மீண்டும் பழைய மாதிரி கார்களில் பட்டன் சிஸ்டம் வரப்போகுது! டச் ஸ்கிரீன் வச்சா ஸ்டார் ரேட்டிங் கிடைக்காதா?

யூரோ என்கேப் அமைப்பு கார்களில் டச் ஸ்கிரீன் கண்ட்ரோல் அல்லாமல் பிஸிக்கல் கண்ட்ரோலை அதிகப்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க உள்ளது. ஓட்டுனர்கள் டச் ஸ்கிரீன் கண்ட்ரோலால் அதிகம் கவன சிதறல் ஏற்படுவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவை எடுக்க யூரோ என்கேப் தயாராகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யூரோ என்கேப் அமைப்பு உலகம் முழுவதும் உள்ள வாகனங்களை கிராஷ் டெஸ்ட் சோதனை செய்து அதற்கு ஸ்டார் ரேட்டிங்கை வழங்கும் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் பாரத் என்கேப் துவங்குவதற்கு முன்னர் யூரோ என்கேப் தான் இந்திய மக்கள் அதிகம் நம்பி வந்தனர். இந்நிலையில் யூரோ என்கேப் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

Touchscreens might increase car accidents

வரும் 2026-ம் ஆண்டு யூரோ என்கேப் தனது சோதனைகள் முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி யூரோ என்கேப் அமைப்பின் துணை அமைப்பாளர் ஏஆர்எஸ் டெக்னிக்கா என்ற நிறுவனம் ஆட்டோமொபைல்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை சோதனை செய்யும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த ஆய்வின் முடிவில் வாகன தயாரிப்பாளர்கள் தற்போது தங்கள் வாகனங்களில் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை மிகப் பிரதானமாக வைத்து தயாரிக்கிறார்கள். ஆனால் இது வாகன ஓட்டிகளுக்கு கவன சிதறலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2026-ம் ஆண்டு வரப்போகும் மாற்றத்தில் கார்களில் பாதுகாப்பு ரேட்டிங்கை வழங்குவதில் பிஸிக்கல் பட்டன் உள்ள கார்களுக்கு அதிக ரேட்டிங் கிடைக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்படும் என தெரிகிறது.

Touchscreens might increase car accidents

டச் ஸ்கிரீன் கண்ட்ரோல்களை வைப்பதன் மூலம் டிரைவர்களுக்கு கவன சிதறல் அபாயம் இருக்கிறது. அவர்கள் வாகனம் ஓட்டும் போது டச் ஸ்கிரீன் சிஸ்டத்தில் உள்ள கண்ட்ரோலை பார்ப்பதற்காக நீண்ட நேரம் கவன சிதறல்களில் ஈடுபட வேண்டியது இருக்கிறது. இதனால் சாலையிலிருந்து அவர்கள் கவனம் வேறு திசையில் திரும்புவதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது.

இதனால் கிராஷ் டெஸ்ட் சோதனையின் போது டச் கண்ட்ரோல்கள் எந்த விஷயத்திற்கெல்லாம் இருக்கிறது எந்த விஷயத்திற்கெல்லாம் பிஸிக்கல் கண்ட்ரோல் இருக்கிறது என ஆய்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்தால் போல் ரேட்டிங் மாற்றப்படும் என தெரிகிறது. தற்போது என்னதான் டச் ஸ்கிரீனில் பயனர்களுக்கான சுலபமான ஆப்ஷன்கள் வந்து விட்டாலும் கவன சிதறல்களை தவிர்க்க முடியவில்லை.

Touchscreens might increase car accidents

இதனால் யூரோ என்கேப் நிறுவனம் தனது கிராஸ்ஷ் டெஸ்ட் சோதனையின் போது இதை தவிர்ப்பதற்கான விதிமுறைகளை வகுக்க திட்டமிட்டுள்ளது யூரோ என்கேப் என்பது அரசின் நிறுவனம் இல்லை என்பதால் கட்டாயம் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் டச் ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டத்தை தவிர்ப்பார்கள் என சொல்லிவிட முடியாது. அதே நேரம் யூரோ என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற இது முக்கியமான மாற்றமாக இருக்கிறது.

இதனால் இந்த விதிமுறை அமலுக்கு வரும் பட்சத்தில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்களில் உள்ள டச் ஸ்கிரீனை மாற்றிவிட்டு அதிக பிஸிக்கல் கண்ட்ரோல் பட்டன் கொண்ட ஸ்கிரீன்களை பொருத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பழைய நிலைமைக்கு கார்கள் எல்லாம் திரும்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கான ஆய்வுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக நடக்கவில்லை, என்றாலும் விரைவில் இதற்கான முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய சைஸிலான டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்தை வழங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இது மாற்றப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. காரில் ஸ்கிரீன்கள் மிகச் சிறியதாகவும் அதிக பிஸிக்கல் பட்டன் உடன் கூடியதாகவும் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. இதை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது கவனத்தில் கொண்டுள்ளனர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று கார்களில் உள்ள ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. இது காரின் விற்பனைக்கே மிக முக்கியமான காரணமாக இருக்கும் நிலையில் இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களுக்கு முக்கியமா? அல்லது பிஸிக்கல் பட்டன் கொண்ட சிஸ்டம் மக்களுக்கு முக்கியமா? எது தேவை என்பதை நீங்கள் கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 15:03 [IST]
English summary
Touchscreens car accidents physical buttons safety crash test points
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X