அதிகம் விற்பனையாகும் டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி-க்கள் இவைதான்! முதலிடத்தில் இருப்பது எந்த கார் தெரியுமா?

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-5 காம்பேக்ட் எஸ்யூவி (Top-5 Compact SUVs) கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் 1,30,563 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு 1,70,588 ஆக உயர்ந்துள்ளது. இது 31 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 1,68,278 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு 1,70,311 ஆக உயர்ந்துள்ளது. இது 1 சதவீத வளர்ச்சி ஆகும்.

Maruti Suzuki Brezza

டாடா நெக்ஸான் காரானது நூலிழையில்தான் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரிடம் முதலிடத்தை பறிகொடுத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். சரி, இந்த பட்டியலில் டாடா பன்ச் (Tata Punch) காரானது, 3வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1,29,895 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கையானது, 1,50,182 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே வரும் காலங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Nexon

இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue) கார், 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் 1,20,703 வெனியூ கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு 1,29,278 கார்களாக உயர்ந்துள்ளது. இது 7 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx), 5வது மற்றும் கடைசி இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் 94,393 ஃப்ரான்க்ஸ் கார்களை விற்ப செய்துள்ளது. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசியில்தான் விற்பனைக்கே அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பட்டியலில் எந்தவொரு காரும் விற்பனையில் வீழ்ச்சியை சந்திக்கவில்லை. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்கள், காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு எவ்வளவு பெரிய முக்கியத்துவத்தை வழங்கி வருகின்றனர்? என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். வரும் காலங்களில் இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் மேலும் வளர்ச்சியடையும் என்பதுதான் எங்கள் கருத்து.

இந்த செக்மெண்ட் கார்கள் ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் இந்த செக்மெண்ட் கார்களில் பல்வேறு அதிநவீன வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்திய வாடிக்கையாளர்கள் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பை வாரி வழங்கி கொண்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 4, 2024, 23:50 [IST]
English summary
Top 5 compact suvs in 2023 maruti suzuki brezza leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+