7 பேர் போகலாம், காரின் விலை ரூ8.69 லட்சம் தான்! மைலேஜூம் 26 கிமீ தரும் இந்த கார் தான் நம்பர் 1
இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக 7 சீட்டர் கொண்ட கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த செக்மெண்டில் மிக குறைவான கார்களை விற்பனையாக இருந்தாலும், இந்த கார்களின் விற்பனையில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் 7 சீட்டர் கார்கள் என்னென்ன நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து வருகிறது என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவில் 7 சிட்டர் கொண்ட வாகனங்களுக்கு மிகப்பெரிய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. 7 சீட்டர் செக்மெண்டில் மட்டும் மொத்தமே 15 வாகனங்கள் தான் விற்பனையாகி வருகிறது. இதில் அதிகபட்சமாக மஹிந்திரா நிறுவனம் நான்கு வாகனங்களையும், மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் தலா 3 வாகனங்களையும், டாடா, கியா, ஹுண்டாய், சிட்ரோன் மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு வாகனத்தையும் விற்பனை செய்து வருகிறது.

இதில் எப்பொழுதும் வழக்கமாக மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் தான் முதலிடத்தை பிடிக்கும் .கடந்த ஜூலை மாதமும் இந்த கார் தான் அதிக அளவில் விற்பனையாகி முதல் இடத்தை பிடித்துள்ளது. கைப்ா ஜூலை மாதம் மட்டும் மொத்தம் 15,701 எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன. இரண்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார் இருக்கிறது. இந்த கார் மற்றும் 12,237 கார்கள் விற்பனையாகி உள்ளன.
மூன்றாவது இடத்தில் மாருதி நிறுவனத்தின் ஈகோ கார் இருக்கிறது. மொத்தம் 11,916 கார்கள் விற்பனையாகி உள்ளன. நான்காவது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் கார் இருக்கிறது. மொத்தம் 9,912 கார்கள் விற்பனையாகி உள்ளன. ஐந்தாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 கார் இருக்கிறது. இந்த கார் மற்றும் 7,769 கார்கள் விற்பனையாகி உள்ளன.

6வது இடத்தைப் பொறுத்தவரை மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 6,930 கார்கள் விற்பனையாகி உள்ளன. 7வது இடத்தைப் பொறுத்தவரை கியா நிறுவனத்தின் கேரன்ஸ் கார் இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் மட்டும் 5,679 கார்கள் விற்பனையாகி உள்ளன. 8வது இடத்தில் மாருதி நிறுவனத்தின் எக்ஸ்எல் 6 கார் இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் மொத்தம் 2,923 கண்கள் விற்பனையாக உள்ளன.
ஒன்பதாவது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ஃபார்ச்சூனர் கார் இருக்கிறது கடந்த மாதம் மட்டும் 2,350 விற்பனையாகியுள்ளன. பத்தாவது இடத்தில் டாடா நிறுவனத்தின் சஃபாரி கார் இருக்கிறது மொத்தம் 2,109 கார்கள் கடந்த மாதம் விற்பனையாகி உள்ளன. முதல் பத்து இடங்களில் உள்ள கார்கள் சிறப்பாக விற்பனையாகியுள்ளன.

பத்தாவது 11 வது இடத்தில் டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் கார் இருக்கிறது கடந்த மாதம் மட்டும் 1,929 கார்கள் விற்பனையாகி உள்ளன.12 வது இடத்தில் ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் கார் இருக்கிறது கடந்த மாதம் மட்டும் 1,457 கார்கள் விற்பனை ஆகி உள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் அல்கஸார் காரை பொறுத்தவரை பட்டியலில் 13வது இடத்தில் இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 585 கார்கள் விற்பனையாகி உள்ளன.14வது இடத்தில் சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர் கிராஸ் கார் இருக்கிறது இந்த கார் 68 கார்கள் விற்பனையாகி உள்ளன. இறுதியாக கடைசி இடத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் மாராஸோ கார் இருக்கிறது. கடந்த மாதம் மட்டும் 14 கார்கள் விற்பனையாகி உள்ளன.
இதன் மூலம் 7 சீட்டர் கொண்ட காரில் மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை தான் மக்கள் அதிகம் விரும்புவது நமக்கு தெளிவாக தெரிகிறது இதற்கு முக்கியமான காரணம் இந்த காரின் விலையும் குறைவு, அதே நேரம் இந்த காரில் அதிகமான அம்சங்கள் இருப்பதாலும், இந்த காரை அதிகம் மக்கள் விரும்புகிறார்கள். இதனால் நீண்ட ஆண்டுகளாக இந்த கார் சிறப்பான விற்பனையில் இருக்கிறது.
மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 பிஎஸ் பவரையும் 137 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் மாடல் பொறுத்தவரை 20.51 கிலோமீட்டர் மைலேஜ், சிஎன்ஜி மாடல் பொறுத்தவரை 26.16 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கொரோனாவிற்கு பிறகு குடும்பத்துடன் பயணிக்கும் கார்களில் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்திரக கார்களை மக்கள் அதிகம் விரும்பும் வாங்க விரும்புகிறார்கள் குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணிக்க முடியும். அதே நேரம் டூர் செல்வதற்கும் வசதியாக இருக்கும் அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதால் இந்த கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









