இனி இந்தியால ஆடி, பென்ஸ் கார்கள் விற்பனையான மாதிரிதான்.. டாடா கர்வ் இவி இவ்ளோ சூப்பரான காரா!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்வ் இவி (Curvv EV) எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் கூபே எஸ்யூவி (Coupe SUV) வகை கார் மாடல் ஆகும். மிகவும் நேர்த்தியான ஸ்டைல் மற்றும் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய காராக இந்த கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. சொல்லப்போனால் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கே இந்த காரை டாடா மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது.

அப்படி என்ன அம்சங்களை எல்லாம் இந்த கார் கொண்டிருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, டாடா கர்வ் இவி பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tata curvv ev top things

டாடா கர்வ் டிசைன்: மிகவும் தனித்துவமான டிசைனிலேயே இந்த காரை டாடா வடிவமைத்திருக்கின்றது. கூபே எஸ்யூவி தோற்றத்தையே இந்த காருக்கு டாடா வழங்கி இருக்கின்றது. லம்போர்கினி உருஸ் போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களை பிரதிபலிக்கும் வகையில் இதன் மேற்கூரை மிகவும் சாய்வாக உள்ளது.

இத்தகைய தோற்றத்தின் காரணமாக அதிக சிறப்பு வசதிகளின் காரணமாகவும் கர்வ் இவி-யின் வருகை பலருக்கு போட்டியாக மாறியிருக்கின்றது. குறிப்பாக, பிஒய்டி அட்டோ 3 மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி ஆகியவற்றிற்கு மிகப் பெரிய போட்டியாக அமைந்திருக்கின்றது. கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் விதமாக இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எல்இடி லைட்டுகள் இருக்கின்றன.

Tata curvv ev launched

குறிப்பாக, இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் எல்இடி டிஆர்எல் சில தனி சிறப்புகளைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அது சார்ஜ் ஸ்டேட்டஸ்ஸைக் கூட காண்பிக்கும். மேலும், இதன் ஹெட்லைட் முக்கோண வடிவ பிளாஸ்டிக் பேனலில் வட்ட வடிவத்தில் வழங்கப்பட்ட இருக்கின்றது. இந்த அமைப்பு ஓர் மிருகத்தின் கண் பார்வையைப் போன்ற அமைப்பை இந்த காருக்கு வழங்குகின்றது.

இதுபோன்று எண்ணற்ற சிறப்புகளை இந்த கார் கவர்ச்சியான தோற்றத்திற்காக தன்னுள் தாங்கி இருக்கின்றது. குறிப்பாக, பள பளப்பான கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கிளாடிங்குகள் வீல் ஆர்ச்சில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதில் 18 அங்குல அலாய் வீலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ஃப்ளஷ் வகை டோர் ஹேண்டில்கள் ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

நிற தேர்வு: ஐந்து விதமான தேர்வுகளில் கர்வ் இவி-யை வாங்கிக் கொள்ள முடியும். ஃப்ளேம் ரெட் (Flame Red), பிரைம் ஒயிட் (Pristine White), எம்பவர்டு ஆக்ஸைடு (Empowered Oxide), விர்ச்சுவல் சன்ரைஸ் (Virtual Sunrise) மற்றும் ப்யூர் கிரே (Pure Grey) ஆகியவையே அவை ஆகும்.

சிறப்பம்சங்கள் விபரம்: டாடா நிறுவனம் கர்வ் இவி-யை சொகுசு மற்றும் ஆடம்பர வகை கார்களுக்கு இணையான ஓர் வாகனமாக வடிவமைத்திருக்கின்றது. அதேவேளையில், நெக்ஸான் இவி-யின் டேஷ்போர்டை இந்த காரின் டேஷ்போர்டும் அப்படியே பிரதிபலிக்கின்றது. இருப்பினும், சில தனித்துவமான அம்சங்களையும் இதில் காண முடிகின்றது.

அந்தவகையில், இதன் டேஷ்போர்டுக்கு கருப்பு-வெள்ளை நிறத்தால் அழகு சேர்க்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, சில்வர் நிற இன்செர்ட்டுகளும் காருக்குள் ஆங்காங்கே காட்சியளிக்கின்றன. இவற்றுடன் சேர்த்து இந்த காரின் கேபினுக்கு கூடுதல் பிரீமுயம் லுக்கை வழங்கும் விதமாக 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது டாடா ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய எஸ்யூவி கார் மாடல்களிடம் இருந்து பெறப்பட்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, 10.23 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 அங்குல டிரைவருக்கான டிஜிட்டல் திரை ஆகியவையும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இதன் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய, கார் இணைப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றைத் தாங்கியது என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் (முன் பக்கம்), ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் ஆகிய அம்சங்களும் கர்வ் இவியில் இடம் பெற்றிருக்கின்றன.

