31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! மாருதி கூட சேந்து பெரிய சம்பவத்த பண்ணீட்டாங்க!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதாவது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில், பல்வேறு கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் டொயோட்டா க்ளான்சா. இந்த காரின் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 4,319 க்ளான்சா கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 3,365 ஆக மட்டுமே இருந்தது. இது 28 சதவீத வளர்ச்சி ஆகும்.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை வெறும் 6.86 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
டொயோட்டா க்ளான்சா கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல்/மேனுவல் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் எனவும், பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல்கள் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.

மறுபக்கம் சிஎன்ஜி/மேனுவல் மாடல்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி இன்ஜின் உடன் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் டொயோட்டா க்ளான்சா பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் ஏராளமான அதிநவீன வசதிகளும் (Features) வழங்கப்படுகின்றன. இதில், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 6 ஏர்பேக்குகள், டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் வசதியுடன் வழங்கப்படும் ஸ்டியரிங் வீல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுடன், டொயோட்டா க்ளான்சா போட்டியிட்டு வருகிறது. மேற்கண்ட கார்களுக்கு, டொயோட்டா க்ளான்சா ஒரு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக திகழ்கிறது.
மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில், வெகு சமீபத்தில் ஒரு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அது டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் (Toyota Urban Cruiser Taisor) ஆகும். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) காரின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான், அதிகாரப்பூர்வமாக விலைகள் அறிவிக்கப்பட்டு, இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மாருதி சுஸுகி-டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில், வரும் காலங்களில் இன்னும் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.


Click it and Unblock the Notifications








