இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன்ல நிக்குறாங்க! டாப் 15 எஸ்யூவி கார்கள் இது தான்!
இந்தியாவில் சமீப நாட்களாக எஸ்யூவி காரர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் வாகனம் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான எஸ்யூவி கார்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகின்றன. அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகமான விற்பனையான டாப் 15 எஸ்யூவி கார்களின் விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
இந்தப் பட்டியலில் 15வது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 6,198 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,647 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.

14வது இடத்தில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 6,959 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடன் 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10,558 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 34 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் 13வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 8,150 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9,519 கார்கள் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 14 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 12வது இடத்தில் மகேந்திரா நிறுவனத்தின் கார் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 8,843 காரர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 5,417 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 63 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் 11வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 9000 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 4961 கார்கள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது 81 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த பட்டியலில் 10வது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 9,646 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8,555 கார்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது 13 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் 9வது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் வென்யூ கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 10,259 காரர்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12,204 கார்கள் விற்பனையாகிறது. தற்போது 16 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் கிராண்டு விட்டாரா கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 10,267 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,736 கார்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது இந்த காரின் விற்பனை 13 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் கியா நிறுவனத்தின் சோனட் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 10,335 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெறும் 4984 கார்கள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது 107 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 11,470 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 203-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15,325 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 25 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 13,711 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13,036 கார்கள் விற்பனையாக இருந்தது. 5% அளவிற்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியலில் 4வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 13,874 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,455 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. 21 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 16,388 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11,849 கார்கள் விற்பனையாக இருந்தது. தற்போது 22 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா கார் இருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 15,322 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15,001 கார் விற்பனையாகி இருந்தது. 2 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த பட்டியில் முதல் இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் இருக்கிறது. இந்த கார் கடந்த செப்டம்பர் மாதம் 15,902 கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12,717 கார்கள்தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 21 சதவீதம் அளவுக்கு இந்த காரின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பர்க் கருத்து: இந்தியாவில் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில், 15 வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன . இதன் மூலம் இந்த செக்மெண்டில் அதிக எண்ணிக்கையிலான சிறப்பான வாகனங்கள் விற்பனையாவது நமக்கு தெரிகிறது. ஒவ்வொரு வாகனங்களிலும் விற்பனை எண்ணிக்கை என்பது வெகு சில எண்ணிக்கையிலேயே அதிகமாகவும் குறைவாகவும் உள்ளன. இதனால் அனைத்து வாகனங்களும் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருவது நமக்கு தெளிவாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









