ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல... கிட்டத்தட்ட 20 ஆயிரம் கார்கள்!! மாருதி சுஸுகிக்கு எல்லா மாசமும் ஜாக்பாட் அடிக்குது!

நன்கு உயரமான எஸ்யூவி கார்களுக்கு ஒருபக்கம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்தாலும், ஹேட்ச்பேக் கார்களை வாங்குவதற்கு எப்போதும் ஓர் பெரிய கூட்டம் உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி ஹேட்ச்பேக் கார்களை தான் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்கிறது.

எந்த அளவிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் அதன் ஹேட்ச்பேக் கார்களை நம்பியுள்ளது என்றால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 4 ஹேட்ச்பேக் கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும். இந்த ஹேட்ச்பேக் கார்கள் விற்பனை லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ள வேகன்ஆர் மாடல் தான் ஒட்டுமொத்த கார்கள் விற்பனையிலும் முதலிடத்தை பிடித்துள்ளது.

top-5 hatchback cars of february

கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி வேகன்ஆர் ஹேட்ச்பேக் கார்களின் எண்ணிக்கை 19,412 ஆகும். அதுவே, 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 16,889 ஹேட்ச்பேக் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 2,500க்கும் அதிகமான வேகன்ஆர் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2024 ஜனவரி மாதத்திலும் 17,756 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்த்தால், இந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் 29 நாட்களை மட்டுமே கொண்ட பிப்ரவரியில் 1,656 வேகன்ஆர் கார்கள் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. வேகன்ஆர் காருக்கு அடுத்து கடந்த பிப்ரவரியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக 2வது இடத்தில் மாருதி சுஸுகி பலேனோ உள்ளது.

top-5 hatchback cars of february

மாருதி சுஸுகியின் கொஞ்ச விலைமிக்க ஹேட்ச்பேக் காரான இது கடந்த மாதத்தில் மொத்தம் 17,517 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2023ஆம் ஆண்டின் பிப்ரவரியில் 18,592 பலேனோ கார்களும், 2024 ஜனவரியில் சுமார் 19,630 பலேனோ கார்களும் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவற்றுடன் ஒப்பிட்டால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் பலேனோ கார்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

3வது இடத்தில் மாருதி சுஸுகியின் மற்றொரு மலிவான & பிரபலமான ஹேட்ச்பேக் காரான ஸ்விஃப்ட் 13,165 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஸ்விஃப்ட் கார் விற்பனையும் வழக்கத்தை விட கடந்த பிப்ரவரி மாதத்தில் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

top-5 hatchback cars of february

மாருதி சுஸுகி ஆல்டோ இந்த வரிசையில் 4வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 11,723 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 18,114 ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆல்டோ கார்கள் விற்பனை ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், நீண்ட காலமாக விற்பனையில் இருந்த ஆல்டோ 800 காரின் விற்பனை நிறுத்தப்பட்டதாகும்.

இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தில், மாருதி சுஸுகி அல்லாத ஹேட்ச்பேக் காராக டாடா டியாகோ உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 6,947 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த 6,947 எண்ணிக்கையில் டாடா டியாகோவின் எலக்ட்ரிக் வெர்சனான டியாகோ இவி -இன் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. 2023 பிப்ரவரி மாதத்தில் 7,457 டாடா டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

top-5 hatchback cars of february
Rank Hatchback Feb-24 Feb-23 Growth (%) YoY
1 Maruti WagonR 19,412 16,889 14.94
2 Maruti Baleno 17,517 18,592 -5.78
3 Maruti Swift 13,165 18,412 -28.50
4 Maruti Alto 11,723 18,114 -35.28
5 Tata Tiago / EV 6,947 7,457 -6.84
6 Hyundai i20 5,131 9,287 -44.75
7 Hyundai Grand i10 NIOS 4,947 9,635 -48.66
8 Toyota Glanza 4,581 4,223 8.48
9 Tata Altroz 4,568 3,955 15.50
10 Maruti Celerio 3,586 4,458 -19.56

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள் லிஸ்ட்டில் முதல் 4 இடங்களை பிடித்திருப்பினும், மாருதி சுஸுகி நிறுவனம் சற்று கவலையாகவே இருக்கும். ஏனெனில், முதலிடத்தில் உள்ள வேகன்ஆரை தவிர்த்து, மற்றவை அனைத்தின் விற்பனையும் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 22:51 [IST]
English summary
Top 5 hatchback cars of 2024 february check full list here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X