ஓட்டுவதற்கு முன்பே எங்களை கவர்ந்திடுச்சு... டொயோட்டா பார்த்து பார்த்து உருவாக்கியுள்ள ஹைப்ரீட் கார்!!
டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் கேம்ரி (Camry) காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது டொயோட்டாவின் ஹைப்ரீட் செடான் (Hybrid Sedan) ரக கார் ஆகும். அதாவது, பெட்ரோல் என்ஜினை கொண்ட இந்த காரை வெறும் எலக்ட்ரிக் (Electric) பவரில் மட்டும் கூட இயக்க முடியும். டொயோட்டா கேம்ரி நீண்ட வருடங்களாகவே இவ்வாறான ஹைப்ரீட் காராக தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் கேம்ரி கார் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படும், பின்னர் சில ஆண்டுகள் கழித்து விற்பனை நிறுத்திக் கொள்ளப்படும். இதே வழக்கமாக தான் உள்ளது.
அந்த வகையில் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி 2025 டொயோட்டா கேம்ரி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய கேம்ரி காரை பெங்களூரில் நாங்கள் ஓட்டி பார்த்தோம். அப்போது எங்களுக்கு கிடைக்க பெற்ற அனுபவங்களை ரிவியூவாக கீழே உள்ள வீடியோவில் வெளியிட்டுள்ளோம்.
புதிய டொயோட்டா கேம்ரி கார் ரூ.48 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பு விற்பனையில் இருந்த கேம்ரி காரை காட்டிலும் இது ரூ.1.83 லட்சம் அதிகமாகும். இந்த மேம்படுத்தப்பட்ட கேம்ரி கார் வெளிநாட்டு சந்தைகளில் சில வருடங்களுக்கு முன்பே விற்பனையை துவங்கிவிட்டது. இந்தியாவில் இப்போதுதான் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டொயோட்டா ஹைப்ரீட் காரின் டெலிவிரிகள் (Deliveries) மிக விரைவில் துவங்கப்பட உள்ளன.

டொயோட்டாவின் TNGA-K பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கேம்ரி ஹைப்ரீட் காரில் 18-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய கேம்ரி காரில் வழக்கம்போல் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. என்றாலும், காரின் ஒட்டுமொத்த ஹைப்ரீட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முன்பு இருந்த கேம்ரி ஹைப்ரீட் காரை காட்டிலும் புதிய மாடல் 12 பிஎச்பி கூடுதல் ஆற்றலை பெறக்கூடியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








