கணவன், மனைவி மட்டுமல்ல குடும்பத்துல எல்லாரும் ஒரே கார்ல போகலாம்! ஒரே மாசத்துல இத்தனை பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் சமீப நாட்களாக குடும்பத்துடன் பயணிக்கும் கார்கள் விற்பனையாகி இருக்கிறது. முக்கியமாக அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க கூடிய கார்களை மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் இந்த ரக கார் விற்பனையில் பெரிய மாற்றம் ஒன்று நடந்துள்ளது. இப்படியாக ஏழு சீட்டர் கொண்ட கார்களின் விற்பனை கடந்த அக்டோபர் மாதம் எப்படி இருந்தது என்று விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கடந்த அக்டோபர் மாதம் இருப்பதிலேயே அதிகமாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார்தான் விற்பனையாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 14,209 கார்கள் விற்பனையாகி இருந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இது 18,785 கார்களாக விற்பனை உயர்ந்துள்ளது. இது விற்பனையில் 32 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

top 10 mpv cars october 2024

2 வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 15,677 கார்கள் விற்பனையாகி உள்ளன. மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 10,435 கார்கள் விற்பனையாகி உள்ளன.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 9,849 கார்கள் விற்பனையாகி உள்ளன. அடுத்ததாக டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா கார் இருக்கிறது. இந்த அக்டோபர் மாதம் மொத்தம் 8,838 கார்கள் விற்பனையாகி உள்ளன.

top 10 mpv cars october 2024

அடுத்த இடத்தில் கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 3,285 கார்கள் தான் விற்பனையாகியுள்ளன. இந்த இரு கார்களுக்கும் இடையே மிகப் பெரிய அளவுக்கு விற்பனை எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கிறது. இந்த செக்மெண்டில் இந்த இடம் காலியாக இருக்கிறது என சொல்லலாம். போட்டி நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் தங்கள் புதிய கார்களை களம் இறக்கினால் நிச்சயம் குறிப்பிடத்தக்க விற்பனை பெரும்.

அடுத்த இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 3684 கார்கள் விற்பனையாகி உள்ளன. அதற்கு அடுத்ததாக ஹோண்டா நிறுவனத்தின் அல்கஸார் கார் இருக்கிறது. இந்த கார்கள் 2204 கார்கள் விற்பனையாகி உள்ளன.

top 10 mpv cars october 2024

இந்த பட்டியில் கடைசி இடத்தில் டாடா நிறுவனத்தின் சஃபாரி கார். இந்த கார் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 2086 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் மூன்று கார்களும் அதிக விலையுள்ள கார்கள் என்பதால் இந்த கார்களின் விற்பனை எண்ணிக்கை எப்பொழுதும் குறைவாக தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக முதல் இடத்தில் பிரபலமான மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் சிறப்பான எண்ணிக்கையில் விற்பனையில் இருக்கும். ஆனால் தற்போது இந்த இடத்தை மஹிந்திரா நிறுவனம் நழுவ விட்டு முதலிடத்தில் மாருதி நிறுவனத்தின் பிடித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான். குறைவான விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக கார் என்பதால் இந்த கார் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகிவிட்டது.

மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பொருத்தவரை ரூபாய் 8.69 லட்சம் முதல் 13.3 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. மிடில் கிளாஸ் மக்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் பயணிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு குறைந்த விலையில் அதிக சீட்டர் கொண்ட பெரிய கார் கிடைப்பதால் பலன் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள மக்களுக்கு தற்போது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பயணிக்கும் மிக கார்கள் காண தேவை அதிகரித்துள்ளது. மக்கள் பலர் வாழ்நாளில் ஒருமுறை காரை வாங்குகிறோம். இதில் முடிந்த அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுக்கொண்டு அதிகமான பொருட்களையும் ஏற்றுக்கொண்டு பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அதனால் இந்த ரக கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 5:00 [IST]
English summary
Top 10 mpv cars october 2024 maruti suzuki ertiga best seller
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X