இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 கார்கள் இது தான்! நம்பர் 1 இடத்தில் எந்த கார் இருக்குது தெரியுமா?
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் எவ்வளவு கார்கள் விற்பனையாகியுள்ளன என்ற விபரங்கள் நமக்கு கையில் கிடைத்துள்ளது. இதன்படி இந்தியாவில் விற்பனையான டாப் 10 கார்களின் பட்டியலை இங்கே காணலாம் வாருங்கள்.
மாருதி நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் சுஸூகி ஃபிராங்க்ஸ் என்ற எஸ்யூவி காரை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 14,168 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் இந்த கார் அறிமுகமாகவில்லை என்பதால் இந்த கார் குறித்த ஒப்பீடு எதுவும் கிடையாது. இதனால் இந்த காரின் விற்பனை வளர்ச்சியோ, வீழ்ச்சியோ என எதுவுமே கிடையாது.

பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 16,395 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13,914 கார்கள் தான் விற்பனை ஆகிறது. தற்போது விற்பனை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது.
பட்டியலில் எட்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 15,051 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 6950 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. அதன் பிறகு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் தற்போது விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கார் 117 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

பட்டியலில் ஏழாவது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெக்டா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் 15,276 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10,421 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. அதன் பிறகு இந்த கார் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன் வெளியானதால் தற்போது இந்த காரின் விற்பனை அதிகமாகியுள்ளது. தற்போது இந்த கார் 47 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.
பட்டியலில் ஆறாவது இடத்தில் மாருதி சுஸூகி எர்டிகா கார் இருக்கிறது. இந்த கார் கடந்து பிப்ரவரி மாதம் 15,519 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 6472 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 140% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் 15,765 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15,787 கார்கள் விற்பனையாகியுள்ளன கிட்டத்தட்ட ஒரே அளவிலான கார்கள் தான் விற்பனையாகி உள்ளன. இதனால் இந்த காரின் விற்பனையில் வளர்ச்சியோ வீழ்ச்சியோ என்பது பெரிய அளவில் இல்லை.
பட்டியலில் நான்காவது இடத்தில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் டிசையர் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த பிப்ரவரி மாதம் 15,867 கார்கள் விற்பனையாகி உள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16,798 கார்கள் விற்பனை ஆகி இருந்தன. தற்போது 6 சதவீதம் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் விரைவில் இந்த காரின் அப்டேட்டட் வெர்ஷன் வர உள்ளது தான்.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுஸூகி பலேனோ கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 17,517 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மொத்தம் 18,592 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 6 சதவீதம் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. பலேனோ காரிலும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த விற்பனை சரிவு ஏற்பட்டிருக்கலாம்.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 18,438 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11,169 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 65 சதவீத விற்பனை வளர்ச்சி என்பது ஏற்பட்டுள்ளது.
பட்டியலில் முதல் இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன் ஆர் கார் இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 19,412 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16,889 கார்கள் விற்பனையாகி உள்ளது. தற்போது விற்பனை என்பது 15% அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்த ஓராண்டில் தங்கள் வாகனங்களில் விற்பனையை கணிசமான அளவு அதிகரித்துள்ளன. கொரோனா பாதிப்பிற்கு பிறகு மெல்ல மெல்ல ஆட்டோமொபைல் துறை மீண்டு வந்து தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் டீலர்கள் உள்ளிட்ட பலர் இதனால் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications









