இந்த 10 எஸ்யூவி காரை தான் மக்கள் விரும்பி வாங்குறாங்க! முதலிடத்தில் இருக்குது சர்ப்பிரைஸ்!
இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு மாதமும் கணக்கிடுவது போல ஒவ்வொரு நிதியாண்டிற்கும் கணக்கிடுவார்கள். அதன்படி தற்போது இந்த நிதியாண்டிற்கான முதல் 7 மாத விற்பனை விபரங்கள் எப்போது வெளியாகியுள்ளன. இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை விற்பனையான 10 எஸ்யூவி கார்கள் பற்றிய விவரங்களை தான் இங்கே காணப்படுகிறோம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது இந்த கார் தான். இதற்கு முன்னர் விற்பனையான XUV 300 மற்றும் XUV 3XO ஆகிய இரண்டு கார்களின் விற்பனையும் சேர்த்து இந்த விற்பனை விபரம் வெளியாகி உள்ளது. மொத்தம் 60,063 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 34,632 கார்கள் மட்டுமே விற்பனையாகிறது. தற்போது 73 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

கியா சோனட்: காரை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மொத்தம் 64,716 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 45,559 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 42 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
ஹூண்டாய் வென்யூ: இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் இந்த கார் தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 67,422 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 76,956 கார்கள் விற்பனையாகிறது. தற்போது 12 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மாருதி கிராண்ட் விட்டாரா: இந்த பட்டியலில் 7வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மொத்தம் 69,834 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த நிதியாண்டின் இளைய காலகட்டத்தில் மொத்தம் 70,572 விற்பனையாகிறது. ஒரு சதவீதம் அளவுக்கு மட்டுமே இந்த காரின் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 7வது இடத்தில் டாடா நெக்ஸான் கார் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 87,109 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த நிதியாண்டு இதே காலகட்டத்தில் 95,862 கார்கள் விற்பனையாகின்றது. தற்போது 9 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 5வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 90,750 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 74,834 கார்கள் விற்பனையாகி இருந்தது. இது 21 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியலில்4வது இடத்தில் இருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் தான் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 96,920 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 73,427 கார்கள் விற்பனையாகி இருந்தது. இது 32 சதவீத வளர்ச்சியாகும்.
இந்த பட்டியில் மூன்றாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 1,10,227 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 97,978 காட்டுல தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 12 சதவீத அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் இருக்கிறது. இந்த காரை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் முதல் 1,13,913 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 96,770 கார்கள் விற்பனையாகிவிட்டது. தற்போது 18 சதவீத விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் காரர் தான் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மொத்தம் 1,17,560 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதில் கடந்த நிதியாண்டில் 87,943 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 34 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களின் விற்பனை கணிசமான அளவு வளர்ச்சியப்பட்டுள்ளது நமக்கு தெளிவாக தெரிகிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 7,54,533 கார்கள் மட்டுமே விற்பனையான நிலையில் இந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 8,78,071 கார்கள் விற்பனையாகி உள்ளது. இது 16 சதவீத வளர்ச்சியாகும். நிச்சயம் எதிர்காலத்தில் எஸ்யூவி கார்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









