இந்தியாவில் 3இல் ஒருத்தர் கட்டாயம் இந்த காரை வாங்குறாரு!! ஹூண்டாய் (அ) டாடா கார் கிடையாதுங்க...
உலகளவில் அதிகளவில் கார்கள் விற்பனையாகும் நாடுகளுள் நம் இந்தியா முதன்மையானதாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் எப்போதுமே கார்கள் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது மாருதி சுஸுகி ஆகும். கடந்த 2024 ஏப்ரல் மாத கார்கள் விற்பனையிலும் முதலிடத்தை பிடித்துள்ள மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 37,952 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இருப்பினும், துல்லியமாக பார்த்தால் 2023 ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் 632 கார்களை மாருதி சுஸுகி அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்த வகையில், மாருதி சுஸுகி கார்களின் விற்பனை ஆனது 0.46% அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்சமயம் மொத்தம் 14 கார் நிறுவனங்கள் தங்களது கார்களை விற்பனை செய்கின்றன.
ஒட்டுமொத்தமாக, கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் 3 லட்சத்து 37,068 கார்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஆனது 5,562 அதிகமாகும். இந்த 3 லட்சத்து 37,068 கார்களில், மாருதி சுஸுகி கார்களின் பங்கு மட்டும் 40.93% ஆகும். அதாவது, இந்தியாவில் கார் வாங்கும் மூன்றில் ஒருவர் நிச்சயமாக மாருதி சுஸுகி காரை தேர்வு செய்கிறார்.

மாருதி சுஸுக்கு அடுத்து ஹூண்டாய், டாடா என அடுத்தடுத்த இடங்களில் கார் நிறுவனங்கள் இருந்தாலும், மாருதி சுஸுகி அளவிற்கு எந்த நிறுவனமும் கார்களை விற்பனை செய்வது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் உள்ள ஹூண்டாய் விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கைக்கும், மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ள கார்களின் எண்ணிக்கைக்கும் சுமார் 87 ஆயிரம் கார்கள் வித்தியாசம் உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 50,201 ஹூண்டாய் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த 2024 ஏப்ரலில் சரியாக 500 ஹூண்டாய் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், ஹூண்டாய் கார்கள் விற்பனை ஆனது 1.01% அதிகரித்துள்ளது. ஹூண்டாய்க்கு அடுத்து 3வது இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது.

இந்த லிஸ்ட்டில் 2வது இடத்திற்கு ஹூண்டாய்க்கும், டாடா மோட்டார்ஸுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. ஆனால், கடந்த மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை ஹூண்டாய் வழக்கம்போல் முந்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 47,883 ஆகும். அதாவது, ஹூண்டாய் கார்களை காட்டிலும் ஏறக்குறைய வெறும் 2,300 டாடா கார்கள் மட்டுமே குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2023 ஏப்ரலில் இதனை காட்டிலும் 876 கார்கள் குறைவாக 47,007 டாடா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 4வது இடத்தில் மஹிந்திரா 41,008 கார்களின் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளது. 5வது மற்றும் 6வது இடங்களில் கியா மற்றும் டொயோட்டா உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 19,968 மற்றும் 18,700 ஆகும். இந்த லிஸ்ட்டில் கடைசி 4 இடங்களில் எம்ஜி (4,485), ஹோண்டா (4,351), ரெனால்ட் (3,707) மற்றும் ஃபோக்ஸ்வேகன் (3,049) நிறுவனங்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் டாப்-4 கார் நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திராவை தவிர்த்து மற்றவைகளின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், நம்பர் ஒன் இந்தியன் கார் பிராண்டான மாருதி சுஸுகியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









