சுட சுட போட்ட வடை மாதிரி இந்த காரை வாங்க அவ்வளவு கூட்டம்! நம்பர் 1 இடத்துலயும் இந்த கார் தான் இருக்குது!

கடந்த மே மாத விற்பனை விபரங்களை இந்தியாவில் வாகனங்களை தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் வெளியிட்டுள்ள நிலையில், இந்திய மக்கள் அதிகம் விரும்பும் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் விற்பனையான டாப் 10 கார்கள் குறித்த விற்பனை விபரங்கள் எல்லாம் நமக்கு கிடைத்துள்ளன. அதன்படி வழக்கம்போல இந்த செக்மெண்டில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் தான் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த மாதம் அறிமுகமான மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரும் டாப் 10 பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த அனைத்து விரிவான விவரங்களையும் இங்கே காணலாம்.

நிஸான் மேக்னைட்: இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் நிஸான் நிறுவனத்தின் மேக்னைட் கார் இருக்கிறது. கடந்த மே மாதம் இந்த கார் மொத்தம் 2,211 எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 26,18 கார்கள் விற்பனையாக இருந்தன. தற்போது 16 சதவீதம் இந்த காரின் விற்பனை என்பது குறைந்துள்ளது.

top 10 compact suvs in india

மஹிந்திரா தார்: இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் இருக்கிறது. கடந்த மே மாதம் மொத்தம் 5,750 கார்கள் விற்பனையாக இருந்தன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 4296 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இந்த ஒரே ஆண்டில் மொத்தம் 34 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை என்பது வளர்ச்சி அடைந்துள்ளது.

கியா சோனட்: இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் கியா நிறுவனத்தின் சோனட் கார் இருக்கிறது. கடந்த மே மாதம் 7,433 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 8,251 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது இதன் விற்பனை என்பது 10% அளவிற்கு குறைந்துள்ளது.

top 10 compact suvs in india

ஹூண்டாய் எக்ஸ்டர்: காரை பொருத்தவரை இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. கடந்த மே மாதம் 7697 கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் இந்த கார் அறிமுகமாகவில்லை என்பதால் இதன் விற்பனை விபரங்கள் குறித்த தகவல்கள் கிடையாது. இந்த கார் மக்களால் அதிகம் விரும்பப்பட்டு வாங்கப்படும் கார்களில் ஒன்றாக இருக்கிறது.

ஹூண்டாய் வென்யூ: ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் ஆறாவது இடத்தில் இருக்கிறது. கடந்த மே மாதம் 9,327 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மொத்தம் 10,213 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 9 சதவீதம் அளவிற்கு இதன் விற்பனை குறைந்துள்ளது.

top 10 compact suvs in india

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ என்ற கார் இருக்கிறது. இந்த கார் கடந்த மாதம் தான் விற்பனைக்காக அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரே மாதத்தில் 10,000 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் வெறும் 5,125 கார்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது 95 சதவீதம் அளவிற்கு இதன் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

டாடா நெக்ஸான்: டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரை பொறுத்தவரை இந்த பட்டியலில் 4வது இடத்தில் இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் 11,457 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 14,423 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 21 சதவீதம் அளவிற்கு இதன் விற்பனை குறைந்துள்ளது. மக்களிடம் நல்ல பெயரை பெற்ற இந்த காரின் விற்பனை சரிவடைந்துள்ளது பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Rank Compact SUVs May-24 May-23 Growth (%)
1 Tata Punch 18,949 11,124 70
2 Maruti Brezza 14,186 13,398 6
3 Maruti Fronx 12,681 9,863 29
4 Tata Nexon 11,457 14,423 -21
5 Mahindra XUV 3XO 10,000 5,125 95
6 Hyundai Venue 9,327 10,213 -9
7 Hyundai Exter 7,697 - -
8 Kia Sonet 7,433 8,251 -10
9 Mahindra Thar 5,750 4,296 34
10 Nissan Magnite 2,211 2,618 -16

மாருதி ஃபிராங்க்ஸ்: இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் மற்றும் 12,681 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 9863 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது இதன் விற்பனை 29 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது.

மாருதி பிரெஸ்ஸா: இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. கடந்த மே மாதம் மட்டும் 14,186 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 13,398 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது அதை ஒப்பிடும்போது 6 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

டாடா பஞ்ச்: டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரை பொறுத்தவரை கடந்த மே மாதம் 18,949 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 11,124 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 70 சதவீதம் அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்டில் உள்ள கார்களின் விற்பனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் இந்த செக்மெண்டில் உள்ள கார்களை அதிகமாக வாங்கும் எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதில் டாடா பஞ்ச் கார் மீது மக்கள் அதிகமாக மோகம் கொண்டுள்ளார்கள். விரைவில் அப்டேட் வரப்போவது தெரிந்தும் மக்கள் இந்த காரை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 10:51 [IST]
English summary
Top 10 compact suvs india may 2024 punch xuv 3xo thar venue sonet ranking
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X