2024இல் உங்களை கவர்ந்த கார் எது? இந்த டாப்-5 கார்களை பார்த்த பின் முடிவு பண்ணுங்க!!
உலகின் முக்கியமான கார் சந்தைகளுள் நம் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. இதனாலேயே பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் நம் நாட்டில் எப்படியாவது நுழைந்துவிட முயற்சிகின்றன. அதில் சில நிறுவனங்கள் ஏற்கனவே வெற்றிக்கரமாக நுழைந்தும் விட்டன. இவ்வாறு புது, புது நிறுவனங்கள் மார்க்கெட்டிற்குள் வருவதினாலேயே விற்பனைக்கு வரும் கார்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேநேரம், இந்திய கார் நிறுவனங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ச்சியாக தங்களது புதிய கார்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வகையில், நிறைவு பெறவுள்ள இந்த 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப்-5 கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்தியாவில் இப்போதும் அம்பாசிடார் காரின் டிசைனுக்கு வரவேற்பு உள்ளது. அதற்கு சிறந்த உதாரணம், டிசைர் ஆகும். ஏனெனில், மாருதி சுஸுகி டிசைர் கார் பார்ப்பதற்கு கொஞ்சம் அம்பாசிடாரை போன்றே இருக்கும். இதனாலேயே ஒவ்வொரு மாதமும் குறைந்தது 10 ஆயிரம் டிசைர் கார்கள் விற்பனையாகி வருகின்றன. இருப்பினும், டிசைர் காரை இந்த ஆண்டில் மாருதி சுஸுகி அப்டேட் செய்து அறிமுகம் செய்தது.

மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX): 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா தார் வாகனத்திற்கு மார்க்கெட்டில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், தாரில் ஒரேயொரு குறையாக 3-கதவு மட்டுமே வழங்கப்படுவது பார்க்கப்பட்டது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் விதமாக 5 கதவுகளுடன் மஹிந்திரா தார் ராக்ஸ் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போது அறிமுகம் செய்யப்பட்டது.

சிட்ரோன் பசால்ட் (Citroen Basalt): பிரெஞ்சு கார் நிறுவனமான சிட்ரோன் இந்தியாவில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த சில வருடங்களாகவே போராடி வருகிறது. அந்த முயற்சியில் வெளிவந்ததே பசால்ட் ஆகும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டாடா மோட்டார்ஸின் கர்வ் காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட பசால்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.7.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன.

டாடா கர்வ் (Tata Curvv): நெக்ஸான் மற்றும் பஞ்ச் கார்களின் வெற்றியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறக்கிய கார், கர்வ் ஆகும். கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.19 லட்சம் வரையில் உள்ளன. டாடா கர்வ் இவி என்கிற எலக்ட்ரிக் கார் (Electric Car)-உம் இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ (Mahindra XUV 3XO): டாடாவில் வேலை பார்த்துவந்த பிரபல கார் டிசைனர் பிரதாப் போஸ் மஹிந்திராவுக்கு மாறிய பின்னர் வடிவமைத்த முதல் கார் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (XUV300) காரின் நெக்ஸ்ட்-ஜென்ரேஷன் (Generation) காராக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ -இன் தோற்றம் விரைவாகவே மக்களை கவர்ந்துவிட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என நாம் ஆரம்பத்தில் எதிர்பார்த்த கார்கள் அனைத்தும் கிட்டத்தட்ட அறிமுகமாகிவிட்டன. குறிப்பாக, டாடா கர்வ் மற்றும் மஹிந்திரா தார் ராக்ஸ் உள்ளிட்டவை அவற்றுள் முக்கியமானவைகள் ஆகும். இந்த டிசம்பர் மாதம் முடிவதற்குள் இன்னும் சில கார்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஆனால், முக்கியமான கார்கள் அனைத்தும் தீபாவளிக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன.


Click it and Unblock the Notifications









