இந்த மாதிரி தோற்றத்தில் ஃபார்ச்சூனர் காரை யாரும் பார்த்திருக்கவே மாட்டீங்க.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள புகழ்பெற்ற கார் மாடல்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner)-ம் ஒன்றாகும். அரசியல்வாதிகள் மற்றும் சில பெரும் செல்வந்தர்களின் பிரியமான கார் மாடலாகவும் டொயோட்டா ஃபார்ச்சூனர் காட்சியளிக்கின்றது. இதன் விலை சற்று அதிகம் என்றாலும், மக்கள் பலர் இந்த கார் மாடலை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த காரின் மீதுள்ள நம்பகத் தன்மையே இதற்கான முக்கிய காரணம் ஆகும். நீடித்து உழைக்கும் திறன் மற்றும் மிகவும் முரட்டுத் தனமான தோற்றத்திற்கு புகழ்பெற்றதாகவும் இந்த கார் மாடல் காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலே தற்போது முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Toyota fortuner modified into army vehicle

இதுகுறித்த படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகிய நிலையில் தற்போது அதுகுறித்த வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. மேலும், இந்த விநோத தோற்றம் கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எதற்காக இப்படி மாற்றப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகி இருக்கின்றன. வாருங்கள் இதுகுறித்து விரிவாகக் காணலாம்.

விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனரைக் காட்டிலும் முற்றிலும் விநோத லுக்கில் இருக்கும் இந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் ராணுவ பயன்பாட்டிற்காக தயார் செய்யப்பட்டவை என கூறப்படுகின்றது. ஆனால், எந்த நாட்டு ராணுவத்திற்கானது என்பது உறுதிச் செய்யப்படவில்லை. இந்திய ராணுவத்திற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என்று ஒரு பக்கம் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Toyota fortuner modified

இதன் பச்சை நிறமும் இந்த வாகனம் ஆர்மிக்கானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இதுதவிர, வீரர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாகவும் மற்றும் எதிரிகளின் இலக்கை தாக்குவதற்கு ஏற்பவும் இந்த வாகனத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனாலேயே வழக்கமான ஃபார்ச்சூனரிடம் இருந்து பலமடங்கு இந்த பச்சை நிற ஃபார்ச்சூனர்கள் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.

ஃபார்ச்சூனர் கார் மீது பெரிய ஆர்ச் போன்ற அமைப்பும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது வீரர்கள் எதிரிகளின் நடமாட்டத்தை வேவு பார்க்க அல்லது ஆன்டென்னாவாக செயல்படுவதற்கான அமைப்பாக இருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு மாற்றங்களை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.

Toyota fortuner modified into army vehicle interior

அந்தவகையில், மேற்கூரை மேலே சுலபமாக ஏறி, இறங்குவதற்கு ஏதுவாக ஓர் ஏணி இந்த காரின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், காரின் உட்பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், பின் பக்கத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், முன் பக்கம் வழக்கமான ஃபார்ச்சூனரைப் போலவே அது உள்ளது.

பின் பக்கத்தில், அதாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகள் முழுவதுமாக அகற்றப்பட்டு இருக்கின்றன. இவை இருந்த இடத்தில் தொலை தொடர்பு செய்வதற்கான கருவிகள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், இதில் அமர்ந்து வேலை செய்வதற்கு என தனி இருக்கைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Army vehicle interior

இந்த வீடியோவில் பூட் பகுதியின் காட்சிகள் இடம் பெறவில்லை. அதேவேளையில், அங்கும் சில முக்கிய கருவிகள் இடம் பெற்றிருக்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமாதிரியான மாற்றங்கள் கொண்ட காரே வெளியூர்களுக்கு கன்டெய்னர் லாரி வாயிலாக ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமின்றி இன்னும் சில போர் வாகனங்களும் அதனுடன் டிரக்குகளில் பயணிப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.

இவற்றை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ரிப்பேர் ஆனதால், சாலையோரத்தில் இருந்த மெக்கானிக் ஷாப்பில் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. அப்போதே கன்டெய்னருக்குள் இருந்த அனைத்து வாகனங்களும் வெளியேற்றப்பட்டு இருக்கின்றன. அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Toyota fortuner rear

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய அரசியல்வாதிகள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக ஃபார்ச்சூனர் எஸ்யூவி இருக்கின்றது. கரடு-முரடான சாலையைக்கூட இதனால் சமாளிக்க முடியும். இதனால்தான் பலர் இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஏன் சில முன்னணி நடிகர்களே இந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 5:00 [IST]
English summary
Toyota fortuner converted into army vehicle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X