கார் வாங்க காசு இல்லாமல் திண்டாடும் மக்கள்! ஆகஸ்ட் மாதம் விழுந்த சம்மட்டி அடி

இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனை மந்தமாக இருந்துள்ளது தற்போது வாகன விற்பனை விவரங்கள் வெளியான பின்பு நமக்கு தெரியவந்துள்ளது. பல முன்னணி நிறுவனங்கள் கூட கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் எவ்வளவு சரிவை சந்தித்துள்ளது? இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பண்டிகை காலங்கள் துவங்கியுள்ள நிலையில், வாகன விற்பனை அதிகரிக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு நேர் மாறாக வாகன விற்பனை என்பது சரிவை சந்தித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனையில் சரிவை சந்தித்துள்ளன. இதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. டாப் மூன்று இடங்களில் இருக்கும் நிறுவனங்கள் கூட சரிவை சந்தித்துள்ளது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது.

Top car brands sales down

இந்த வகையில் இந்தியாவில் அதிகமான கார்களை விற்பனை செய்யும் மாருதி நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டில் 1,56,114 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்டில் 1,43,075 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இது 8.4% அளவுக்கு விற்பனை சரிவாகும். இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹுண்டாய் நிறுவனமும், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 53,830 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்டில் 49,525 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனமும் 8% சரிவை சந்தித்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருக்கும் டாடா நிறுவனம் இருப்பதிலேயே குறைவை குறைவான சரிவை சந்தித்த நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 45,515 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 44,142 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது மூன்று சதவீத சரிவாகும். இப்படியாக டாப் 3 இடங்களில் இருக்கும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன.

Top car brands sales down

இது மட்டுமல்ல ஹோண்டா நிறுவனம் கடந்தாண்டு ஆகஸ்ட் மொத்தம் 7880 வாகனங்களை விற்பனை செய்திந்த நிலையில், கடந்த ஆகஸ்டில் 5326 வாகனங்களை தான் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் 32.4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை பொருத்தவரை கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4174 வாகனங்களை விற்பனை செய்த நிலையில், கடந்த ஆகஸ்டில் 3577 வாகனங்களை தான் விற்பனை செய்துள்ளது. இது 14.3 சதவீதம் சரிவாகும்.

இதுபோக ரெனால்ட் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 363 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் 3018 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 16.9% விற்பனை சரிவாகும். கடைசி இடத்தில் ஸ்கோடா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4307 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 2772 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது 35.6% விற்பனை சரிவாகும்.

Top car brands sales down

இப்படி பல்வேறு நிறுவனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையில் சரிவை செய்துள்ளன. இந்தியாவில் வாகனம் வாங்கும் நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. என்னதான் இந்த நிறுவனங்கள் எல்லாம் விற்பனையில் சரிவை சந்தித்திருந்தாலும், மஹிந்திரா நிறுவனம் 16.1%, டொயோட்டா நிறுவனம் 36.3%, கியா நிறுவனம் 17.2%, என்ஜி நிறுவனம் 9.2%, சிட்ரோன் நிறுவனம் 121.4%, ஜீப் நிறுவனம் 13.7% விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளன.

இந்தியாவில் வாகன விற்பனை சரிவு ஏற்படுவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் கூறப்படுகிறது. இந்த டிரெண்ட் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது உதாரணமாக தேர்தல் துவங்கிய போது பணப்பரிவர்த்தனை பெரிய அளவில் இருக்காது என்பதால் வாகன விற்பனை சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பம் ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டதால் வருமானம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது அதையும் தாண்டி இந்த டிரெண்ட் தொடர்ந்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் வாகனம் வாங்கும் அளவுக்கு பணப்புழக்கம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த பண்டிகை காலத்தில் இப்படியான விற்பனை சரிவு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த விற்பனை சரிவை மீட்டுக் கொண்டு வராவிட்டால் இந்த ஆண்டு ஒட்டுமொத்தத்தில் இந்தியாவில் வாகன விற்பனையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனம் விற்பனை சரிவு ஏற்படுவதை அறிந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது ஏகப்பட்ட தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் வங்கிக் கடன் மூலமாக வாகனம் வாங்கும் நிலையில், இந்த வங்கி கடலில் பல்வேறு சலுகைகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்படுவதன் மூலம் வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 5, 2024, 10:52 [IST]
English summary
Top car brands sales down august 2024 know full details
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X