தனி குடும்பத்துக்கான இந்த ஹூண்டாய் கார் தான் நம்பர் 1... மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க!!
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இந்த வகையில் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. கடந்த ஜூலையில் விற்பனையில் டாப்-10 இடங்களை பிடித்த எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கையையும், வழக்கத்தை காட்டிலும் அவை எவ்வளவு அதிகம் என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2024 ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக முதலிடத்தை பிடித்திருப்பது ஹூண்டாய் கிரெட்டா ஆகும். எஸ்யூவி கார்கள் என்று மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே கடந்த ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது.

அதாவது, கடந்த மாதத்தில் இந்தியாவில் அதிக பேர் வாங்கிய கார் கிரெட்டா ஆகும். கடந்த ஜூலை மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 17,350 ஆகும். அதுவே கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 14,062 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ஜூலையில் கிரெட்டா கார்களின் விற்பனை ஆனது 23% அதிகரித்துள்ளது.
கிரெட்டாவுக்கு அடுத்து, 2வது இடத்தில் டாடா மோட்டார்ஸின் பஞ்ச் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 16,121 ஆகும். இதனை காட்டிலும் 34% குறைவாக, 2023 ஜூலையில் 12,019 பஞ்ச் கார்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் டாடா பஞ்ச் கார் தான் இந்தியாவின் நம்பர் ஒன் காராக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இந்த வரிசையில் 4வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 14,676 பிரெஸ்ஸா கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2023 ஜூலையில் இதனை காட்டிலும் 2,867 கார்கள் அதிகமாக 16,543 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 4வது இடத்தில், டாடா மோட்டார்ஸின் மற்றொரு பிரபலமான எஸ்யூவி காரான நெக்ஸான் உள்ளது.
2023 ஜூலையில் 12,349 நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் 13,902 நெக்ஸான் கார்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து 5வது இடத்தில், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா காரான ஸ்கார்பியோ 12,237 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 ஜூலையில் வெறும் 10,522 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

6வது இடத்தை மாருதி சுஸுகியின் மாடர்ன் காரான ஃப்ரான்க்ஸ் பெற்றுள்ளது. பிரபலமான பலேனோ காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஃப்ரான்க்ஸ் கடந்த ஜூலையில் 10,925 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் சுமார் 13,220 ஃப்ரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 7வது இடத்தை மஹிந்திராவின் புத்தம் புதிய காரான எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ பிடித்துள்ளது.
கடந்த ஜூலையில் சரியாக 10 ஆயிரம் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 ஜூலையில் அந்த சமயத்தில் விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 கார் வெறும் 4,533 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களை கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா மற்றும் ஹூண்டாய் வென்யூ பிடித்துள்ளன. இவற்றின் கடந்த ஜூலை மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 9459, 9397 மற்றும் 8840 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் கிரெட்டாவை அப்டேட் செய்திருந்தது. அதன் மூலமாக மெல்ல, மெல்ல அதிகரித்துவந்த கிரெட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை கடந்த ஜூலை மாதத்தில் மற்ற கார்கள் அனைத்தின் விற்பனையையும் முந்தியுள்ளது. இதேபோன்று, வரும் மாதங்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் விற்பனையும் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









