதியாண்டில் அதிகமாக விற்பனையான டாப் 10 கார்களை பற்றி தான் நாம் இங்கே விரிவாக பார்க்க போகிறோம்.
10. மஹிந்திரா ஸ்கார்பியோ: மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த கார் கடந்த 2023-24ம் தேதி ஆண்டில் மொத்தம் 1,41,462 கார்கள் விற்பனையாகி உள்ளன. இது மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஆகிய இரு கார்களின் கூட்டு விற்பனையாகும். இந்த கார் ரூபாய் 13.59 லட்சம் முதல் ரூபாய் 17.35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

9. மாருதி எர்டிகா: இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் குடும்பங்கள் விரும்பும் காராக இருக்கிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,49,757 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 8.69 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.
8. ஹூண்டாய் கிரெட்டா: கார் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் 1,61,653 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் தான் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு விற்பனைக்கு அறிமுகமானதால், அதற்கு முன்னர் விற்பனை குறைவாக இருந்தது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகிறது.

7. மாருதி சுஸூகி டிசையர்: மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் அதன் செக்மெண்டில் சிறப்பாக விற்பனையாகும் காராக இருக்கிறது. இந்த பட்டியலில் இந்த கார் 7வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் 1,64, 517 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த காரின் விலை பொருத்தவரை ரூபாய் 6.56 லட்சம் என்ற விலையில் இருந்து விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.
6. மாருதி சுஸூகி பிரெஸ்ஸா: மாருதி நிறுவனத்தின் சுஸூகி பிரெஸ்ஸா கார் ஒரு எஸ்யூவி காராகும். இந்த பட்டியலில் இந்த கார் 6வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இந்த கார் மொத்தமாக 1,69,897 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 8.34 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வருகிறது.

5. டாடா பஞ்ச்: மக்கள் பலர் விரும்பி வாங்கும் காராக இருக்கிறது. இந்த டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரின் விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,70,076 கார்கள் விற்பனை ஆகி உள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 6.13 லட்சம் என்ற விலையில் இருந்து மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் ஆகிறது.
4. டாடா நெக்ஸான்: இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் அறிமுகமானது முதல் சிறப்பான விற்பனையில் இருக்கிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 1,71, 697 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த கார்களின் விலையை பொறுத்த வரை ரூபாய் 8.15 லட்சம் முதல் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் ஆகி வருகிறது.

3. மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: நீண்ட நாட்களாக மக்களின் நன்மதிப்பை பெற்ற காராக மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் இந்த கார் ஒட்டுமொத்தமாக 1,95,321 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இந்த காரின் விலை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 5.99 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகி வருகிறது.
2. மாருதி சுஸூகி பலேனோ: மாருதி நிறுவனத்தின் பலேனோ கார் பெரிய கார் போன்ற லுக்கில் இருப்பதால் பலர் இந்த காரை விரும்பி வாங்குகிறார்கள். ஒட்டுமொத்தமாக 1,95,607 கார்கள் விற்பனையாகியுள்ளன. இந்த காரின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 6.66 லட்சம் என்று ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.
| Rank | Top 10 | FY24 |
| 1 | Maruti WagonR | 2,00,177 |
| 2 | Maruti Baleno | 1,95,607 |
| 3 | Maruti Swift | 1,95,321 |
| 4 | Tata Nexon | 1,71,697 |
| 5 | Tata Punch | 1,70,076 |
| 6 | Maruti Brezza | 1,69,897 |
| 7 | Maruti Dzire | 1,64,517 |
| 8 | Hyundai Creta | 1,61,653 |
| 9 | Maruti Ertiga | 1,49,757 |
| 10 | Mahindra Scorpio | 1,41,462 |
1. மாருதி சுஸூகி வேகன்ஆர்: நாம் அனைவரும் எதிர்பார்த்த முதலிடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் தான் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் இந்த காரணமும் சிறப்பாக விற்பனையாக பட்டியலில் முதலிடத்தில் இருக்கும். அதன்படி கடந்த 2023-24-ஆம் தேதி ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2,177 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த காரின் விலை பொறுத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 5.54 லட்சம் என்று ஆரம்ப விலையில் விற்பனையாகி வருகிறது.


Click it and Unblock the Notifications









