சொகுசு கார் மாதிரியான புது காரை விற்பனைக்கு கொண்டு வருதா டொயோட்டா!.. மாருதியின் எந்த காப்பி மாடலோ இது!..

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலவற்றை ரீ-பேட்ஜ் செய்து டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதேபோல், டொயோட்டா-வின் தயாரிப்புகள் சிலவற்றை மாருதி சுஸுகியும் ரீ-பேட்ஜ் அதன் பெயரின்கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், டொயோட்டாவின் புகழ்பெற்ற கார் மாடலான இன்னோவா ஹைகிராஸ் மாருதியின் லோகோவிலும், மாருதியின் தயாரிப்புகளான பலினோ (Baleno), கிளான்ஸா (Glanza) எனும் பெயரிலும், எர்டிகா (Ertiga) கார் மாடல் ரூமியன் (Rumion) என்கிற பெயரிலும் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே டொயோட்டா நிறுவனம் சீக்கிரமே புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனமும் டீசர் படம் ஒன்றை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இந்த நிலைியலேயே இது நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக இருக்குமா? அல்லது மாருதி சுஸுகியின் ரீ-பேட்ஜ் தயாரிப்பாக இருக்குமா? என்கிற சந்தேகம் தற்போது எழும்பியிருக்கின்றது. இதற்கான பதிலையே இங்கே பார்க்க இருக்கின்றோம்.

Toyota camry launching soon

டொயோட்டா வெளியிட்டு இருக்கும் டீசர் படத்தை வைத்து பார்க்கையில் அது ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல் அல்ல என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், தற்போது வெளியாகி இருக்கும் டீசர் படம் நிறுவனத்தின் புகழ்பெற்ற கேம்ரி (Camry) உடன் ஒத்துப்போகின்றது. ஆகையால், இந்தியாவில் டொயோட்டா அதன் கேம்ரி கார் மாடலையே விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த காரை நிறுவனம் வருகின்ற புதன்கிழமை (டிசம்பர் 11) அன்று அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல் டொயோட்டா கார் பிரியர்கள் மற்றும் சொகுசு அம்சங்களை அதிகம் விரும்பும் செடான் கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

உலக அளவில் கார் காதலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ஓர் கார் மாடலே டொயோட்டா கேம்ரி ஆகும். இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது டொயோட்டா. புதிய அலங்கார வேலை, அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த உட்பக்கம் மற்றும் புதிய தொழில்நுட்பம்சங்கள் ஆகியவற்றைத் தாங்கிய காராகவே புதிய தலைமுறை டொயோட்டா கேம்ரி தயாராகி இருக்கின்றது.

மிக முக்கியமாக பயணிகளைக் கவரக் கூடிய அம்சங்கள் பலவற்றை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், எவ்வளவு தூரம் பயணித்தாலும் களைப்பை வழங்காமல், சுவாரஷ்யமான ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய சிறப்பம்சங்கள் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், இரண்டு டிஜிட்டல் திரை, இருக்கைகளுக்கு பின்னால் திரைகள், சி டைப் சார்ஜிங் போர்ட் மற்றும் விரைந்து கேபினை குளிர்விக்கும் வசதிக் கொண்ட ஏசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, மைலேஜ் பிரியர்களைக் கவரும் விதமாக இந்த காரில் ஹைபிரிட் டெக்னாலஜியையும் சேர்த்திருக்கின்றது. இதன் வாயிலாக கேம்ரி 19 கிமீ வரையில் ஒரு லிட்டருக்கு மைலேஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனேயே கேம்ரி தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதே எஞ்சினே புதிய ஒன்பதாம் தலைமுறை கேம்ரியிலும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது அதிகபட்சமாக 222 பிஎச்பி பவரை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. மேலும், இந்த காரில் லெவல் 2 வகை அடாஸ் அம்சத்தை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆகையால், இந்த கார் அதிக ஆடம்பர அம்சங்களுக்காக மட்டும் அல்ல அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கியிருக்கின்ற காரணத்திற்காகவும் நல்ல விற்பனை வரவேற்பை இந்தியாவில் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல் கவர்ச்சியான தோற்றத்திற்காகவும் இந்த கார் இந்தியர்களைக் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஸ்கோடா சூப்பர்ப் மற்றும் பிஒய்டி சீல் (எலெக்ட்ரிக் கார்) ஆகிய செடான் ரக கார்களுக்கு போட்டியாக அமையும். மைலேஜ் தருவதிலும், சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதற்கும் பெயர்போன தயாரிப்பாக இது இருப்பதால் சில சொகுசு செடான் கார்களுக்கும் இது டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 9, 2024, 11:46 [IST]
English summary
Toyota camry set to launch in india with new features on 11 december
மேலும்... #toyota #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+