முதலிடத்தில் உ.பி! நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு... என்னங்க இப்படியாகிடுச்சு!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை என்பது மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதன்படி கடந்த நிதியாண்டில் இந்தியா முழுவதும் விற்பனையான எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது. இந்த விபரங்களை வைத்து தனியார் நிறுவனமான ஜேஎம்கே ரிசர்ச் மற்றும் ஆனலிட்டிக்ஸ் நிறுவனம் எந்தெந்த மாநிலங்களில் எப்படியான எலெக்ட்ரிக் வாகன டிரெண்ட்டாக இருக்கிறது என்ற விபரங்களை வெளியிட்டு இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் டாப் 10 மாநிலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 2024ம் ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் மொத்தம் 17,52,46 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த நிதியாண்ட்டை ஒப்பிடும்போது 40.31சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. ஜேஎம்கே நிறுவனத்தின் ஆய்வின்படி எலெக்ட்ரிக் டூவீலர்கள் அதிக எண்ணிக்கையிலும் அதையடுத்து எலெக்ட்ரிக் 3வீலர்கள் அதிக எண்ணிக்கையிலும் விற்பனையாகியுள்ளன. இந்த 2ரக வாகனங்கள் ஒட்டுமொத்த விற்பனையில் 94சதவீத விற்பனையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Top 5 Ev Sales States

எலெக்ட்ரிக் டூவீலரை பொருத்தவரை 10,09,356 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த நிதியாண்டு ஒப்பிடும்போது 29% அதிகமாகும். ஒட்டுமொத்த விற்பனையில் 57.60 சதவீதம் அளவிற்கு எலெக்ட்ரிக் டூவீலர்கள் தான் விற்பனையாகி உள்ளன. அடுத்த இடத்தில் எலெக்ட்ரிக் 3 வீலர் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 6,34,969 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது 56 சதவீத வளர்ச்சியாகும்.

இதைத்தொடர்ந்து எலெக்ட்ரிக் கார் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. அதன்படி எலெக்ட்ரிக் கார்கள் 99,085 கார்கள் விற்பனையாகி 82% வளர்ச்சியை பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் பஸ்களை பொறுத்தவரை 3708 பஸ்கள் விற்பனையாகி 85 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. ஜேஎம்கே நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் டாப் 5 மாநிலங்களுக்கான விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது.

Top 5 Ev Sales States

உத்தரப்பிரதேசம்: இந்த பட்டியலில் இந்தியாவிலேயே அதிக அளவிலான எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து உத்தரபிரதேசம் தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் எலெக்ட்ரிக் 3வீலர் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 3,05,355 எலெக்ட்ரிக் வாகனங்கள் கடந்த நிதியாண்டில் விற்பனையாகியுள்ளன. இது ஒட்டுமொத்த இந்திய விற்பனையில் 17.42 சதவீதமாகவும். கடந்த நிதியாண்டில் ஒப்பிடும்போது 62% அளவிற்கு இது வளர்ச்சி பெற்று உள்ளது.

எலெக்ட்ரிக் 3-வீலரை பொறுத்தவரை அந்த மாநிலத்தில் விற்பனையான ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் வாகனங்களில் 75% பங்கை வைத்துள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர் 17 சதவீதமும் எலெக்ட்ரிக் 3 வீலர் கார்கோ 6 சதவீதமும் எலெக்ட்ரிக் கார் 2 சதவீதமும் விற்பனையாகி உள்ளன. மத்திய அரசு வழங்கி வந்த ஃபேம்2 மானியத்தை அதிகம் பெற்றது. இந்த மாநிலம் தான் இந்த மாநிலத்தில் மொத்தம் 395 கோடி அளவிலான மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலத்தில் வெறும் 583 பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன் தான் இருக்கிறது. இருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மாநிலத்தில் விற்பனையாகும். அதிகமான எலெக்ட்ரிக் 3 வீலர்கள் சிம்பிளாக வீட்டிலேயே சார்ஜ் போடும் தொழில்நுட்பத்தை கொண்டிருப்பதால் இந்த ரக வாகனங்களை சார்ஜிங் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று சார்ஜ் போட வேண்டிய அவசியம் இல்லை.

மகாராஷ்டிரா: 2வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தமாக 2,12,352 வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. சர்வதேச அளவில் விற்பனையான வாகனங்கள் எண்ணிக்கையில் 12 சதவீதமாகவும் இந்த மாநிலத்தில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. ரூ1,83,879 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை 14,143 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுபோக எலெக்ட்ரிக் 3 வீலர் மற்றும் எலெக்ட்ரிக் பஸ்கள் விற்பனையாகி உள்ளன. இது முறையே 5.93% பங்கு வைத்துள்ளது.

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,69,826 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது ஒட்டுமொத்த இந்திய விற்பனையில் 9.66% ஆகும் இந்த மாநிலத்தில் எலெக்ட்ரிக் டூவீலர்கள் 1,49,767 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. எலெக்ட்ரிக் கார்களை பொறுத்தவரை 13,288 கார்கள் விற்பனையாகி உள்ளன. எலெக்ட்ரிக் டூவீலர் தான் இந்த மாநிலத்தில் 88.19 சதவீத விற்பனை பங்கை வைத்துள்ளது.

தமிழ்நாடு: இந்த பட்டியலில் தமிழகத்திற்கு 4வது இடம் தான் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 1,01,204 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. ஒட்டுமொத்த விற்பனையில் 6 சதவீத விற்பனை தான் தமிழகத்தில் நடந்துள்ளது. கடந்த நிதியாண்டையுடன் 41% அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இங்கு எலக்ட்ரிக் டூவீலர் தான் அதிகமாக விற்பனையாகியுள்ளன.

ராஜஸ்தான்: ஐந்தாவது மாநிலமாக ராஜஸ்தான் மாநிலம் தான் இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 98,351 எலெக்ட்ரிக் வாகனங்கள் கடந்த நிதியாண்டில் விற்பனையாகி உள்ளன. இது ஒட்டுமொத்த இந்திய விற்பனையில் 5.61% பங்கு தான் இந்த மாநிலத்தில் 11.34% அளவிற்கு எலெக்ட்ரிக் வாகன விற்பனை என்பது அதிகரித்துள்ளது. இங்கும் எலெக்ட்ரிக் டூவீலர் மற்றும் 3வீலர் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகி உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தமிழகம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. பல்வேறு முக்கிய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் எல்லாம் தமிழகத்தில் தான் ஆலைய அமைத்துள்ளார்கள். இருந்தாலும் தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது சற்று குறைவாக தான் இருக்கிறது. உபி மாநிலம் இந்த பட்டியலில் முதலிடம் படிக்க எலெக்ட்ரிக் 3 வீலர் பயன்பாடு அதிகரித்தது முக்கியமான காரணம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 15, 2024, 10:42 [IST]
English summary
Top 5 ev sales states india fy24 up tamil nadu report reveals
மேலும்... #auto news #india #electric vehicles
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+