மாருதி லிஸ்ட்-லேயே இல்ல!! டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் முந்த முடியல!

எலக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் பல்வேறு கார் நிறுவனங்கள் ஈடுப்படுகின்றன. அவற்றுள் கடந்த 2024 மார்ச் மாத விற்பனையில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள டாப்-5 நிறுவனங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை இல்லை என்பது உண்மைதான். இருப்பினும், இந்த நிலை மெல்ல, மெல்ல மாறி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் கடந்த சில வருடங்களாகவே முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

top-5 electric car brands

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் மொத்தம் 7,005 எலக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதத்தில் 7,313 கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தால், டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது 4.21%, அதாவது 308 எலக்ட்ரிக் கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் எலக்ட்ரிக் காரை வாங்கும் 4இல் ஒருவர் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காரை தேர்வு செய்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. டாடா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் டியாகோ இவி, டிகோர் இவி, பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி என 4 விதமான எலக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

top-5 electric car brands

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து 2வது இடத்தில் எம்ஜி மோட்டார் உள்ளது. எம்ஜி பிராண்டில் இருந்து இந்தியாவில் தற்சமயம் கோமெட் இவி மற்றும் இசட்.எஸ் இவி என 2 விதமான எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இவை இரண்டையும் மொத்தமாக கடந்த மார்ச் மாதத்தில் 1,131 யூனிட்கள் இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஆனால், 2023 மார்ச்சில் வெறும் 517 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஏனெனில், அந்த சமயத்தில் எம்ஜி கோமெட் இவி எலக்ட்ரிக் கார் விற்பனையில் இல்லை. இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராக எம்ஜி கோமெட் இவி விளங்குவது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டாருக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை மஹிந்திரா பிடித்துள்ளது.

top-5 electric car brands

கடந்த மார்ச் மாதத்தில் மஹிந்திராவில் இருந்து 661 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2023 மார்ச்சில் வெறும் 259 எலக்ட்ரிக் கார்களை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்து இருந்தது. மஹிந்திராவில் தற்போதைக்கு எக்ஸ்யூவி400 என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் கார் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

மஹிந்திராவுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களாக சிட்ரோன் மற்றும் ஹூண்டாய் 4வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன. சிட்ரோனில் இருந்து கடந்த மாதத்தில் 178 எலக்ட்ரிக் கார்களும், ஹூண்டாயில் இருந்து 147 எலக்ட்ரிக் கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 மார்ச்சில் சிட்ரோனில் இருந்து 200க்கும் அதிகமான எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

top-5 electric car brands

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை குறைந்து இருப்பதற்கு காரணம், எம்ஜி, மஹிந்திரா உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து இருப்பதாகும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 8:00 [IST]
English summary
Top 5 electric car brands in india 2024 march check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X