ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஃபார்ச்சூனர் (Fortuner)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே புதிய பதிப்பு ஒன்றை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருக்கின்றது. அந்த பதிப்பு ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் (Toyota Fortuner Leader Edition) எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இது ஓர் சிறப்பு ஆகும். பெயரில் மட்டுமில்லைங்க சிறப்பம் விஷயத்திலும் இந்த கார் ஃபார்ச்சூனரின் மற்ற வேரியண்டுகள் அனைத்திற்கும் தலைவன் என கூறும் அளவிற்கே உருவாக்கப்பட்டு உள்ளது. ஃபார்ச்சூனர் டீசல் 4X2 மாடலை தழுவியே இந்த சிறப்பு பதிப்பு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Toyota fortuner leader edition

நிறுவனம் இந்த சிறப்பு பதிப்பை ஃபார்ச்சூனர் கார் மாடலின் விற்பனை புதிய உச்சத்தை எட்டியதன் விளைவாகவே விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபார்ச்சூனர் கார் விற்பனை 2.50 லட்சம் யூனிட் விற்பனை எனும் சாதனையையே இந்தியாவில் படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டொயோட்டா நிறுவனம் ஃபார்ச்சூனர் காரை 2009 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க, விற்பனைக்கு வந்து 15 ஆண்டுகளே ஆகின்ற நிலையில் அதற்குள்ளாக அது 2.50 லட்சம் யூனிட் விற்பனை எண்ணிக்கையை எட்டியிருக்கின்றது. ஆகையால், இந்தியர்களின் ஃபேவரிட் எஸ்யூவி கார் மாடல்களில் ஃபார்ச்சூனரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக ஃபார்ச்சூனர் லீடர் எடிசன் இந்தியா கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இது மற்ற ஃபார்ச்சூனரிடமிருந்து பலநிலைகளில் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. உதாரணமாக வெளிப்புறத் தோற்றம் வழக்கமான ஃபார்ச்சூனர் எஸ்யூவி-யை க் காட்டிலும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.

இதற்கு அதிக அழகான பாகங்கள் மற்றும் உடல் கூறுகள் இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேபோல் சிறப்பு மற்றும் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் சிலவும் இதில் கூடுதல் சேர்க்கப்பட்டு இருக்கும். அந்தவகையில், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், தானாக மடக்கிக் கொள்ளும் வசதிக் கொண்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் மற்றும் ஒயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்டவையும் அதில் அடங்கும்.

இதன் வெளிப்புறத்தை கூடுதல் அழகானதாகக் காண்பிக்கும் விதமாக கருப்பு நிற அலாய் வீல்கள், மூன்று விதமான வண்ண தேர்வுகளை இந்த காரில் டொயோட்டா வழங்குகின்றது. அந்தவகையில், சூப்பர் ஒயிட் (Super White), பிளாட்டின் பியர்ல் ஒயிட் (Platinum Pearl White) மற்றும் சில்வர் மெட்டலி (Silver Metalli) ஆகிய நிற தேர்வுகளிலேயே இந்த சிறப்பு பதிப்பை வாங்கிக் கொள்ள முடியும்.

இந்த அனைத்து நிற தேர்வுகளிலும் கான்ட்ராஸ்ட் நிறமாக கருப்பு சேர்க்கப்பட்டு இருக்கும். இது வீல், பம்பர், கிரில், மற்றும் ரூஃப் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த சிறப்பு பதிப்பின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதுபற்றிய தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்போது விற்பனையில் இருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனரைக் காட்டிலும் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே அது அதிக விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், எஞ்சினில் எந்த மாற்றும் வழங்கப்பட்டு இருக்காது. வழக்கமான அதே 2.8 லிட்டர் டீசல் மோட்டாரே இதில் இடம் பெற்றிருக்கின்றது.

இது அதிகபட்சமாக 204 எச்பி பவரையும், 500 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் சிறப்பு பதிப்பு ஃபார்ச்சூனரில் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. வழக்கமான ஃபார்ச்சூனர் காருக்கு கிடைப்பதைப் போலவே இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அரசியல் பெரும் புள்ளிகள், தொழிலதிபர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் என அனைத்து விதமான முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாகவே 15 ஆண்டுகளுக்குள்ளாக டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்தியாவில் 2.50 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 19:04 [IST]
English summary
Toyota fortuner leader edition revealed in india here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+