ஒரே மாசத்துல இவ்வளவு ஆட்டோ வித்துடுச்சா! ஆட்டோ ஓட்டுனா ஏகப்பட்ட வருமானம் வரும் போலயே!

இந்தியாவில் டூவீலர், கார் எந்த அளவுக்கு விற்பனை ஆகிறதோ அதே அளவிற்கு மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் ஆட்டோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் ஆட்டோக்கள் அக்ரிகேட்டர்கள் மூலம் இயக்கப்படுவது அதிகமாகி வருவது காரணமாகவும், ஆட்டோ விற்பனை அதிகரித்து வருகிறது. இப்படியாக கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் என்னென்ன நிறுவனங்கள் எவ்வளவு ஆட்டோக்களை விற்பனை செய்துள்ளது என்ற விபரங்களை தான் விரிவாக காணப்போகிறோம்.

ஆயிரக்கணக்கான மக்கள் தினம்தோறும் ஆட்டோகளில் பயணம் செய்து வருகிறார்கள். இந்தியாவில் ஆட்டோ மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளும் குடும்பங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்த ஆட்டோ தொழில் மிகப் பெரிய அளவில் வருமானத்தை ஈட்டி தருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கணிசமான அளவு ஆட்டோக்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் விற்பனையான ஆட்டோ குறித்த விபரங்களை பார்ப்போம்.

Top 10 three wheeler companies

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தான் இந்த மூன்று சக்கர வாகன செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் 34,000 மூன்று சக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்தியாவிலேயே மிக அதிகமான 3 சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் இதுதான். பல ஆண்டுகளாக இந்நிறுவனம் தான் முதலிடத்தில் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் பியாஜியோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 6850 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. முதல் இடத்தில் இருக்கும் பஜாஜ் நிறுவனம் 34,238 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனம் மிகக்குறைவான எண்ணிக்கையிலான வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Top 10 three wheeler companies

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தமாக 5,449 வாகனங்களை விற்பனை செய்துள்ளது மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் மற்றும் மஹிந்திரா ரெவா எலெக்ட்ரிக் வெஹிகிள் பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்கள் மூலம் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த மூன்று நிறுவனங்களின் விற்பனை கூட்டுத் தொகை தான் இந்த 5449 என்பதாகும்.

நான்காவதாக ஒய்சி எலெக்ட்ரிக் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 3355 மூன்று சக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்து உள்ளது. இந்தியாவில் கணிசமான அளவு எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் விற்பனையும் அதிகரித்து வருவது இங்கு நாம் நிச்சயம் குறிப்பிட வேண்டியது தான். டூவீலரில் ஸ்கூட்டர் எந்த அளவுக்கு எலெக்ட்ரிக் செக்மெண்டில் வளர்ந்துள்ளதோ அதே அளவுக்கு 3 வீலர்களிலும் எலெக்ட்ரிக் செக்மென்ட் வளர்ந்து வருகிறது.

Top 10 three wheeler companies

ஐந்தாவது இடத்தில் சைரா எலக்ட்ரிக் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இருக்கிறது இந்நிறுவனம் மொத்தம் 2471 வாகனங்களை கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளது. ஆறாவது இடத்தில் அப்துல் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் மற்றும் 2022 3 வீலர் வாகனங்களை கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்துள்ளது.

ஏழாவது இடத்தை பொருத்தவரை டெல்லி எலெக்ட்ரிக் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 1963 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எட்டாவது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1746 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

9வது இடத்தில் மினி மெட்ரோ இவி எல்எல்பி என்ற நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் 1296 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 10வது இடத்தில் யுனிக் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1174 மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 94,000 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை என்பது கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. டூவீலர் கார் போல அல்லாமல் மூன்று சக்கர வாகனங்கள் ஒரு குடும்பத்தின் வாழ்வாதார வருமானத்திற்கு வழி வகுக்கும் வகையில் இந்தியாவில் இயங்கி வருகிறது. இதன் விற்பனை அதிகமாவது இந்தியாவில் குடும்பங்கள் மத்தியில் வருமானங்கள் அதிகமாவதற்கு ஒரு சான்றாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 10, 2024, 10:42 [IST]
English summary
Top 10 three wheeler companies india bajaj piaggio mahindra
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X