இந்தியாவின் டாப்10 குறைந்த விலை கார்கள் இது தான்! ஏழைகள் கூட இந்த கார்களை சொந்தமா வாங்கலாம்!
இந்தியாவில் உள்ள மிடில்-கிளாஸ் மக்களுக்கு கார் வாங்குவது என்பது பெரும் கனவாக தான் இருக்கிறது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த பணத்தை வைத்து ஒரு நல்ல காரை வாங்க வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படியாக முதன் முதலாக கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த விலை கார்களை தான் தேர்வு செய்வார்கள். இந்தியாவில் விற்பனையாகும் டாப் 10 குறைந்த விலை கார்களை பற்றி தான் இங்கே காணப் போகிறோம்.
10. டாடா பஞ்ச்: டாடா நிறுவனம் மைக்ரோ எஸ்யூவி செகண்ட் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 5.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோலில் 18.8 முதல் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. சிஎன்ஜியில் 26.99 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

9. மாருதி சுஸூகி இக்னீஸ்: மாருதி நிறுவனம் தனது இக்னீஸ் காரை ரூபாய் 8.84 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே விற்பனையில் இருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 20.89 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் திறன் கொண்டதாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: ஹூண்டாய் நிறுவனம் பேக் காராக தனது கிராண்ட் ஐ 10 நியோஸ் காரை ரூபாய் 5.84 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16 முதல் 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

7. டாடா டியாகோ: டாடா நிறுவனம் டியாகோ என்ற ஹேட்ச்பேக் காரை ரூபாய் 5.60 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 19.43 முதல் 20 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. மாருதி வேகன் ஆர்: மாருதி நிறுவனம் வேகன் ஆர் என்ற டால்பாய் காரை ரூபாய் 5.54 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரும் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதன் மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோலில் 23.56 கிலோமீட்டர் மைலேஜ் 34 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. மாருதி செலிரியோ: மாருதி நிறுவனம் செலிரியோ என்ற பெயரில் ஹேட்ச்பேக் கார் ஒன்றை விற்பனை செய்து வருகிறது. இந்த காரின் விலை பொருத்தவரை ரூ 5.37 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த காரின் மைலேஜை பொறுத்தவரை லிட்டருக்கு 26 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. ரெனால்ட் க்விட்: ரெனால்ட் நிறுவனம் குறைந்த விலையில் க்விட் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 4.69 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே உள்ளது. இதன் மைலேஜ் பொறுத்தவரை லிட்டருக்கு 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. மாருதி எஸ்பிரெஸ்ஸோ: மாருதி நிறுவனம் எஸ்யூவி காரின் வடிவமைப்பிலேயே சிறிய ரக காராக எஸ்பிரெஸ்ஸோ என்ற காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 4.26 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த கார் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. மாருதி ஆல்டோ கே10: மாருதி நிறுவனம் தனது ஆல்டோ கே10 காரை ரூபாய் 3.99 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. இதில் மைலேஜ் பொறுத்தவரை 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. மாருதி ஆல்டோ 800: இந்தியாவிலேயே குறைந்த விலை காராக இந்த மாருதி ஆல்டோ 800 கார் தான் இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 3.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனையில் உள்ளது. இந்த காரில் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மிடில் கிளாஸ் மக்களை குறி வைத்து குறைந்த விலையிலான வாகனங்களை அதிகம் விற்பனை செய்து வருகின்றன. மேலும் இந்த வாகனங்களை வாங்க இஎம்ஐ ஆப்ஷன்களையும் கடன்கள் மூலம் வழங்கி வருகின்றன. இதனால் உங்கள் கையில் மிக குறைவான பணம் இருந்தாலும் இந்த பட்டியலில் உள்ள கார்களை நிச்சயம் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









