போட்டி நிறுவனங்களின் தலையில் இடியை இறக்கும் டாடா மோட்டார்ஸ்! ரத்தன் டாடா மறைந்தாலும் பெரிய எதிர்காலம் இருக்கு

எலக்ட்ரிக் கார் (electric car) விஷயத்தில் டாடா எலக்ட்ரிக் கார்களை இத்தனை பேர் நம்புகிறார்களா? என கேட்க தோன்றும் அளவிற்கு டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-இன் எலக்ட்ரிக் கார்களுக்கு மட்டும் மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிக எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் எத்தனை எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளன என்பதை இனி பார்க்கலாம்.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் வால்வோவும், 9வது இடத்தில் கியாவும் உள்ளன. மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படும் வால்வோ எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் அதிக விலையில் இவி6 எலக்ட்ரிக் காரை கியா விற்பனை செய்கிறது. வால்வோவில் 15 எலக்ட்ரிக் கார்களும், கியாவில் 17 எலக்ட்ரிக் கார்களும் கடந்த செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

india s top-10 electric car brands

வால்வோ, கியாவை காட்டிலும் குறைந்த விலையில் ரூ.50 லட்சத்திற்குள் எலக்ட்ரிக் காரை விற்பனை செய்துவரும் ஹூண்டாய் இந்த லிஸ்ட்டில் 8வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 26 ஹூண்டாய் அயோனிக்5 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் 81 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 48 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே இந்தியாவில் மெர்சிடிஸ் விற்பனை செய்திருந்தது.

6வது இடத்தில் உள்ள பி.எம்.டபிள்யூவின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் வெற்றிக்கரமாக 100ஐ கடந்துள்ளது. ஆகஸ்ட்டில் 63 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே பிஎம்டபிள்யூ விற்பனை செய்திருந்தது. 163 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில் பிஒய்டி உள்ளது. சீன இவி நிறுவனமான பிஒய்டி-இல் இருந்து அட்டோ3, இமேக்ஸ் மற்றும் சீல் என 3 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

india s top-10 electric car brands

இதற்கடுத்து 4வது இடத்தில் உள்ள சிட்ரோனின் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2024 ஆகஸ்ட்டில் 159 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த சிட்ரோன் கடந்த செப்டம்பரில் 386 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது, விற்பனை பாதிக்கும் மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஒரேயொரு சிட்ரோன் எலக்ட்ரிக் கார் இசி3 மட்டுமே ஆகும்.

புதியதாக எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இறங்கியுள்ள மஹிந்திரா கடந்த மாதத்தில் 454 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. மஹிந்திராவின் ஒரேயொரு எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 317 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. மஹிந்திராவையும் முந்திக் கொண்டு 2வது இடத்தை எம்ஜி மோட்டார் பிடித்துள்ளது.

கோமெட், விண்ட்சர், இசட்.எஸ் என 3 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் எம்ஜி மோட்டார் கடந்த மாதத்தில் 977 எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், 2024 ஆகஸ்ட் மாதத்தில் 1,353 எலக்ட்ரிக் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, எம்ஜி எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எண்ணிக்கை 376 குறைந்துள்ளது. நாம் எதிர்பார்த்தப்படி, வழக்கம்போல் கடந்த செப்டம்பர் மாத விற்பனையிலும் முதலிடத்தை டாடா மோட்டார்ஸ் பிடித்துள்ளது.

india s top-10 electric car brands

2வது இடத்தில் எம்ஜி மோட்டாரை விட 3 மடங்கு அதிகமாக கடந்த மாதத்தில் 3,621 எலக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால், இது வழக்கத்தை காட்டிலும் குறைவு ஆகும். முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் 4,086 எலக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸில் இருந்து விற்பனையாகி இருந்தன. டியாகோ, டிகோர், பஞ்ச், நெக்ஸான் மற்றும் கர்வ் என 5 எலக்ட்ரிக் கார்கள் டாடா மோட்டார்ஸில் இருந்து மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 10 நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆடி உள்பட இன்னும் சில நிறுவனங்களும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்கின்றன. இருப்பினும், 3இல் இருவர் எலக்ட்ரிக் காரை வாங்குவது டாடா மோட்டார்ஸில் ஆகும். அந்த அளவிற்கு எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் எதிர்காலத்தை நோக்கி டாடா மோட்டார்ஸ் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2024, 8:00 [IST]
English summary
Top 10 electric car brands in sales in india 2024 september report check all details here
மேலும்... #car sales #electric car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X