34 கிமீ மைலேஜ் தரும் இந்த கார்ல ஒன்னை துணிஞ்சு வாங்கலாம்... விலையும் ரொம்ப கம்மி தான்!
இன்று பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பதால் மக்கள் பலர் அதிக மைலேஜ் தரும் வாகனங்களை தேடி வருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் எரிபொருள் செலவை மிச்சப்படுத்த முடியும் என நினைக்கிறார்கள். எரிபொருள் செலவு குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற மக்கள் நினைத்து வருகிறார்கள். இதனால் புதிதாக கார் வாங்கும் பலரும் தங்கள் வாகனங்கள் அதிக மைலேஜ் தரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். இப்படியாக அதிக மைலேஜ் தரும் டாப் 5 சிஎன்ஜி கார்கள் குறித்த விபரங்களை தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் வாகனங்களை விட சிஎன்ஜி வாகனங்கள் மீது மக்கள் மத்தியில் அதிக மவுசு இருக்கிறது. சிஎன்ஜி வாகனங்கள் குறைந்த எரிபொருள் செலவில் அதிக மைலேஜ் தரும் வாகனங்களாக இருக்கின்றன. இதனால் பொதுமக்களுக்கு அதிக பணம் மிச்சமாகிறது. இது மட்டுமல்லாமல் சிஎன்ஜி வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கும் குறைவான மாசு ஏற்படுத்தும் வாகனமாக இருக்கிறது. இப்படியாக இந்தியாவில் ரூ10 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனையாகும் டாப்5 சிஎன்ஜி கார்களைப் பற்றி பார்ப்போம்.

மாருதி வேகன்ஆர்: மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் சிஎன்ஜி வேரியண்ட் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது எரிபொருளில் 76 பிஎச்பி பவரையும் 98 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே முன் பக்கம் இரண்டு ஏர் பேக்குகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.
இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை 34.04 கிலோமீட்டர் மைலேஜ் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த காரின் விலையை பொறுத்த வரை ரூபாய் 6.44 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் சிஎன்ஜி கார் என்றால் இதுதான். ஏகப்பட்ட மக்கள் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். இந்த காரின் பெர்பார்மென்ஸும் அதேநேரம் சிறப்பான மைலேஜும் இருப்பதால் இந்த கார் அதிகமாக விற்பனையாகிறது.

மாருதி ஆல்டோ கே10: மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே10 சிஎன்ஜி வேரியண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் சிறிய ரக காராக இருக்கிறது. இதனால் இந்த காரின் விலை குறைவாக இருக்கும். அதே நேரம் இந்த காரை ஹேண்டில் செய்வதும் சுலபமாக இருக்கிறது. அதிக மைலேஜ் தரக்கூடிய காராக இருக்கிறதா இருப்பதால் மக்கள் மத்தியில் பிரபலமான காராக உள்ளது.
இந்த காரிலும் மாருதி நிறுவனம் சிஎன்ஜி வேரியண்ட்டை விற்பனை செய்து வருகிறது. சிஎன்ஜியில் இந்த கார் 33 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இதற்காக 998 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 5.96 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

டாடா டிகோர்: டாடா நிறுவனத்தின் டிகோர் காரை பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் சிஎன்ஜி எரிபொருளில் 84 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உட்புறம் அதிகமான இட வசதி இருக்கிறது. இதுபோக 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் சிறப்பான பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் உள்ளன.
இந்த காரின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 8.29 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் தான் சிஎன்ஜி வேரியண்ட் கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.47 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் சிறப்பான அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மக்களை அதிகம் ஈர்க்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்: காரில் சிஎன்ஜி வேரின் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது எரிபொருளில் 68 பிஎச்பி பவரையும் 95 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் குறைந்த விலை சிஎன்ஜி கார் என்றால் அது தான்.
இந்த காரின் விலையை பொருத்தவரை ரூபாய் 7.72 லட்சம் என்ற விலையில் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் சிஎன்ஜி எரிபொருளில் 25.61 கிலோமீட்டர் மைலேஜ் 1 கிலோ சிஎன்ஜி-கே கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் மைலேஜாகவும் ஹுண்டாய் நிறுவனத்தின் பெயருக்காகவும் இந்த காரின் வடிவமைப்பிற்காகவும் மக்கள் மத்தியில் பெயர் பெற்ற காராக இருக்கிறது.
மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ: மாருதி நிறுவனம் தனது எஸ்-பிரெஸ்ஸோ காரில் சிஎன்ஜி வேரியண்ட்டை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி எரிபொருளில் 67பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சற்று வித்தியாசமான வடிவமைப்பில் இருக்கிறது.
இந்த விலையை பொறுத்த வரை ரூபாய் 6.24 லட்சம் என்று எல்லோரும் வெளியில் விற்பனை ஆகி வருகிறது இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை சிஎன்ஜி யில் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 32.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக மைலேஜ் காரணமாக பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிஎன்ஜி காரை வாங்க விரும்புபவர்கள் குறைந்த விலையில் காரை வாங்க விரும்பினால் மேலே உள்ள பட்டியலில் உள்ள கார்கள் உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கலாம். இதில் குறிப்பிட்டுள்ள விலைகள் எல்லாம் ஆன்ரோடு விலை மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள மைலேஜ் என்ற விபரமும் ஒவ்வொரு ஓட்டுனருக்கும் ஒவ்வொரு டிரைவிங் கண்டிஷனுக்கும் ஏற்றார் போல் மாறுபடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









