டாடா, ஹூண்டாய் சண்டை வீதிக்கே வந்துருச்சு... போட்டி போட்டுகிட்டு விலை குறைவான கார்களை கொண்டு வர போறாங்க!
பிப்ரவரி முடிந்து மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. அதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்த டாப்-3 நிறுவனங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது.
இதில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் வழக்கம் போல முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,30,411 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,19,862 ஆக மட்டுமே இருந்தது. இது 8.8 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹூண்டாய் நிறுவனம் 46,006 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 39,819 ஆக மட்டுமே இருந்தது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும்.
இந்த பட்டியலில் 3வது மற்றும் கடைசி இடத்தை டாடா (Tata) நிறுவனம் பிடித்துள்ளது. நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா நிறுவனம் 43,656 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 39,108 ஆக மட்டுமே இருந்தது. இது 11.6 சதவீத வளர்ச்சி ஆகும்.

இவை வாஹன் பதிவு தரவுகள் (Vahan Registrations Data) அடிப்படையிலானது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி நிறுவனத்தை வீழ்த்துவது என்பதெல்லாம் தற்போதைக்கு நடக்காத காரியம் என்பது என்பது நன்றாக புலனாகிறது.
ஆனால் 2வது இடத்திற்கு ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் இடையே மிக கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது. வெறும் 2,350 கார்கள் வித்தியாசத்தில் மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2வது இடத்தை ஹூண்டாய் நிறுவனத்திடம் இழந்துள்ளது. ஒரு சில மாதங்கள் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, டாடா நிறுவனம் 2வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் வரும் காலங்களில் ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் இடையேயான போட்டி இன்னும் கடுமையாகலாம் என்பதுதான் எங்கள் கருத்து. 2வது இடத்தை உறுதி செய்வதற்காக ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் மிக கடுமையாக முயற்சி செய்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய 2 நிறுவனங்களுமே பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ஓரளவிற்கு விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும். ஆனால் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கையை பொறுத்தவரையில், டாடாதான் கில்லி என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








