கார் வாங்க போறவங்க கூகுளில் விரும்பி தேட கூடிய தகவல்! எந்த பிராண்ட் கார்கள் அதிகம் இந்தியாவில் விற்பனையாகுது!
கூகுளில் அதிகம் தேடி தேடி களைத்து போயிட்டீங்களா.. கவலையவிடுங்க நீங்க தேடி வந்த தகவலை இங்கே பாத்திடலாம். அதாவது, இந்தியாவில் எந்த கார் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
2024 பிப்ரவரி மாத விற்பனை புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் இங்கே வழங்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவின் டாப் ஐந்து பிராண்டுகள் பற்றியும் அவை சென்ற பிப்ரவரி மாதத்தில் எத்தனை லட்சம் யூனிட் வாகனங்களை இந்தியாவில் விற்பனைச் செய்திருக்கின்றன என்பது பற்றிய தகவலையுமே இங்கே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

கியா (Kia): தென் கொரிய கார் பிராண்ட் என்றாலே இந்தியர்களுக்கு அதிகம் பிடிக்கும்போல, என்று கூறும் அளவிற்கு இந்தியர்கள் தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஹூண்டாயைத் தொடர்ந்து இந்த தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனம் இந்தியர்களின் மனம் கவர்ந்த பிராண்டாக உள்ளது.
2024 பிப்ரவரி மாதத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் கார்கள் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. இது 2023 பிப்ரவரி மற்றும் 2024 ஜனவரி ஆகிய மாதங்களைக் காட்டிலும் மிக மிக குறைவாகும். ஆண்டு -டூ- ஆண்டு விற்பனையில் 18 சதவீதமும், மாதம் -டூ- மாதம் விற்பனையில் 15 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பதாக கியா வேதனைத் தெரிவித்து இருக்கின்றது.
இருப்பினும், இந்த பிராண்ட் இந்தியாவின் டாப் ஆறு நிறுவனங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக சொனெட் இருக்கின்றது. 9,102 யூனிட்டிற்கும் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் செல்டோஸ் இருக்கின்றது. அது தனி ஆளாக 6,265 யூனிட் விற்பனையைப் பெற்றிருக்கின்றது.
டொயோட்டா (Toyota): இந்நிறுவனம் நம்முடைய இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. 23,200 யூனிட்டுகள் பிப்ரவரி 2024இல் விற்பனையாகியதன் விளைவாக அது 5வது இடத்தைப் பிடித்தது. இந்த விற்பனை எண்ணிக்கை 2023 பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் 52.6 சதவீதம் அதிக விற்பனை ஆகும். 2023 பிப்ரவரியில் 15,267 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.
மஹிந்திரா (Mahindra): இந்தியாவின் அதிகம் கார் விற்பனையாகும் நிறுவனங்களின் பட்டியலில் நமது இந்திய நிறுவனமான மஹிந்திரா நான்காவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனம் 1.5 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது. இருப்பினும், அது நான்காவது இடத்தைத் தக்க வைத்திருக்கின்றது. சுமார் 42 யூனிட் மஹிந்திரா வாகனங்களே 2024 பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகி இருக்கின்றன.
2024 ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடுகையிலேயே இந்த விற்பனை வீழ்ச்சியை மஹிந்திரா சந்தித்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், 2023 பிப்ரவரி விற்பனையுடன் நடப்பாண்டு விற்பனையை ஒப்பிட்டால் அது 40.3 சதவீதம் விற்பனை வளர்ச்சியாகும். 2023 பிப்ரவரியில் 30,221 யூனிட்டுகள் மட்டும் மஹிந்திராவின் வாகனங்கள் விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் (Hyundai): இந்த நிறுவனத்தின் கார்கள் 50,201 யூனிட்டுகள் வரை 2024பிப்ரவரியில் விற்பனையாகி இருக்கின்றன. இதன் விளைவாகவே அது இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த விற்பனை எண்ணிக்கை 2023பிப்ரவரியைக் காட்டிலும் 6.9சதவீதம் அதிகம் விற்பனை எண்ணிக்கை ஆகும். அதேவேளையில், 2024ஜனவரியுடன் ஒப்பிட்டால் சென்ற பிப்ரவரியில் மாபெரும் 12.1சவீதம் விற்பனை வீழ்ச்சியை ஹூண்டாய் பெற்றிருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. 2024ஜனவரியில் 57,115 யூனிட்டுகளே விற்பனையாகின.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors): ஹூண்டாய் இந்த இடத்த அலங்கரித்து வந்த நிலையில், அதை தலை மேல் ஓங்கிக் கொட்டி கீழே அனுப்பி வைத்து இந்த இடத்தைப் பிடித்திருக்கின்றது டாடா மோட்டார்ஸ். 51.270 யூனிட்டுகள் விற்பனையைப் பெற்றதன் விளைவாகவே அதனால் இந்த இடத்தைப் பிடிக்க முடிந்திருக்கின்றது. இது 2023பிப்ரவரியைக் காட்டிலும் 19.6 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். 42,865 யூனிட்டுகளே 2023பிப்ரவரி மாதத்தில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.
மாருதி சுஸுகி (Maruti Suzuki): முதல் இடத்தில் எப்போதும் மாருதி சுஸுகியே பிடித்திருக்கின்றது. மற்ற நிறுவனங்களின் வாகன விற்பனை ஒரு சில பத்தாயிரங்களை மட்டுமே கொண்டிருக்கின்ற நிலையில், மாருதி சுஸுகியோ ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகளை சென்ற மாதத்தில் விற்பனைச் செய்திருக்கின்றது. 1,60,272யூனிட்டுகளே 2024 பிப்ரவரியில் விற்பனையாகி இருக்கின்றன. 2023 பிப்ரவரியைக் காட்டிலும் இது 8.7 சதவீதம் அதிகம் ஆகும். 1,47,467 யூனிட்டுகள் 2023 பிப்ரவரியில் விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 20 ஆயிரத்திற்குமான யூனிட்டுகளை 2024 பிப்ரவரியில் விற்பனைச் செய்த நிறுவனங்களின் பட்டியிலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். மேலும், இவையே இந்தியாவின் டாப் 6 கார் பிராண்டுகள் ஆகும். டாடா கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு சமீப காலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே அந்த பிராண்ட் தற்போது 2வது இடத்தைப் பிடித்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








