மைலேஜை விட இந்த விஷயம் தான் முக்கியம்! ஹூண்டாய் கிரெட்டா கார் நல்லா சேல்ஸ் ஆகுறதுக்கு இதான் காரணமா?

எஸ்யூவி சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா கார் தனித்து நிற்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த காரில் உள்ள அம்சங்கள் தான். இந்த செக்மெண்டில் அதிக எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகி வருகின்றன. அதனால் போட்டிகள் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் மக்கள் பலர் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரையே அதிகம் வாங்குகிறார்கள். இந்த காரின் லுக் ஒரு காரணமாக இருந்தாலும் இந்த காரின் சிறப்பு அம்சங்கள் மற்றொரு முக்கியமான காரணமாக இருக்கிறது. அப்படியாக ஹூண்டாய் கிரெட்டா காரை மக்கள் அதிகம் விரும்புவதற்கான காரணங்களை தான் இங்கே விரவாக காணப்போகிறோம்.

ஹூண்டாய் கிரெட்டா கார் எஸ்யூவி செக்மென்ட்டில் குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதித்துள்ளது. வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக இந்த கார் வாங்குபவர்களை அதிகம் ஈர்க்கிறது. கிரெட்டாவை தனித்து நிற்கச் செய்ய பல அம்சங்கள் இருக்கும் நிலையில் அந்த அம்சங்களை ஆராய்வோம்.

Hyundai Creta

ஹூண்டாய் கிரெட்டா ஒரு போல்டான மற்றும் நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்க கிரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்கள் காருக்கு ஒரு அற்புதமான தோற்றத்தை கொடுக்கிறது. ஸ்பிலிட் டெயில் லேம்ப்கள் பின்புறத்திற்கு நேர்த்தியை லுக்கை சேர்க்கிறது. இந்த வடிவமைப்பு அம்சங்கள் ஒன்றிணைந்து ஈர்க்கும் வகையான லுக் கொண்ட எஸ்யூவியாக இதை உருவாக்குகின்றன.

கிரெட்டா காரின் உட்புற வசதிக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தில் லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் விசாலமான கேபின் வசதிகளை வழங்குகிறது. பானரோமிக் சன்ரூஃப், விண்வெளி பயணிக்கும் உணர்வை வழங்குகிறது. இது மட்டுமில்லாமல்காற்றோட்டமான முன் இருக்கைக்கான வசதியை சேர்க்கின்றன, குறிப்பாக வெப்பமான காலநிலையில் இது உதவுகிறது.

Hyundai Creta

ஹூண்டாய் கிரெட்டா கார் சமீபத்திய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை இயக்கும் நிலையில் வழங்கப்பட்டுள்ளது. போஸ் சவுண்ட் சிஸ்டம் உயர்தரமான ஆடியோவை வழங்கு321ரஒகிறது. புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஒரே ஸ்கிரீனில் அனைத்துவிதமான அத்தியாவசிய தகவல்களையும் வழங்குகிறது.

கிரெட்டா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் உட்பட பல இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இந்த இன்ஜின்கள் பவர் மற்றும் மைலேஜ் திறன் ஆகியவற்றை சிறப்பாகவும் தேவையான அளவிலும் வழங்குகின்றன. வெவ்வேறு ஓட்டுநர் தேவைக்கு ஏற்ப பல டிரைவ் மோடுகளையும் இந்த எஸ்யூவி கார் கொண்டுள்ளது.

Hyundai Creta

ஹூண்டாய்க்கு பாதுகாப்பு முன்னுரிமை, கிரெட்டா காரும் இதற்கு விதிவிலக்கல்ல. இது ஆறு ஏர்பேக்குகள், இபிடி உடன்கூடிய ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றுடன் வருகிறது. ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. இந்த அம்சங்கள் பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை தருகிறது.

ஹூண்டாய் கிரெட்டா ஸ்டைலான வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் திடமான செயல்திறன் ஆகியவற்றை கொண்ட காராக இருக்கிறது. இதன் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் SUV மார்கெட்டில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. அதன் மாறுபட்ட இன்ஜின் தேர்வுகள் மற்றும் நவீன வசதிகளுடன், கிரெட்டா கார் இந்தியாவில் கார் வாங்குபவர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

இந்த காரின் மைலேஜை பொருத்தவரை லிட்டருக்கு 17 முதல் 21 கி.மீ வரை வேரியன்டை பொருத்து மாறுபடுகிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை ரூ11 லட்சம் முதல் ரூ20 லட்சம் வரை விற்பனையாகி வருகிறது. மார்கெட்டில் இந்த காரை விட சிறந்த மைலேஜ் இருக்கும் கார்கள் விற்பனையாகி வந்தாலும் மக்கள் பலர் இந்த காரை விரும்புவதற்கு காரணம் இந்த காரில் உள்ள அம்சங்கள் தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மார்கெட்டில் தற்பொது அதிகம் விற்பனையாகும் கார்களை வாங்கும் மக்களின் மன நிலையை பார்க்கும் போது இந்தியாவில் குறைந்த விலை மற்றும் அதிக மைலேஜ் கொண்ட கார்கள் தான் அதிகம் விற்பனையாகும் என்று இருந்த நிலை மாறி வருகிறது. தெரிகிறது. இந்திய மக்கள் பாதுகாப்பு, சொகுசு வசதி மற்றும் காரின் லுக் ஆகியவற்றிற்கும் சமமான முக்கியத்துவம் வழங்குகிறார்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, May 31, 2024, 16:26 [IST]
English summary
Hyundai Creta has made a significant impact in the SUV segment, thanks to its modern design, advanced technology, interior comfort, efficient performance, and robust safety features, making it a top choice among buyers.
மேலும்... #hyundai #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X