ஒன்னு ரெண்டு எல்லாம் இல்ல மொத்தம் 5 எலெக்ட்ரிக் கார்கள் வரும் ஜனவரி மாசம் வரப்போகுது!
இந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி அதன் விற்பனையை அதிகப்படுத்த தற்பொழுது திட்டமிட்டு வருவதும் இல்லை. இந்த தீபாவளியை விட வரும் பொங்கலுக்கு அறிமுகமாக போகும் கார்களின் பட்டியலை பார்த்தால் பலதை வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது. முக்கியமாக 5 புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாக உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2025ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி நடக்க உள்ளது. இந்த கண்காட்சிக்காக தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தயாராகி வரும் நிலையில் இந்த கண்காட்சியில் அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதன் படி இந்தியாவின் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன.

ஹூண்டாய் கிரெட்டா இவி: ஹுண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை தயாரித்து ரூபாய் 20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றன. இந்த காரின் ஸ்பைப் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. இதன் வடிவமைப்பு தற்போது உள்ள பெட்ரோல் இன்ஜின் காரில் இருப்பது போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹூண்டாய் நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தினால் ஒரே சார்ஜில் 450 முதல் 500 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் இது உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுஸூகி இவி எக்ஸ்: மாருதி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. அதன்படி இந்த கார் வரும் ஜனவரி மாதம் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது0 இந்த கார் இரண்டு விதமான பேட்டரி பேக்குகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா இவி: சர்வதேச அளவில் சுஸூகி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இருக்கும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் மாருதி நிறுவனத்தின் நிறுவனத்தின் பிராண்டுக்கு மாற்றப்படும். அதன்படி இந்த காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த கார் டொயோட்டா பிராண்டின் எலெக்ட்ரிக் காராகவும் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளன.
டாடா ஹாரியர் இவி: டாடா நிறுவனம் தனது ஹாரியர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2025ம் ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலேயே வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏற்கனவே டாடா நிறுவனம் கர்வ் காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், கிட்டத்தட்ட அதே மாதிரியாக இந்த ஹாரியர் இவி காரும் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இதில் எலெக்ட்ரிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மஹிந்திரா பிஇ 05: மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ என்ற எலெக்ட்ரிக் கார்களுக்காக உருவாக்கப்பட்ட சப் பிராண்டில் பிஇ 05 என்ற எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த கார் தற்போது தயாரிப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த காரின் விளம்பர சூட்டிங் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கார் 2025ம் ஆண்டு நடக்க உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த கார் ரியர் வீல் டிரைவ் சிஸ்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்த கார் ஒரு கூபே ஸ்டைல் எஸ்யூவி ரக காராக விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள டாடா கார் மற்றும் சிட்ரோன் பசால்ட் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் களமிறங்கும்.
இந்த தீபாவளிக்கு கார் வாங்க நினைக்கும் பலர் கொஞ்சம் பொறுத்து இருந்தால் பொங்கலுக்கு ஏகப்பட்ட கார்கள் விற்பனைக்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடக்க போகும் நிலையில் இதில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகமாகிறது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் எண்ணத்தில் இருந்தால் கொஞ்சம் காத்திருந்தால் நல்ல தயாரிப்புகளை வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வரும் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் வரிசையாக பல எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகத்திற்கு தயாராகி உள்ள நிலையில் 2025ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மிக அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் உலகமே தற்போது டிரெண்ட் மாறி வருவது நமக்கு கண்கூடாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









