காரில் உள்ள டச் ஸ்கிரீனை வீட்டிலேயே சுத்தம் செய்வது எப்படி? ரொம்ப ஈஸியா பண்ணலாம்!

கார்களில் இருக்கும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தில் உள்ள ஸ்கிரீன் ஸ்கிராட்சுகளை நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் டூத் பேஸ்ட்களை வைத்து எளிதாக நீக்கி விட முடியும். இது மட்டுமல்ல இதை ஸ்கிராச்களை நீக்க ஏராளமான வழிகள் உள்ளன. இந்த வழிகளை பற்றி தான் நாம் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

இன்று விற்பனைக்கு வரும் ஏராளமான கார்களில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் மிக முக்கிய கருவியாக இருக்கிறது. இந்த டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கார்களில் பொருத்தப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் மக்கள் இதை அதிகம் விரும்புவது தான். மக்கள் மத்தியில் அதிக கிரேஸ் இருக்கிறது.

touch screen infotainment system cleaning

இந்த வசதி கொண்ட கார்கள் இந்த வசதிக்காகவே அதிகமாக விற்பனையாகி வருகின்றன. இது இல்லை என்றால் விற்பனை மந்தமாகிவிடும். இதை பராமரிப்பது குறித்த சில டிப்ஸ்கள் மற்றும் இதில் உள்ள ஸ்கிராட்சைகள் மற்றும் அழுக்குகளை எப்படி சுலபமாக நீக்குவது என்பதை தான் இங்கே நாம் விரிவாக காணப்போகிறோம்.

டூத் பேஸ்ட்டுகளை பயன்படுத்தி எளிதாக இதில் உள்ள ஸ்கிராட்சைகளை நீக்கிவிட முடியும். இதற்கு நீங்கள் முதலில் ஒரு சாஃப்ட்டான துணியோ அல்லது பஞ்சையோ எடுத்துக்கொண்டு அதில் கொஞ்சம் டூத் பேஸ்ட்டை வைத்து அதை மெதுவாக ஸ்கிரீன் பகுதியில் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். பின்னர் ஒரு சாஃப்டான துணியை வைத்து அந்த டூத் பேசியல் அனைத்தையும் துடைத்து விட்டால் காரின் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்க்ரீன் தெளிவாக பளபளக்கும் வகையில் மாறிவிடும்.

touch screen infotainment system cleaning

ஆனால் இப்படி டூத் பேஸ்டை பயன்படுத்தும் போது நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டில் உள்ள டூத் பேஸ்ட்களை பயன்படுத்தினாலே போதுமானது. இதற்காக ஸ்பெஷலாக எந்த ஒரு டூத் பேஸ்ட்டையும் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. பெரும்பாலான டூத் பேஸ்ட்கள் இப்படியான கரைகள் மற்றும் அழுக்கு ஸ்கிராட்ச் உள்ளிட்ட அம்சங்களை நீக்கும் கெமிக்கல்கள் கொண்டதுதான்.

அடுத்த ஆப்ஷனாக பேக்கிங் பவுடர் பயன்படுத்தி டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் டிஸ்ப்ளேவில் உள்ள ஸ்கிராச்களை நீக்க முடியும். இதற்கு கொஞ்சமாக தண்ணீர் பயன்படுத்த வேண்டும். கொஞ்சம் தண்ணீரில் பேக்கிங் பவுடரை முதலில் கலந்து கொள்ள வேண்டும். இதை ஒரு பேஸ்ட் மாதிரி உருவாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு சாஃப்டான துணியை வைத்தோ அல்லது பஞ்சை வைத்தோ ஸ்கிரீனில் அப்ளை செய்ய வேண்டும்.

நாம் டூத் பேஸ்ட்டை வைத்து எப்படி செய்தோமோ அதே போல இது ஸ்கிரீனில் அப்ளை செய்து பின்னர் சாஃப்டான துணி அல்லது பஞ்சை வைத்து முழுவதுமாக துடைத்து விட வேண்டும். இப்படியாக துடைக்கும் போது மெதுவாக துடைக்க வேண்டும். மெதுவாக தொலைத்தால் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் கலந்த பேஸ்ட் உங்கள் ஸ்கிரீனில் உள்ள ஸ்கிராட்ச், அழுக்கு உள்ளிட்ட அனைத்தையும் நீக்கி ஸ்கிரீனை பளபளப்பாகிவிடும்.

இது மட்டுமல்லாமல் நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் வெஜிடேபிள் ஆயில் கொண்டும் இதை சுத்தப்படுத்த முடியும். அதற்கு நீங்கள் ஒரு சாஃப்டான துணியை வெஜிடபிள் ஆயில் உள்ளே லேசாக முக்கி எடுத்து அந்த இடத்தை வைத்து மெதுவாக ஸ்கிரீன் பகுதியை துடைக்க வேண்டும். தொடர்ந்து 10 முதல் 15 நிமிடங்கள் நீங்க துடைத்தால் அதன் பின்பு அதில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் திரண்டு விடும்.

அழுக்குகள் திரண்டதை நீங்கள் உணர்ந்த பின்பு சாப்டான துணியை எடுத்து ஸ்க்ரீன் மேலே உள்ள ஆயிலை மொத்தமாக துடைத்து எடுக்க வேண்டும் அப்படி செய்தால் ஸ்கிரீனில் உள்ள ஸ்கிராட்ச் அழுக்கு உள்ளிட்ட அனைத்தும் நீங்கி ஸ்கிரீன் பளபளப்பாகிவிடும் இதில் ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும் எப்பொழுதும் சாதாரண டெம்பரேச்சர் உள்ள ஆயுளை பயன்படுத்த வேண்டும் அதிக சூடு மற்றும் அதிக குளிர்ச்சி உள்ள ஆயுளை பயன்படுத்தக் கூடாது.

தொடர்ந்து டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டத்தை பலர் பயன்படுத்தி வருவதால் இதில் பல்வேறு விரல் ரேகை தடங்கள் காட்சிகள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இதை நீங்கள் வீட்டிலேயே சுலபமாக மேலே பயன்படுத்தி சரி செய்து கொள்ள முடியும். முறையாக பராமரித்தால் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நீண்ட நாட்கள் உழைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனத்தின் ஒவ்வொரு கருவியையும் பத்திரமாக பராமரித்தால் மட்டுமே அது நீண்ட காலம் உழைக்கும் இப்படியாக டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் என்பது காரில் உள்ள சென்சிட்டிவான பகுதியாகும். இந்தப் பகுதியை நாம் முறையாக பராமரித்தால் மட்டுமே நீண்ட காலத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 31, 2024, 7:00 [IST]
English summary
Touch screen infotainment cleaning methods
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+