பெட்ரோல், டீசல் கார்களை வாங்க போறீங்களா.. குட்டியான உருவத்தில் இந்தியாவை அலங்கரிக்க சில இ-கார்கள் காத்திருக்கு
இந்தியர்கள் பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டில் இருந்து மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கி இருக்கின்றனர். இதன் விளைவாக இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக அதிக எண்ணிக்கையில் காட்சியளிக்கத் தொடங்கி இருக்கின்றன. சொல்லப்போனால் இந்திய சாலைகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்துக் கொண்டு இருக்கின்றது.
இந்த வளர்ச்சி, இந்தியாவில் நிலவத் தொடங்கி இருக்கும் மின்சார வாகனங்களின் மீதான தாகத்தைக் குறிக்கும் விதமாக இருக்கின்றன. எனவேதான் பெரும்பாலான முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போல எலெக்ட்ரிக் வாகனங்களையும் அதிகளவில் விற்பனைக்குக் கொண்டு வர தொடங்கி இருக்கின்றனர்.

குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata) போன்ற முன்னணி நிறுவனங்கள் சில டீசல் வாகனங்களின் அறிமுகங்களை குறைத்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் களமிறக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த நிறுவனத்தை போலவே இன்னும் பல நிறுவனங்கள் இந்தியாவிற்காக எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றன.
அந்தவகையில், இந்தியாவை விரைவில் அலங்கரிக்க காத்திருக்கும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, குட்டியான உருவ தோற்றத்தில் இந்தியாவைக் களம் காண இருக்கும் ஹேட்ச்பேக் வகை எலெக்ட்ரிக் கார் மாடல்கள் பற்றிய லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV): டாடா நிறுவனமே இந்தியாவின் மின்சார வாகன பிரிவின் தலைவனாகக் காட்சியளிக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருக்கின்றது, டாடா மோட்டார்ஸ். இதன் அடிப்படையில் இந்தியாவிற்கு என மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார்கள் லிஸ்டையே அது உருவாக்கி வைத்திருக்கின்றது.
ஏற்கனவே, நெக்ஸான் இவி, டிகோர் இவி, டியாகோ இவி மற்றும் பஞ்ச் இவி ஆகிய எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் வரிசையில் விரைவில் கர்வ் இவி, சஃபாரி இவி மற்றும் ஹாரியர் இவி ஆகியவற்றை இணைக்க இருக்கின்றது.

இத்துடன், குட்டி எலெக்ட்ரிக் கார் மாடலாக அல்ட்ராஸ் இவி-யையும் அது இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. குட்டி என்றால் ரொம்ப குட்டியாக இருக்கும் நினைத்துவிட வேண்டாம். இப்போது விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் ஐசிஇ மாடலைப் போலவே இதுவும் இருக்கும். இந்த எலெக்ட்ரிக் கார் ஓர் முழு சார்ஜில் 315 கிலோமீட்டர் ரேஞ்ச் தரும் என கூறப்படுகின்றது.
இந்த சூப்பரான ரேஞ்ச் திறனுக்காக இந்த எலெக்ட்ரிக் கார் மாடலில் 25kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே டாடா மோட்டார்ஸ் வழங்க இருக்கின்றது. இதுதவிர, 35kWh பேட்டரி பேக் தேர்வையும் அது வழங்க இருக்கின்றது. இத்தகைய திறன் கொண்ட டாடா எலெக்ட்ரிக் காரே கூடிய விரைவில் இந்தியாவைக் களம்காண இருக்கின்றது. இதன் வருகைக்கு இந்தியாவின் பிரீமியம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரெனால்ட் க்விட் இவி (Renault Kwid EV): இந்தியர்களின் கவனத்தை மிகப் பெரிய ஈர்த்திருக்கும் எலெக்ட்ரிக் கார் மாடல்களில் க்விட் இவியும் ஒன்றாகும். சமீபத்தில் நிறுவனத்தின் சகோதர நிறுவனமான டாசியா, ஸ்பிரிங் இழி எனும் புதுப்பிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடலை உலக அளவில் வெளியீடு செய்தது.
இந்த எலெக்ட்ரிக் காரையே ரெனால்ட் நிறுவனம் க்விட் இவியாக மாற்றி இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. இது இந்தியாவின் பட்ஜெட் அல்லது மலிவு விலை எலெக்ட்ரிக் காராக இருக்கும் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப சற்று குறைவான ரேஞ்ச் திறனை வழங்கும் மின்சார காராகவே இதனை டாசியா வடிவமைத்திருக்கின்றது.

இது ஓர் முழு சார்ஜில் 230 கிமீ ரேஞ்சை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரேஞ்ச் விஷயத்தில் கஞ்ச தனம் காண்பிக்கப்பட்டாலும், பிரீமியம் அம்சங்களைப் பொருத்த வரை மிக மிக அதிகளவில் இந்த கார் மாடல் தாங்கி இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் கூறுகின்றன.
மாருதி சுஸுகியின் குட்டி எலெக்ட்ரிக் கார்: மாருதி சுஸுகி நிறுவனம் மின்சார வாகன பிரிவில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதே நிலையே தென்படுகின்றது. நிறுவனம் ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி கார்கள் மீது மட்டுமே அதிக ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றது. இருப்பினும், இந்தியாவின் தேவை மாறிக் கொண்டு வருவதனால் அதன் தரப்பிலும் மின்சார கார் பிளான் தற்போது போடப்பட்டு இருக்கின்றது.
நிறுவனம் இந்தியாவிற்கு குட்டியான ஹேட்ச்பேக் வகை எலெக்ட்ரிக் கார் ஒன்றை தயார் செய்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எப்போது என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த காரின் மீதான எதிர்பார்ப்பு எகிறிக் காணப்படுகின்றது.
வின்ஃபாஸ்ட் விஎஃப்3 (VinFast VF3): வியட்நாமைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்த நிறுவனம் சமீபத்திலேயே இந்தியாவில் வாகன உற்பத்தி ஆலையை கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கியது. இது தமிழகத்திலேயே எலெக்ட்ரிக் கார் ஆலையை கட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த பணிகளைத் தொடங்கிய கையோடு அது அதன் வாகனங்களுக்கான வர்த்தக உரிமையைப் பெறும் பணிகளையும் தொடங்கி இருக்கின்றது.
இதன் அடிப்படையில் நிறுவனம் ஓர் குட்டியான, மைக்ரோ எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காருக்கு பேடண்ட் பதிவைச் செய்தது. விஎஃப்3 எனும் எலெக்ட்ரிக் காருக்கே அது பதிவைச் செய்தது. மிகவும் குட்டியான தோற்றத்தில் காட்சியளிக்கும் அந்த காட்சியளிக்கும் அந்த கார் ஓர் முழு சார்ஜில் சார்ஜில் 201 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்றும் கூறப்படுகின்றது.
இதேபோல், பிரீமியம் அம்சங்களையும் மிக அதிகளவில் தாங்கி இருக்கும் என கூறப்படுகின்றது. ஆகையால், இந்த காரும் தற்போது இந்தியர்களின் எதிர்பார்ப்பை கவர்ந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் விற்பனைக்கு களமிறக்குவதற்கான முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், குட்டியான தோற்றம் கொண்ட வாகனங்களுக்கும் மிக சிறப்பான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் சிறிய ஹேட்ச்பேக் மற்றும் சிறிய எஸ்யூவி கார்களைக் களமிறக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









