இந்தியாவுலேயே நல்லா சேல்ஸ் ஆகுற கார் இதெல்லாம்! ஆனா இந்த விஷயம் தெரிஞ்சா யாரும் வாங்க மாட்டாங்க!

இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் சில பாதுகாப்பு ரேட்டிங்கில் மிக மோசமான ரேட்டிங்கை பெற்ற காராக இருக்கிறது. இருந்தாலும் மக்கள் பலர் இந்த கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்திய மக்கள் தற்போது பாதுகாப்பான கார்களை தான் விரும்புகிறார்கள் என்ற பேச்சு நிலவி வரும் நிலையில், இந்த விற்பனை நிலவரம் தலைகீழாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஒரு காலத்தில் குறைந்த விலை கார்களை மட்டுமே மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள் என்ற நிலைமை இருந்தது தற்போது மாறி உள்ளது. பாதுகாப்பு நிறைந்த கார்கள் தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வருவதாக, தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேச்சு எழுந்துள்ளது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் வாகனங்கள் பாதுகாப்பு ரேட்டிங்கில் சிறப்பான ஸ்டார்களைப் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை கையில் எடுத்துள்ளனர்.

top 3 car low safety rating

குறிப்பாக டாடா நிறுவனம் பாதுகாப்பு நிறைந்த கார்களை விற்பனை செய்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை பிடித்த பின்பு மற்ற நிறுவனங்களும் பாதுகாப்பான கார்களை தயாரிக்கும் நோக்கில் இறங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் பாதுகாப்பான கார்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை ஒரு புறம் இப்படி இருக்க மறுபுறம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மூன்று கார்கள் பாதுகாப்பில் மிக மோசமான ஸ்டார்களை பெற்ற கார்களாக உள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் டாப் 10 பட்டியலில் மாருதி நிறுவனம் தான் எப்பொழுதும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனத்தின் 6 முதல் 7 கார்கள் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பெற்று விடும். இந்த கார்கள் எல்லாம் பட்ஜெட் கார்களாக இருப்பதால் மக்கள் இந்த கார்களை விரும்பி வாங்கி வருகிறார்கள். இதில் மூன்று கார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கில் மிக மோசமான ரேட்டிங்கை பெற்ற காராக உள்ளது.

top 3 car low safety rating

வேகன்ஆர்: மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் தான் அதிகமான விற்பனையாகும் காராக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 2,00,177 கார்கள் விற்பனையாகி உள்ளன. டாப் 10 பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இந்த கார் இடம் பெற்றிருந்தாலும், பாதுகாப்பு ரேட்டில் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது. குளோபல் என்கேப் சோதனையில் பெரியவர்களுக்கான கிராஸ் டெஸ்டில் ஒரு ஸ்டாரை பெற்றுள்ளது.

குழந்தைகளுக்கான சோதனையில் 0 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்த காரின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் ரூபாய் 5.54 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் அதிகம் விற்பனையாவதற்கு முக்கியமான காரணம் இதன் மைலேஜ் தான். இதன் பெட்ரோல் இன்ஜின் கார் 25.19 கிலோமீட்டர் மைலேஜை வழங்குகிறது. சிஎன்ஜி கார் 33.47 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகிறது.

top 3 car low safety rating

மாருதி ஸ்விஃப்ட்: மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்ற காராக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் 1,95,312 கார்கள் விற்பனையாகி உள்ளன. வேகன்ஆர் காருக்கு அடுத்து சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இந்த கார் தான் இருக்கிறது. ஆனால் இந்த காரின் பாதுகாப்பு ரேட்டிங் என்பது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது.

குளோபல் என்கேப் சோதனையில் இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஒரு ஸ்டாரையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் ஒரு காரை மட்டுமே பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் ரூபாய் 5.99 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோல் இன்ஜி் 22.56 கிலோ மீட்டர் மைலேஜ் 30.90 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

ஆல்டோ கே10: மாருதி நிறுவனத்தில் குறைந்த விலையில் விற்பனையாகும் கார் இதுதான் கடந்த நிதியாண்டில் 1,11,095 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த காரின் பாதுகாப்பு ரேட்டிங்கும் மிக மோசமாக இருக்கிறது. குளோபல் என்கேப் சோதனையில் இந்த உட்படுத்தப்பட்டது. அப்பொழுது பெரியவர்களுக்கான ரேட்டிங்கில் இரண்டு ஸ்டார்களை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான ரேட்டிங்கில் 0 ஸ்டாரை பெற்றுள்ளது.

இருந்தாலும் இந்தியாவிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் கார் என்பதால் மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். முதல் தடவை கார் வாங்கும் பலர் இந்த காரை தான் தேர்வு செய்கிறார்கள். இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ 3.90 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதன் பெட்ரோல் இன்ஜின் கார் 24.90 கிலோமீட்டர் மைலேஜ் கார் 33.85 கிலோமீட்டர் மைலேஜ்யும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மக்கள் மனதில் வாகனங்கள் வாங்கும்போது அதன் விலை மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதன் பிறகு தான் பாதுகாப்பு என்ற நிலை இருக்கிறது. முதல் தலைமுறையாக வாகனம் வாங்குபவர்கள் பாதுகாப்பை விட விலையை மிக முக்கியமாக கருத்துவதால் இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 16, 2024, 14:52 [IST]
English summary
Top 3 car low safety rating high sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X