பாதுகாப்பு அம்சங்கள்: டாடா நிறுவனம் அதன் மற்ற தயாரிப்புகளைப் போலவே இந்த காரையும் அதிக பாதுகாப்பு திறன் மிக்க மற்றும் அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய வாகனமாக தயார் செய்திருக்கின்றது. அந்தவகையில், 6 ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்டு அம்சமாக இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் லெவல் 2 வகை அடாஸ் அம்சம் ஆகியவற்றையும் இது தன்னுள் தாங்கி இருக்கின்றது.

வேரியண்டு மற்றும் பேட்டரி பேக் விபரம்: டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரை ஐந்து விதமான வேரியண்டுகளில் டாடா விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. கிரியேட்டீவ் (Creative), அக்காம்ப்ளிஷ்டு (Accomplished), அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் எஸ் (Accomplished+ S), எம்பவர்டு பிளஸ் (Empowered+) மற்றும் எம்பவர்டு பிளஸ் ஏ (Empowered+ A) ஆகியவையே அவை ஆகும்.

இத்துடன் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலும இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கும். 45 kWh மற்றும் 55 kWh ஆகியவையே அவை ஆகும். இவற்றில் ஓர் முழு சார்ஜில் 502 கிமீ முதல் 585 கிமீ வரையில் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

விலை விபரம்: இருப்பதிலேயே கிரியேட்டீவ்-தான் விலை குறைவான தேர்வாக இருக்கின்றது. இந்த தேர்வை 45 kWh பேட்டரி பேக் தேர்வில் மட்டுமே வாங்கிக்க முடியும். இதன் விலை ரூ. 17.49 லட்சம் ஆகும். இதற்கு அடுத்தபடியாக அக்காம்ப்ளிஷ்டு மற்றும் அக்காம்ப்ளிஷ்டு பிளஸ் எஸ் ஆகிய இரண்டு வேரியண்டுகளும் உள்ளன.

இந்த வேரியண்டை 45 kWh அல்லது 55 kWh என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளிலும் வாங்கிக்க முடியும். அவற்றின் விலை ரூ. 18.49 லட்சம் தொடங்கி ரூ. 19.99 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. கடைசியாக எம்பவர்டு பிளஸ் மற்றும் எம்பவர்டு பிளஸ் ஏ ஆகியவை இருக்கின்றன.

இவையே கர்வ் இவியின் விலைமிக்க வேரியண்டுகள் ஆகும். இதற்கு ரூ. 21.25 லட்சம் மற்றும் ரூ. 21.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. 55 kWh பேட்டரி பேக் தேர்வு மட்டுமே இந்த வேரியண்டில் வழங்கப்படுகின்றது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

கர்வ் இவி-யின் தனி சிறப்பு: டாடா மோட்டார்ஸ் கர்வ் இவி-யில் சில தனித்துவமான சிறப்பு வசதிகளைச் சேர்த்திருக்கின்றது. அந்தவகையில், வாகனத்தில் இருந்து வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி (vehicle to load) மற்றும் வாகனத்தில் இருந்து மற்ற வாகனத்திற்கு தேவையான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் வசதி (vehicle to vehicle) ஆகியவற்றையே இந்த காரில் டாடா வழங்கி இருக்கின்றது.

இதுதவிர, இந்த காரில் போலியான எஞ்சின் சத்தத்தை வழங்கம் வசதி, அதிக வேகத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றையும் டாடா வழங்கி இருக்கின்றது. உதாரணமாக 70 kW சார்ஜிங் கருவியைப் பயன்படுத்தி இந்த காரை சார்ஜ் செய்தால் வெறும் 40 நிமிடங்களில் 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளைத் தாங்கிய காராகவே டாடா கர்வ் இவி நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் இவி-யில் அப்படி என்ன அம்சங்கள் இடம் பெற்றிருக்கு என கேள்வி கேட்பவர்களுக்கான பதிலையே இந்த பதிவில் பார்த்தோம். டாடா கர்வ் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமல்ல, ஐசிஇ வெர்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதையும் டாடா வெளியீடு செய்திருக்கின்றது. செப்டம்பர் மாதமே இதன் விலைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 7, 2024, 16:02 [IST]
English summary
Top things to know about tata curvv ev features price and design insights
மேலும்... #tata motors #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+