மாருதியை பின்னுக்கு தள்ளி முதல் இரண்டு இடத்தையும் பிடித்த டாடா! டாப் 10 எஸ்யூவி கார்கள் இதுதான்!

பிப்ரவரி மாதம் பிறந்துவிட்ட நிலையில் கடந்த ஜனவரி மாத விற்பனை விபரங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன இதன்படி இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையான டாப் 10 எஸ்யூவி கார்களின் பட்டியல் தற்போது நமக்கு கிடைத்துள்ளது. இதில் டாடா,மாருதி, மஹிந்திரா, ஹூண்டாய், கியா, உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் இருக்கின்றன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த பட்டியலில் 10வது இடத்தில் ஹுண்டாய் எக்ஸ்டர் கார் இருக்கிறது. இந்த கார் சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜனவரி மாதம் மட்டும் 8,229 கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு இந்த கார் விற்பனையில் இல்லை என்பதால் இதன் வளர்ச்சி விகிதம் குறித்த தகவல் நமக்கு கிடைக்காது.

top 10 suv cars january 2024

பட்டியலில் 9வது இடத்தில் கியா சோனட் கார் இருக்கிறது. ஜனவரி மாதம் இந்த கார் 11,530 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9261 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 25 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. பட்டியலில் 8வது இடத்தில் ஹுண்டாய் வென்யூ கார் இருக்கிறது.

இந்த ஹூண்டாய் வென்யூ கார் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 11,831 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10,738 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 10 சதவீத காரர்கள் விற்பனையாகி உள்ளது. ஏழாவது இடத்தில் ஹுண்டாய் கிரெக்டா கார் இருக்கிறது.

top 10 suv cars january 2024

ஹூண்டாய் கிரெட்டா காரை பொருத்தவரை ஜனவரி மாதம் 13,212 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,037 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 12 சதவீத விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஹுண்டாய் கிரெக்டா ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஜனவரி மாதம் தான் அறிமுகமாகியது. இதனால் அடுத்த ஒரு சில மாதங்களில் இது முதலிடத்திற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

பட்டியலில் 6வது இடத்தில் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா கார் இருக்கிறது. இந்த கார் 13,438 என்ற எண்ணிக்கையில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையாகி உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8,662 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 55% விற்பனை அதிகரித்துள்ளது. பட்டியலில் ஐந்தாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது.

top 10 suv cars january 2024

மாருதி ஃபிராங்க்ஸ் காரை பொருத்தவரை கடந்த ஜனவரி மாதம் 13,643 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் தான் இந்த கார் முதன் முதலாக காட்சிப்படுத்தப்பட்டது என்பதால் தற்பொழுது விற்பனைக்கு வரவில்லை. இதனால் விற்பனை வளர்ச்சி என்பதை கணக்கிட முடியாது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விற்பனை எண்ணிக்கை மட்டுமே நமக்கு கிடைக்கும்.

அடுத்ததாக பட்டியலில் 4வது இடத்தில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் இருக்கிறது கடந்த ஜனவரி மாதம் 14,293 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் மேலும் 2,715 கார்கள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது 64% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதால் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் மொத்தமாக வளர்ச்சியடைந்துள்ளது.

top 10 suv cars january 2024

பட்டியலில் 3வது இடத்தில் மாருதி சுஸூகி பிரெஸ்ஸா கார் இருக்கிறது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் சிறப்பாக விற்பனையில் இருக்கும் காராக இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மட்டும் 15,303 கார்கள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 14,359 கார்கள் விற்பனையாகியது. தற்போது விற்பனை என்பது 7 சதவீதம் தான் அதிகரித்துள்ளது.

பட்டியலில் இரண்டாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த காரும் நீண்ட ஆண்டுகளாக சிறப்பான விற்பனையில் இருக்கும் கார் தான். கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 17,182 கார்கள் விற்பனையாக இருக்கிறது. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 15,567 கார்கள் விற்பனையாக இருந்தது தற்போது 10% கார்களின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

அடுத்ததாக டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரை பொறுத்தவரை இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் காராக இருக்கிறது. இந்த கார் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 17,978 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு ஜனவரி மாதம் 12,006 கார்கள் மட்டுமே விற்பனையாக இருந்தது. தற்போது கூடுதலாக 50 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி தான் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான செக்மெண்டாக இருக்கிறது. ஒரு காலத்தில் சிறிய ரக குறைந்த விலைக்கு கார்களை மட்டுமே மக்கள் அதிகம் விரும்பி வந்த நிலையில் தற்போது பாதுகாப்பான காருக்கான தேடல் மக்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது. இதனால் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் நிச்சயம் அதிகமான விற்பனையில் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 10, 2024, 12:42 [IST]
English summary
Top 10 suv cars january 2024 sales punch nexon brezza creta
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X