இந்தியாவிலேயே இந்த ஹூண்டாய் காருக்கு தான் இப்போ மவுசு அதிகம்... மாருதி கார்களுக்கு தண்ணி காட்டுது!!

உலகளவில் பெரிய கார் சந்தையாக நம் இந்தியா உள்ளது என்றால் அதில் மாற்று கருத்து இல்லை. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்கள் நம் நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து மட்டும் மாதந்தோறும் 1.5 லட்சம் - 2 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த நிலையில், கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார் மாடல்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன.

மாருதி சுஸுகி எந்த அளவிற்கு இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால், கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களில் கிட்டத்தட்ட 7 கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். ஆனால், கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தில் இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ஆகும்.

july top-10 most sold cars

கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை கிரெட்டா கார் எதிர்பார்த்ததை போன்று விற்பனையில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மொத்தம் 17,350 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த அளவிற்கு வேறெந்த காரும் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்படவில்லை. 2023 ஜூலை மாதத்தில் 14,062 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில், கிரெட்டா கார்களின் விற்பனை ஆனது 23% அதிகரித்துள்ளது. இந்த 2024ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 1 இலட்ச கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றால், புதிய கிரெட்டா காருக்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறியலாம். கிரெட்டாவின் ஸ்போர்டியர் செர்சனான கிரெட்டா என்-லைன் காரும் விற்பனை செய்யப்படுகிறது.

july top-10 most sold cars

கிரெட்டாவுக்கு அடுத்து 2வது மற்றும் 3வது இடங்களில் மாருதி சுஸுகியின் கார்களான ஸ்விஃப்ட் மற்றும் வேகன்ஆர் உள்ளன. மாருதி சுஸுகியின் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களான இவை இரண்டில் ஸ்விஃப்ட் 16,854 யூனிட்களும், வேகன்ஆர் 16,191 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் வேகன்ஆர் கார்களின் விற்பனை ஆனது கடந்த ஆண்டை காட்டிலும் 25% அதிகரித்துள்ளது.

ஆனால், ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை ஆனது 2023 ஜூலையை காட்டிலும் 6% குறைந்துள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஜூலையில் 1,045 ஸ்விஃப்ட் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. டாடா பஞ்ச், இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் தொடர்ச்சியாக 4 மாதங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்து வந்தது.

july top-10 most sold cars

கடந்த 2024 ஜூலை மாதத்தில் மொத்தம் 16,121 பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜூலை மாதத்தில் 12,019 பஞ்ச் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், 4,102 பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றாலும், கடந்த மார்ச் - ஜூன் மாதங்களில் அதிகப்பட்சமாக 19 ஆயிரம் பஞ்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த லிஸ்ட்டில் 5வது மற்றும் 6வது இடங்களில் மாருதி சுஸுகியின் எர்டிகா மற்றும் பிரெஸ்ஸா உள்ளன.

இந்த மாருதி கார்கள் கடந்த ஜூலை மாதத்தில் முறையே 15,701 மற்றும் 14,676 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 7வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான காரான நெக்ஸான் 13,902 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2023 ஜூலையில் 12,349 நெக்ஸான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 3 இடங்களில் முறையே மஹிந்திரா ஸ்கார்பியோ (12,337), மாருதி சுஸுகி ஈக்கோ (11,916) மற்றும் மாருதி சுஸுகி டிசைர் (11,647) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் கிரெட்டாவை போன்று, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார்களின் விற்பனையும் இமாலய வளர்ச்சி அடையும் என எதிர்பார்த்தோம். ஏனெனில், புதிய ஸ்விஃப்ட் கார் கடந்த மே மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஸ்விஃப்ட் கார்களின் விற்பனை மெதுவாகவே முன்னேற்றம் கண்டு வருகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாடா கர்வ் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், வரும் மாதங்களில் இந்த கார்கள் லிஸ்ட்டில் கர்வ் காரின் பெயரும் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 8, 2024, 13:34 [IST]
English summary
Top 10 most sold cars of july 2024 in india check all details here
மேலும்... #car sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X