இவையே குழந்தைகளுக்கான பாதுகாப்பான கார்கள்! கோடி கோடியா கொட்ட வேண்டாம்.. ரூ.12 லட்சத்துக்குள்ளேயே கிடைக்குது!

விபத்து எப்போது, நடக்கும் எப்படி நடக்கும் என்பதை நம் யாராலும் கணிக்கவே முடியாது. என்னதான் கவனத்துடன் நாம் சென்றாலும், எதிரில் வரும் வாகனம் சற்று கவனக்குறைவாக வரும் எனில் அந்த விபத்தை தவிர்க்கவே முடியாது. இந்த மாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே வாகன உற்பத்தியாளர்கள் பலர் இந்தியர்களுக்காக அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த மற்றும் அதீத பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். பெரியவர்களுக்கு மட்டுமல்ல சிறியவர்களுக்கும் அதிக பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற மாதிரியான வாகனங்கள் தற்போது இந்திய சந்தையில் அதிகளவில் விற்பனைக்குக் கிடைக்க தொடங்கியிருக்கின்றன.

அந்த கார் மாடல்களில் ரூ.12 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்கப்படும் டாப் 5 கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கைப் பெற்றிருக்கும் கார் மாடல்களைப் பற்றியும், அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களையுமே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Cars for child safety in india

டாடா நெக்ஸான் (Tata Nexon): குளோபல் என்சிஏபி (Global NCAP) இடமிருந்து 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் இந்தியத் தயாரிப்பாக இந்த கார் பார்க்கப்படுகின்றது. மிக மோசமான விபத்தில் இருந்தும் இந்த கார் பயணிகளைப் பாதுகாக்கும் என்பதற்கான சான்றே இந்த 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் ஆகும்.

இந்த எஸ்யூவி (SUV) கார் பெரியவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளுக்குமான பாதுகாப்பான கார் என்பது கூடுதல் சிறப்பான தகவல் ஆகும். ஆமாங்க, குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் முழு புள்ளிகளையேப் பெற்றிருக்கின்றது. இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ஏர்பேக்குகள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இசோஃபிக்ஸ் (ISOFIX) குழந்தை இருக்கை நங்கூரங்கள் வழங்கப்பட்டுள்ளன. டாடா நெக்ஸான் ரூ. 8 லட்சம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆறு ஏர் பேக்குகள் மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தாங்கி இருக்கின்றது.

அந்தவகையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏபிஎஸ், இபிடி, பார்க்கிங் சென்சார்கள், அவசரக கால மற்றும் பிரேக் டவுன் கால் அசிஸ்டன்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல், நவீன கால தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் டாடா மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதி உடன் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 10.25 அங்குல முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பின் பக்கத்திற்கான ஏசி வெண்டுகள், இரண்டாம் தலைமுறை ஐஆர்ஏ இணைப்பு தொழில்நுட்பம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் ஆடியோ சிஸ்டமும் உள்ளிட்டவையும் நெக்ஸானில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus): இந்த காரும் டாடா நெக்ஸானைப் போலவே பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் முழு மதிப்பெண்களையும் பெற்றிருக்கின்றது. இந்த காரின் தொடக்க விலை ரூ.11.56 லட்சம் ஆகும். மிக முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாக டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிஎஸ், பார்க்கிங் சென்சார்கள், மும்முனை ஆங்கர் சீட் பெல்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, ரியர் பார்க்கிங் கேமிரா, எலெக்ட்ரானிக் கன்ட்ரோல், மல்டி கொல்லிசன் பிரேக்குகள், டயர் பிரஷ்ஷர் குறைந்தால் எச்சரிக்கும் வசதி மற்றும் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விர்சுஸ் காரில் இடம் பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஸ்கோடா ஸ்லேவியா (Skoda Slavia): ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் காரை கட்ட பயன்படுத்தப்படும் அதே தளமே ஸ்கோடா ஸ்லேவியா காரின் கட்டமைப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆகையால், பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் விர்சுஸுடன் அப்படியே ஒத்துப் போகும். எனவே, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு உகந்த கார் மாடலாக ஸ்லேவியாவும் இருக்கின்றது.

ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெரியவர்கள் மற்றும் சிறியவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. இதில் குழைந்தைகளின் பாதுகாப்பிற்காக ஐசோஃபிக்ஸ் இருக்கை நங்கூரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதுதவிர, பொதுவான பாதுகாப்பு அம்சமாக ஆறு ஏர் பேக்குகள், ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், இஎஸ்பி, மல்டி கொல்லிசன் பிரேக்கிங், எலெக்ட்ரானிக் டிஃப்ரன்சியல் லாக், வாகன ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவையும் ஸ்லேவியாவில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த கார் இந்தியாவில் ரூ. 11.53 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): நடுத்தர அளவிலான இந்த செடான் காரும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பான பாயணத்திற்கு உகந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதுவும், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையே பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த காரிலும் சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஐசோஃபிக்ஸ் இருக்கை மவுண்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 34 புள்ளிகளுக்கு 28.18 புள்ளிகளையும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 42 புள்ளிகளையும் வெர்னா பெற்றிருக்கின்றது. 18 மாதங்கள் தொடங்கி 3 வயது குழந்தைகளுக்குகூட இந்த காரில் பாதுகாப்பு வளையம் அதிகமாக இருப்பதாக குளோபல் என்சிஏபி தெரிவித்து இருக்கின்றது.

இத்தகைய பாதுகாப்பு வசதிக்காக இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கி இருக்கின்றது. ஆறு ஏர்பேக்குகள், மும்முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் ஆகியவையே மிக முக்கியமான பாதுகாப்பு கருவிகளாக வெர்னாவில் காட்சியளிக்கின்றன.

இதுதவிர அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக தானாக பிரேக் பிடித்தல், வேகமாக செல்லும்போது தானாக கதவுகள் லாக் ஆகுவது, ஆட்டமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் விபத்து நேரங்களில் தானாகவே கதவுகள் திறத்தல் போன்ற வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த கார் ரூ. 11 லட்சம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டாடா பஞ்ச் (Tata Punch): இந்த பட்டியலில் நாம் பார்க்க இருக்கும் மிகவும் விலை குறைவான கார் மாடல் இதுவே ஆகும். அதேவேளையில், பாதுகாப்பு விஷயத்தில் மிக மிக உயர்ந்த வாகனமாக இது காட்சியளிக்கின்றது. பெரியவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தைகளின் பாதுகாப்பில் 4 நட்சத்திர ரேட்டிங்கையும் இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது.

டாடா பஞ்ச் இந்தியாவில் ரூ. 6.12 லட்சம் முதல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இரட்டை ஏர்பேக், ஏபிஎஸ், ஐசோஃபிக்ஸ் சிறுவர்களுக்கான இருக்கை ஆங்கர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.

இத்துடன், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், அனைத்து இருக்கைகளிலும் மும்முனை பெல்ட், கார்னரிங் வசதிக் கொண்ட முன் பக்க பனி மின் விளக்கு, பெரிமெட்ரிக் அலாரம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருக்கைக்கான சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்டவையும் டாடா பஞ்சில் வழங்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, பிரேக் ஸ்வே கன்ட்ரோல் மற்றும் டயர் பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்டவற்றையும் டாடா இந்த காருக்கு வழங்குகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த கார் மாடல்கள் சிறியவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமான பாதுகாப்பை வழங்கும் கார் மாடல்கள் ஆகும். சமீப காலமாக இந்தியர்கள் மைலேஜ் போன்ற மற்றவற்றிற்கு பதிலாக அதிக முக்கியத்துவத்தை பாதுகாப்பிற்கு வழங்கி வருகின்றனர். இதன் விளைவாக இந்தியாவில் அதிக பாதுகாப்பான கார்களின் பட்டியல் மிகப் பெரிய அளவில் உயர்ந்துக் காணப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 11:00 [IST]
English summary
Top 5 affordable cars with best child safety features india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+