இந்த இந்திய தயாரிப்புகளுக்கு உலக அளவுல ஃபேன்கள் இருக்காங்களா! இந்த காரு லிஸ்ட்ல இருக்குறது ஆச்சரியமா இருக்கு!

இந்தியாவில் தயாரிக்கப்படும் சில கார் மாடல்களுக்கு உலக நாடுகளில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இதனால்தான் முன்பைக் காட்டிலும் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஹூண்டாய் (Hyundai) நிறுவனம்கூட அதன் புகழ்பெற்ற மைக்ரோ எஸ்யூவி ரக கார் மாடலான எக்ஸ்டர் (Exter)-ஐ சமீபத்தில் தெற்கு ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. முதல் கட்ட ஏற்றுமதியிலேயே பெரும் எண்ணிக்கையாக 996 எக்ஸ்டர் கார் யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்த கார் மாடல் மட்டுமில்லைங்க இந்தியாவில் இருந்து இதுபோன்று இன்னும் பல கார் மாடல்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்தவகையில், உலக அளவில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளைத்தைக் கொண்டிருக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் டாப் 5 கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Top indian cars popular overseas

மாருதி சுஸுகி பலினோ (Maruti Suzuki Baleno): இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கார் மாடலுக்கு உலக நாடுகள் பலவற்றில் வரவேற்பு மிகவும் பலமாகக் காணப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் அக்கார் மாடலை ஏற்றுமதி செய்த புள்ளி விபரங்கள் உள்ளன. நிதியாண்டு 2023-24 மட்டும் இந்த கார் மாடல் 57 ஆயிரத்து 738 யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த மாபெரும் ஏற்றுமதி எண்ணிக்கையின் வாயிலாகவே மாருதி பலினோ இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல் மட்டுமல்ல உலக அளவிலான கார் காதலர்களின் ஃபேவரிட் வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 6.66 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஹேட்ச்பேக் கார் மாடல் ஆகும். இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான ஆப்ஷன்களில் பலினோ விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna): இந்தியாவில் பிரீமியம் அம்சங்களை அதிகம் தாங்கிய செடான் ரக கார் மாடல்களில் ஒன்றா வெர்னா இருக்கின்றது. இந்த கார் மாடலை மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 2023-24 நிதியாண்டில் மட்டும் 55,177 யூனிட்டுகள் வரை ஏற்றுமதி செய்திருக்கின்றது.

இதன் வாயிலாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் மாடல்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. ஹூண்டாய் வெர்னா ஓர் அதிக பாதுகாப்பு திறன்மிக் கார் மடால் ஆகும். 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது.

எண்ணற்ற பாதுகாப்பு அம்சங்களை இந்த கார் தன்னுள் தாங்கியிருக்கின்றது. மிக முக்கியமாக 6 ஏர் பேக்குகள், இஎஸ்சி, ரியர் ஐசோஃபிக்ஸ் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற அம்சங்களை வெர்னா ஸ்டாண்டர்டு அம்சமாக பெற்று இருக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 11 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire): முதலாவது இடத்தைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தையும் மாருதி சுஸுகியின் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. நிதியாண்டு 2023-24இல் மட்டும் இந்த கார் மாடல் 40,560 யூனிட்டுகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி இன்னும் பலமடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் புதிய தலைமுறை வெர்ஷனை சீக்கிரமே மாருதி சுஸுகி விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது. இதில் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 25 கிமீ வரையிலும், சிஎன்ஜி ஒரு கிலோவிற்கு 33 கிமீ வரையில் மைலேஜ் தரும் கூறப்படுகின்றது. இந்தியாவில் இந்த கார் ரூ. 6.57 லட்சம் தொடங்கி ரூ. 9.34 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10): இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹேட்ச்பேக் ரக கார் மாடல் இதுவாகும். இது அதிகபட்சமாக 39,021 யூனிட்டுகள் வரை இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கார் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ரூ. 5.92 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஃபோக்ஸ்வேகன் விர்சுஸ் (Volkswagen Virtus): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு அதிக பிரீமியம் தர அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது. இது இந்தியாவில் இருந்து 31,478 யூனிட்டுகள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. 2023-24 நிதியாண்டில் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை இதுவாகும். இந்த பிரீமியம் செடான் கார் இந்தியாவில் ரூ. 11.56 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் கார் மாடல்களையே மேலே பார்த்தோம். இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த கார் மாடல்களுக்கு உலக நாடுகளில் மட்டுமல்ல நம் நாட்டிலும் நல்ல வரவேற்பே கிடைத்துக் கொண்டு இருக்கின்றது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 5:00 [IST]
English summary
Top 5 indian cars that are gaining popularity overseas in 2023
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+