குடும்பத்தோட 7 பேர் போற காரை தான் இந்தியாவிலேயே அதிகம் பேர் வாங்கியிருக்காங்க எந்த கார் தெரியுமா?

இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் எந்தெந்த கார்கள் எவ்வளவு விற்பனையாக உள்ளது என்ற முழுமையான விபரங்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த மாதம் விற்பனையாக டாப் 10 கார்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

10 இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஈக்கோ கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 11,908 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,147 வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது ஏழு சதவீதம் அளவிற்கு இந்த வாகனத்தின் விற்பனை என்பது அதிகரித்துள்ளது.

Top 10 Cars September 2024

ஒன்பதாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 13,339 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. இதிலே கலந்து 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16,250 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 18 சதவீதம் அளவிற்கு இந்த கார்களில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

பட்டியலில் எட்டாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் இருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் 13,711 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,336 கார்கள் மட்டுமே விற்பனையாகிறது. தற்போது 5% அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்து இருந்தாலும், ஒரு காலத்தில் இந்த கார் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் காராக இருந்து தற்போது எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Top 10 Cars September 2024

பட்டியலில் 7வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 13,874 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,455 கார்கள் தான் விற்பனை ஆகிவிட்டது. தற்போது 21% அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

பட்டியலில் ஆறாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பல நோக்கார் இருக்கிறது கடந்த செப்டம்பர் மாதம் 14,292 கார்கள் விற்பனையாக உள்ளன. இது கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18417 கார்கள் விற்பனையாகிறது. தற்போது இந்த காரின் விற்பனை 22 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.

Top 10 Cars September 2024

பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் 14,438 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11846 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 22 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

பட்டியலில் 4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 15,322 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கலந்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15,001 கார்கள் விற்பனையாகிறது. தற்போது இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் கடந்த செப்டம்பர் மாதம் 15,902 கார்கள் விற்பனையாகியுள்ளன இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12,717 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 25 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் இருக்கிறது. கலந்து செப்டம்பர் மாதம் 16,241 கார்கள் விற்பனையாகி உள்ளன. 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14,703 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 10 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த பட்டியலில் முதல் இடத்தில் மாருதி நிறுவனத்தின் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 17,441 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,528 கார்கள் விற்பனை ஆகிறது தற்போது 29 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாப் 10 கார் பட்டியலில் ஒவ்வொரு காரின் விற்பனையும் ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த மாதம் முதலிடத்தில் இருந்த கார் அடுத்த மாதத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகிறது. மிக குறைவான எண்ணிக்கையில் விற்பனையில் இருந்த கார் நம்பர் ஒன் இடத்தில் விற்பனையாகிறது. இந்தியாவில் கார் விற்பனை டிரெண்ட் தற்போது மாறிக்கொண்டே இருப்பது இதன் மூலம் தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 17:07 [IST]
English summary
Top 10 cars september 2024 india creta top selling suv
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X